காசி விஸ்வநாதர் ஆலயம் - கடந்த கால சரித்திர கசப்பான உண்மைகள்
விஸ்வநாதர் என்பதில் விஸ்வ என்றால் பிரபஞ்சம், நாதர் என்றால் ஆளுபவர் என்று பொருள் கொண்டிருப்பதாலும், காசி விஸ்வநாதர் 12 ஜோதிர் லிங்கத்தில் ஒன்று என்பதும் அந்தக் கோவிலின் சிறப்பைக் காட்டும்.
சுதந்திரம் பெற்று கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்துக்களுக்கு நியாயம் வழங்குவதில் சிறுபான்மையினரின் ஓட்டு வங்கி அரசியலால் தயக்கம் காட்டி உள்ளார்கள்.
இந்துக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பிய ஒரே கட்சி என்றால் அது பிஜேபி ஒன்று தான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
அதுவும் மோடி தலைமை ஏற்ற பிறகு இந்துக்களின் பேராதரவால் பிரதம மந்திரி ஆனதிலிருந்து இந்துக்களுக்கும், ஹிந்து சமயத்திற்கும் ஒரு புத்துணர்வு உண்டாகி அதன் மூலம் பாரத தேசத்தின் நேர்மையும், வலிமையும், சுயசார்பு நிலையும் மோடியின் ஏழே ஆண்டுகளில் ஊர்ஜிதமாகி பாரதமாதாவின் புகழ் உலக அரங்கில் கொடி கட்டிப் பறக்கும் அற்புதத்தையும் நாம் காண்கிறோம்.
இந்த பொன்னான நேரத்தில் காசி விஸ்வநாதர் கோவில் பற்றிய சில சரித்திர உண்மைகளை அறிவது அவசியமாகிறது.
காசி விஸ்வநாத ஆலையம் முஸ்லீம் மூர்க்க அரசரகள் பலரால் இடிக்கப்பட்டு அந்த ஆலையமும் அவ்வப்போது மீண்டும் எழுந்துள்ளது.
இறுதியாக 1669 ஆண்டு காசி விஸ்வநாதர் ஆலயம் அவரங்கசீப்பால் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஒரு மசூதி கட்டினான். முன்பெல்லாம் முஸ்லீம் அரசர்கள் கோயில்களை இடித்து அந்த இடுபாடுகளை தாங்கள் கட்டும் மசூதிகள், அரண்மனைகள் ஆகியவைகளில் பயன்படுத்தி உள்ளார்கள். கோயில் நகைகளையும், விக்கிரஹங்களையும் கபளீகரம் செய்துள்ளார்கள். இந்த விவரங்களை முஸ்லீம் மன்னர்களின் வரலாற்றில் அவர்களே பெருமையாக எழுதி வைத்துச் சென்றுள்ளனர்.
அவரப்கசீப் காசியில் விஸ்வநாதர் ஆலையத்தை ஒட்டி கட்டப்பட்ட மசூதிக்குப் பெயர் தான் ‘ஞானவாபி’ என்று பெயர். ஞானம் + வாபி – என்றால் ஞானம் + கிணறு என்று அர்த்தம். அதாவது ஞானக்கிணறு. இந்தப் பெயரே அராபிய முஸ்லீம்களுக்குச் சம்பந்தமே இல்லாத சொல் என்பது வெளிப்படை.
இந்த ஞானக்கிணறு கோயிலின் வடக்கு திசையில் உள்ளது. முஸ்லீம்கள் கோவிலை இடிக்கும் போது, காசி நாதரைப் பூஜை செய்யும் தலைமை அர்ச்சகர் அந்த மூல காசி விஸ்வநாதரின் சிலையை அந்த ஞானக்கிணற்றில் ஒளித்து வைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் அந்த கோவில் வளாகத்தில் ஹிந்துக்களால் துதிக்கப்படும் ஒரு அரச மரம் ஒன்றும் இருக்கிறது.
