காசி கோவில் வளாகம் விரிவாக்க திட்டம்

 

இந்தத் திட்ட்த்திற்கு மோடி அவர்கள் 08 – 03 – 2019 அன்று தான் காசியில் அடிக்கல் நாட்டினார்.

இது கொரோனா கால கட்டமாகும். இருப்பினும் மோடியின் நேரடி மேற்பார்வையில், யோகி அதித்யனாரின் களப்பளியால் 33 மாதங்களுக்குள் பூர்த்தி ஆகியதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. வேத காலத்தில் தேவர்களுக்கும், கடவுளர்களுக்கும் கட்டிடங்கள் கட்டுபவர் தான் விஸ்வகர்மா. அந்த விஸ்வகர்மாவே மறுஜென்மம் எடுத்து மோடியோகி ரூபத்தில் செயல்பட்ட மாதிரி இது இருந்தது என்று சொல்வது சாலப்பொருந்தும்.

பல இன்னல்களையும் எதிர்கொண்டு எந்தவிதமான வில்லங்கமோ, கோர்ட் கேசோ இன்றி 300 வீடுகளுக்கு மேல் விலைக்கு வாங்கி, அவைகளை இடிக்கும் போது கண்டுபிடிக்கப்பட்ட 40 அற்புதமான கலை அம்சங்களுடன் விளங்கிய கோயில்களைக் கண்டு வியந்துஅவைகளையும் பழைமை மாறாமல், புதிப்பித்து தகுந்த இடத்தில் அமைக்கும் பணி என்று திட்டம் இன்னும் விரிவானதாகப் போய் விட்டது. மேலும் பல வசதிகளை ஏற்படுத்த 23 புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டன.

காசி மா நகரத்தின் பல புராதனக் கட்டிடங்கள் புதுப் பொலிவுடன் புதிப்பிக்கப்பட்டு மின் விளக்குகளால் ஜெலிக்கச் செய்தனர். காசி ரயில் நிலையம் பல வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டன.

5 லட்சம் லட்டுகாசி பற்றிய விபரங்கள் அடங்கிய புத்தகம் காசி மக்களுக்கு அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டது. 12 ஜோதி லிங்க்க் கோயிலில் ஒன்றான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மோடி பூஜை செய்யும் அதே வேளையில் மற்ற 11 ஜோதிர் லிங்கக் கோயில்களிலும் பல மத்திய அரசு மந்திரிகள்பிஜேபி மாநில அரசு முதலமைச்சர்கள் ஆகியவர்களால் பூஜை செய்தது ஒரு சிறப்பு அம்சமாகும்.

இவைகளை போட்டோவில் பார்த்து ரசிக்க இங்கே பதிவு செய்துள்ளோம்.

இது வாய்மை 177 – டிசம்பர் 2021 இதழுடன் சிறப்பு இணைப்பாக அளிக்கப்படுகிறது. காசி விஸ்வநாதரின் அருள் உங்கள் அனைவருக்கும் கிட்ட நாங்கள் மனமாரப் பிரார்த்திக்கிறோம்.

என்றும் உங்கள் பணியில்,

எஸ். சங்கரன்        வத்ஸலா சங்கரன்

ஆசிரியர்             உதவி ஆசிரியை

16  -  12  -  2021



காசி வளாக விரிவாக்கப் பணியின் முதற் கட்டம்:

படங்கள்




















 






























Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017