அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் ஹிமாலய வெற்றி
சென்ற 2015-ம் ஆண்டு தேர்தலைப்
போல் இந்த 2020 டெல்லி சட்டசபைத் தேர்தலிலும் 70 இடங்களில் தனித்துப் போட்டி இட்டு, 62 இடங்களில் வெற்றி
பெற்றுள்ளது. அதன் வெற்றியின் வாக்கு வித்தியாசமும் அதிகம்.
முந்தைய தேர்தலில் அந்தக் கட்சி 67 இடங்களில் வென்றுள்ளது.
இப்போது 5 இடங்கள் மட்டும் தான் குறைவு.
ஆம்
ஆத்மி பெற்ற வாக்கு சதவிகிதமும் அதிகம்
– 54%. இது முன்பு பெற்றதை விட வெறும் 0.73% குறைவு.
ஆம் ஆத்மி கட்சி 1000 வோட்டுக்கும் கீழே
(753 ஒட்டுக்கள் வித்தியாசம்) ஒரே ஒரு இடத்தில்
மட்டும் தான் பெற்றுள்ளது. மேலும் 5000 ஓட்டு வித்தியாசத்திற்கும் கீழே அது 6 இடங்களில் தான்
பெற்றுள்ளது. மற்ற இடங்களில் அதன் ஓட்டு வித்தியாசம் மிக அதிகம்.
பி.ஜே.பி. மத்திய அரசில் ஆட்சி செய்தாலும், பல மத்திய அமைச்சர்கள் – மாநில முதல் மந்திரிகள் டெல்லி
அசம்பிளி தேர்தலில் பிரசாரம் செய்தார்கள். இருப்பினும் அதனால்
எந்த பாதிப்பும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்படவில்லை. பிஜேபி லோக்
சபாவில் டெல்லியின் அசம்பளி தொகுதியின் ஏழு இடங்களிலும் சென்ற வருடத்தில் தான் வென்றுள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கு திரும்பவும் பூஜ்யம் தான் கிடைத்தது. அதனால் பிஜேபி டெல்லியை கைபற்றி விடலாம் என்ற கனவு தவிடு பொடியானது. ஆனால் காங்கிரஸ்
போல் இல்லாமல் டெல்லி சட்டசபைத் தேர்தலில் மிகவும் தீவிரமாகக் களம் இறங்கி வேலை செய்தும்
தோல்வியைத் தான் பிஜேபி அடைந்தது. அதற்கு மீடியா பிஜேபி,
டெல்லி முதல் மந்திரி பெயரை முன் மொழியாததும், கெஜ்ரிவாலின் இலவச கல்வி, இலவச தண்ணீர் வசதி,
இலவச ஹாஸ்பிடல் வசதி, இலவச மின்சாரம் ஆகியவைகளுடன்,
கடைசி மாதங்களில் மகளிருக்கு இலவச மெட்ரோ சவாரி என்று வாரிவழங்கிய வள்ளலாக
மக்களை தேர்தலில் சந்தித்து பிரசாரம் செய்துள்ளார். அத்துடன்
காங்கிரஸ் தன் தோல்வியை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே கணித்து, பிஜேபியைத் தோற்கடித்தாலே அது கங்கிரசின் வெற்றி தான் என்று காங்கிரஸ் முக்திற்கு
வழிவகுத்து விட்டனர்.
பி.ஜே.பி. வெறும் 8 இடங்களில் தான்
(முன்பு 2015 தேர்தலில் 3 இடங்கள்) வென்றுள்ளது. அதன் ஓட்டு
சதவிகிதமும் 39% (இது முன்பு தேர்தலை விட வெறும் 6% அதிகம்) என்ற அளவில் தான் உள்ளது. பிஜேபி பெற்ற இந்த 8 இடங்களிலும், 1000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் (880) ஒரு இடத்திலும்,
5000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் (3719) ஒரு இடத்திலும்
பெற்றுள்ளதால், பல இடங்களில் பிஜேபி குறைந்த ஓட்டு வித்தியாசத்தில்
தேற்றதாக பிஜேபி அபிமானிகள் செய்திகளைப் பரப்பியது உண்மைக்குப் புறம்பானது.
18
|
59.35
|
AAP
|
52665
|
52.58
|
Kapil Mishra
|
BJP
|
41532
|
41.46
|
11133
|
அத்துடன்
முன்பு பிஜேபியில் ஆம் ஆத்மி சுனாமியில் தப்பி வென்ற 3 பேர்களில் இருவர் தான்
இந்தத் தேர்தலில் வென்றுள்ளனர். மூன்றாவது நபரான கபில் மிஸ்ரா
11 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி உள்ளார். இவர் கடந்த ஐந்து வருடங்களாக ஆம் ஆத்மி கட்சியின் பல செயல்பாடுகளை சட்டசபையிலும்-
வெளியிலும் போராடியவர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
ஓட்டு
வித்தியாசமும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகம்.
