ஷங்கர் கிருஷ்ணன் மத்திய பிரதேச தூர்தர்ஷனில் பேட்டி
8-ம் தேதி டிசம்பர் மாதம் 2021 என்பது ஷங்கர் கிருஷ்ணனின் வாழ்வில் ஒரு மறக்கமுடியாத நாளாகும். அன்று தான் மத்திய பிரதேச தூர்ஷனில் அவரது நேரடிப் பேட்டி 4.30 மாலையில் ஒளிபரப்பாகி வெளிவந்தது.
ஷங்கர் கிருஷ்ணன் வாய்மை ஆசிரியரின் அக்கா கோமதியின் மூத்த பையன். கல்லூரியில் பட்டம் பெற்று பேங்க் ஆப் இந்தியாவின் போபாலில் பல ஆண்டுகளாகப் பதவி வகித்து, சமீபத்தில் தான் ஒய்வு பெற்றார். ஓய்வு பெற இருக்கும் கடைசி ஐந்து ஆண்டுகளில் போபால் பாங்க் ஆப் இந்தியாவின் ஆபீசர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்து தமது திறமையை நன்கு வெளிக்காட்டி உள்ளார். அவரது பேச்சுத் திறமையாலும், விளக்கும் பாணியாலும், கேள்வி கேட்பவர்களுக்குப் பொறுமையாகவும், நேர்த்தியாகவும், நேர்மையாகவும், புரியும் படிவிளக்கமாகவும் சொல்லும் திறமையால் அவர் ஓய்வு பெற்றும், அவர் வங்கித் தேர்வு எழுதும் பலருக்கும் பாடம் எடுக்க அவர் இப்போது ஓய்வில்லாமல் பணியாற்றுகிறார். இதுவே அவரது திறமைக்குச் சான்றாகும். ஷங்கர் கிருஷ்ணன் வாய்மை – இ-டச் என்ற இரு இதழ்களுக்கும் தொடக்க காலத்திருந்தே தொடர்ந்து விஷய தானங்கள் அளிப்பதை அன்பர்கள் அறிவார்கள்.
தூர்தர்ஷன் பேட்டிக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு: வங்கியில் வேலை வாய்ப்பும், வங்கி வேலையில் சேர தயார் செய்தலும்.
வங்கி என்றால் என்ன, வங்கியில் வேலை வாய்ப்புகளின் விபரங்கள், வேலையில் பதவி உயர்வு, வங்கி ஊதியம், வங்கியில் சேர்ந்தவர்கள் ஏன் பதவி விலகாமல் தொடர்கிறார்கள், சேர்ந்த பிறகு வங்கியில் தேர்வாக வேண்டிய பரிட்சைகள் என்ற பல கேள்விகளுக்கு சளைக்காமல் அதே சமயத்தில் தெளிவாக விளக்கியதைக் கேட்பவர்கள் ‘ஓ, ஒரு பெரிய பல்கழகப் பேராசிரியர் போல் அற்புதமாகப் பேட்டி கொடுக்கிறாராரே !’ என்று தான் வியந்திருப்பார்கள்.
ஓரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதை ஒட்டி பேட்டியில் ஷங்கர் கிருஷ்ணன் விளக்கிய இந்த ஒன்றே அதற்குச் சான்றாகும்:
‘வங்கி என்பது இப்போது 1.70,000 கிளைகளுடன், 2,20,000 ஏ.டி.எம். என்று இந்தியா பூராவும் பரவி அமைந்துள்ளது.
சிறுவயதில் நாம் டாக்டர், இன்ஜினியர், டிராஃபிக் போலீஸ், பைலட் என்பவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து, அவர்களின் நேர்த்தியான சீருடையைப் பார்த்து நாமும் அவர்களைப் போல் ஆக வேண்டும் என்று விரும்பி இருப்போம். ஆனால் சிறுவர்களான நாம் வங்கிக்குச் சென்று அங்கு வேலை செய்பவர்களைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. படித்து முடித்த பிறகு வங்கிச் சென்று பார்த்த்தும் ‘ஆஹா, இது ஒரு அற்புதமான ஒயிட் காலர் ஜாப்’ என்று வங்கி வேலையில் ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். வங்கியில் வேலை செய்வதால் பலருக்குக் கடன், வாடிக்கையாளரின் கணக்குகளைப் பராமரித்தல், லாக்கர் வசதிகள் என்று வாடிக்கையாளருக்கு உதவி இந்திய பொருளாதாரச் சேவையில் வங்கிகளின் முக்கிய பங்கினை அறியும் வாய்ப்பு கிட்டுகிறது.’
Comments