தில்லை நடராஜர் ஆருத்ரா தரிசனம் – 21 – 12 – 2021 – செய்வாய்க்கிழமை
சிதம்பரத்தில் மார்கழி திருவாதிரை விழா 11ல் கொடியேற்றம் - 19ல் திருத்தேரோட்டம், 21ல் ஆருத்ரா தரிசனம் என்று சிதம்பரம் நடராஜர் ஆலயம் திருவிழாக்கோலம் கொண்டு திகழப் போகிறது.
சிவபெருமானின் பஞ்சசபையில்
பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும்
போற்றப்படுகிறது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இந்த கோயிலில் ஆனி மாதம் ஆனி
திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும்
சிறப்பு வாய்ந்தது.
மார்கழி திருவாதிரை நாளில்
சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி
முனிவருக்கு காட்டி அருளினார். ஈசன் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளிய
தினமே ஆருத்ரா தரிசன நாள் ஆகும்.
திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், சகல செளப்பாக்கியங்களும் கிட்டும். திருவாதிரை திருநாளில் நடைபெறும்
ஆருத்ரா தரிசனத்தின் போது தில்லை நடராஜருக்கு, களி
நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
‘திருவாதிரையில் ஒரு வாய்க்களி' என்பது
சொல் வழக்கு. திருவாதிரை தினத்தன்று, தில்லை நடராஜரை
நினைத்து விரதம் இருந்து களி செய்து சிறிதேனும் உண்பது நன்மை உண்டாக்கும்.
20.12.21- திங்கள் ஆருத்ரா அபிஷேகம் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்.
காலை 10
மணிக்கு மேல் இராஜசபையில் பக்தர்களுக்கு காட்சியளித்தல்.
பகல் 2
மணிக்கு மேல் இராஜசபையில் இருந்து சிற்சபைக்கு அன்னை சிவகாமி, அருள்மிகு நடராசப்பெருமான் எழுந்தருளி ஆருத்ரா தரிசன
காட்சி நடைபெறும்.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர
தினத்தன்று தேவர்கள் இறைவனுக்கு திருவாதிரை நட்சத்திர நாளில் பூஜை செய்வதாக
ஐதீகம்.
அப்போது சிவன் கோயில்களில் நடராஜப்
பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
வாய்மை அன்பர்கள் அனைவரும் சிவபிரானின் அருள் கிட்டப் பிரார்த்திகிறோம்.
ஓம் நம சிவாய
Comments