50000 ஓட்டு வித்தியாசம் 4 இடங்கள்,
40,000 மேல் – 50000க்குள் ஓட்டு வித்தியாசம்
4, 30,000 மேல் 40000க்குள் ஓட்டு வித்தியாசம்
5 இடங்கள், 20,000க்கு மேல் 30000க்க்குள் ஓட்டு வித்தியாசம் 11 இடங்கள்.
10000க்கு மேல் 20000-க்குள் ஓட்டு வித்தியாசம்
24 இடங்கள். இந்த மொத்த எண்ணிக்கையே 48
வருகிறது – அதாவது 36 மெஜாரிட்டி
இடங்கள் போதும் என்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் வெற்றி தேர்தல் அதிசயம் என்று கணிப்பது
மிகை அன்று.
சுஷ்மா
ஸ்வாராஜ் 1998-ல் டெல்லியில் முதல் மந்திரியாக இருந்த பிறகு ஷீலா தீட்சிச் மூன்று முறையும்,
கெஜ்ரிவால் இந்த 2020 தேர்தல் வெற்றியால் மூன்றாவது
முறையாக முதல் மந்திரி பதவி ஏற்றுள்ளார். ஆகையால் கடந்த
20 வருடங்களாக டெல்லி அசம்பிளியை பிஜேபியால் கைப்பற்ற முடியவில்லை என்பது
பிஜேபிக்கு ஒரு பெரிய தோல்வியாகும். அதுவும் ஒரு இலக்க இடங்களைப்
பெற்றது மிகப் பெரிய தலைகுனிவு. காரணங்கள் பலவாக இருப்பினும்,
பிஜேபி-க்கு இந்தத் தோல்வி பெருத்த அவமானமாகும்.
ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் உருவான புதிய குழந்தைக் கட்சி. பொதுவாக ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ‘‘Anti-Incumbency Factor” ஒரு பெரிய தடைக்கற்களாக இருக்கும். ஆனால் அதுவும் அந்தக்
கட்சிக்கு எந்தப் பாதிப்ப்பையும் ஏற்படுத்த வில்லை.
காங்கிரஸ்
பிரசார களத்தில் இருந்ததாகவே தெரியவில்லை.
அது இரண்டாவது முறையும் பெரிய பூஜ்யம் பெற்று சரித்திரம் படைத்து விட்டது
மேலும் போட்டி இட்ட 70 தொகுதிகளில் காங்கிரஸ் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது ஒரு சரித்திரத் தோல்வியாகும்.. ஆம் ஆத்மி கட்சியை நாங்கள் வெற்றி
பெறச் செய்து, பிஜேபி-யை தோல்வி அடையச்
செய்துள்ளோம் – என்ற மன நிலையில் ‘கிராண்ட்
ஓல்ட் பார்டி’யான காங்கிரஸ்
இருப்பது, அரசியல் படுகொலைக்குச் சமம்.
இந்த
அவல மன நிலையை முன்னாள் ஜனாதிபதியின் மகளான காங்கிரஸ் தலைவி ஷர்மிஸ்டா முகர்ஜி தான்
அந்த மன நிலையை வெளிப்படையாகத் தெரிவித்த
பி.சிதம்பரத்தைச்
சாடிஉள்ளார்: ‘காங்கிரஸ் பிஜேபியைத் தோற்கடிக்க பிற கட்சிகளுக்குத்
துணை போவதாக இருந்தால், காங்கிரஸ் கட்சி ஆபீசை இழுத்து மூடிவிடலாம்.
இப்படிப்பட்டவர்கள் கட்சியில் இருக்கும் வரை விமேசனமே கிடையாது.’
மீண்டும்
அந்த அமனாதுல்லா கான்
72,000 ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார் என்பது அவர் சார்ந்துள்ள
முஸ்லீம்கள் நியாயம் தர்மம் அனைத்தையும் மறந்து அதிக ஓட்டுக்களில் வெற்றி பெற வைத்துள்ளனர்.