கீழே பிரசுரமாகி
உள்ள படத்தைப் பார்த்தாலே மசூதியின் ஒரு பக்கச் சுவர் கோயில் சுவராக இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். மேலும் இடிக்கப்பட்ட கோயில் சுவரில் இருக்கும் கலைச் சிற்பங்களும் இன்றும் அப்படியே காட்சி அளிக்கின்றது.
1991 ஆண்டு வர்ணாசி கோர்ட்டில் ஸ்வம்பு ஜோதிர்லிங்க பகவான் விஸ்வநாதர் ஸ்வாமி பெயரில் இப்போது மசூதி இருக்கும் ஞானவாபி வளாகமும் கோவிலைச் சேர்ந்தது என்றும், அந்த இடம் விஸ்வநாதருக்குச் சொந்தமாக்கி, மசூதி இடிக்கப்பட்டு, கோவிலுக்குச் சொந்தமாக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளனர்.
தற்போது ஞானவாபி மசூதி அஞ்சுமான் இன்டெசாமியா மஜ்ஜித் கமிட்டியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் 1998- ஆண்டு, வர்ணாசி கோர்ட்டுக்கு இந்தக் கேசை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்று வாதாடி, 22 வருடங்களுக்குப்
பிறகு இப்போது தான் கீழ்க்கோர்ட்டான வர்ணாசி கோர்ட்டிற்கு விசாரிக்கும் அதிகாரத்தை நிறுத்தி வைத்துள்ளது.
டிசம்பர் 2019 ஆண்டு, ராஸ்டோகி என்பவர் ஸ்வாமி விஸ்வநாதர் சார்பாக தொல்பொருள் ஆய்வை ஞானவாபி மசூதியில் மேற்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பிக்க ‘இதை அனுமதிக்க்க் கூடாது’ என்ற அஞ்சுமான் எதிர்தரப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, 5 பேர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது அறிக்கை இன்னும் வெளிவரவில்லை.
உள்ளங்கை நெல்லிக்கனி போல் நேரில் ஞானவாபி மசூதியைப் பார்த்தாலே அந்த மசூதி காசி விஸ்வநாதர் ஆலையத்தை இடித்துத் தான் கட்டப்பட்டது என்பதை நம்புவார்கள்.
இப்போது அந்த இடம் ராணுவ வீர்ர்களின் கண்காணிப்பில் இருக்கிறது.
இந்த கோர்ட் கேஸ்களை எல்லாம் தாண்டி, ஞானவாபி மசூதிக் கமிட்டி காசி விஸ்வநாதர் கோவில் தர்மகர்த்தாவிடம் 1700 சதுர அடி நிலத்தை – மசூதியை தாண்டி உள்ள வக் போர்டின் நிலத்தை, கோவிலின் 1000 சதுர அடி நிலத்தைப் பெற்றுக் கொண்டு கொடுத்துள்ளனர் என்டிது ஒரு நற் செய்தி.
இந்தியாவின் பல இடங்களில் உள்ள கோயில்கள் முஸ்லீம் மன்னர்களால் இடிக்கப்பட்டு இந்துக்கள் பல துன்பங்களையும், கொலை – கற்பழிபு – சூரையாடல் என்று சொல்லணாத் துன்பங்களை அனுபவித்துள்ளனர். இருப்பினும் அவைகளை எல்லாம் மறந்து பல நூற்றாண்டுகளாக – இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே, முஸ்லீம்களிடம் வேண்டியது மூன்றே ஹிந்துக்களின் புனித தலங்களைத் தான்: ஒன்று, அயோத்தியா, இரண்டு காசி விஸ்வநாதர் ஆலயம், மூன்று மதுரா.
முஸ்லீம் மத குருமார்கள் பெரிய மனசு பண்ணி இந்த ஹிந்துக்களின் மீதி உள்ள இரண்டு வேண்டுகோளை ஏற்று, இந்தியாவின் முன்னேற்றத்தில் முழு மனதுடன் பங்கு கொண்டு ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டும்.
நல்ல மனசு படைத்தவர்கள் முஸ்லீம்கள் நினைத்தால் இது நடக்கும்.
Comments