அதிக ஓட்டுக்கள் வாங்கிய இரண்டு வேட்பாளர்களில் இந்த அமனாதுல்லா கானும்
ஒருவர். கெஜ்ரிவாலுக்கு அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியைத் தாக்கியவருக்கு சீட்டுக் கொடுக்காமல்
இருக்கும் தைரியம் ஒரு இம்மி அளவு கூடக் கிடையாது. உண்மையில்
கூடிய சீக்கிரம் ஆம் ஆத்மி கட்சி ‘முஸ்லீம் கைப்பாவைக் கட்சியாக’
உருமாறும் காலம் வெகு விரைவில் வர உள்ளது. ஏதோ
சரித்திர வெற்றி பெற்று விட்டால், அது நேர்மையான வெற்றியாகக்
கணிக்க முடியாது. டெல்லி இந்துக்கள் கெஜ்ரிவாலின் இலவச மாயையில்
மயங்கி ஏமாந்து ஓட்டுப் போட்டு விட்டார்கள். மேலும் காங்கிரசை
இந்துக்களும், ஒட்டு மொத்த முஸ்லீம்களும் நம்மாமல் கெஜ்ரிவாலுக்கு
ஓட்டளித்து விட்டார்கள்.
கெஜ்ரிவாலின்
நாக்கு ஹனுமான் துதி – பாரதமாதாக்கி ஜே, வந்தே மாதரம் என்று கோஷித்தாலும்,
அவரது மனது ‘புரட்சி வாழ்க’ என்ற கொள்கைக் கோஷத்தில் தான் மூழ்கி உள்ளது. காலம் இதை
நிரூபிக்கும் என்று நம்புகிறேன்.
இருப்பினும்
அவருக்கு டெல்லி மக்களின் ஆதரவு இந்தத் தேர்தலில் முஸ்லீம்கள் ஒட்டு மொத்தமாக ஆம் ஆத்மி
கட்சிக்குத்ஓட்டுப் போட்டு வெற்றி அடையச் செய்துள்ளார்கள்.
54
|
58.84
|
AAP
|
130367
|
66.03
|
Braham Singh
|
BJP
|
58540
|
29.65
|
71827
|
மோடியை முன்பு திட்டியே காலம் கழித்தவர் இப்போது மோடியை குற்றம் சொல்வதை விட்டு விட்டார். மேலும் ஹிந்துக்களைக் கவருவதற்காக இப்போது முஸ்லீம் குல்லாய் – கூழ் குடிப்பதை விட்டு விட்டார். அதற்குப் பதில் மோடி மாஸ்க் அணியத் தொடங்கி விட்டார். அனுமான் கோயில் சென்று சாமி கும்புடுகிறார். பாரத் மாதாக்கி ஜே – வந்தே மாதரம் – என்று மோடி பாணியில் கூட்டத்தில் கோழங்கள் எழுப்புகிறார். அவர் பங்கு கொள்ளும் கூட்டங்களில் – அந்த இடத்தைப் பொருத்து – ஹனுமான் சாலிசா பிரார்த்தனை கீதம் பாடப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சிக் கொடியுடன் தேசியக் கொடிகளுக்கு முக்கியத்துவம் ‘அர்பன் நக்ஸல்’ என்ற பட்டப் பெயரை மாற்ற பல தேசிய சிந்தனை இருக்கிறதோ இல்லையோ அதை வெளிப்படுத்தும் சின்ன்ங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வென்றுள்ளார். இது பிரசாந்த கிஷோரில் வேலையாக இருக்கலாம்.
தேர்தல்
முடிந்த பிறகு கூட கெஜ்ரிவால்
– “தேர்தல் எந்திரத்தை நம்ப
முடியாது. அதில் பிஜேபி தில்லு முல்லு செய்யும்.
ஆகையால் ஆம் ஆத்மி கட்சியினர் அந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில்
காவல் காக்க வேண்டும்.” என்று அறிக்கை வெளியிட்டார்.
கேஜ்ரிவால்
ஒரு நேர்மையான அரசியல் தலைவர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆம் ஆத்மி கட்சியில் அளவுக்கு
அதிகமான முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியதால், கேஜ்ரிவாலின்
‘ஹிந்துத்துவா வேஷம் – கோஷம்’ ஆகியவைகளை பொறுத்துக் கொள்வதுடன், ‘இது அரசியலில் வெற்றி
பெற அதுவும் இந்துக்களின் ஓட்டுக்களைப் பெற அவசியம்’ என்ற மனநிலையால்
கெஜ்ரிவால் முஸ்லீம்களின் முழுஆதரவைப் பெற்று வென்றுள்ளார்.
மோடி
போல் பதவி ஏற்ற பிறகு பேசிய முதல் உரையில்
‘நான் 2 கோடி டெல்லி மக்கள் அனைவருக்கும் முதன்
மந்திரி. நீங்கள் எனக்கு ஓட்டுப் போட்டாலும், போடாவிட்டாலும் உங்களுக்காக உழைக்க உள்ளேன். டெல்லியை
உலகத் தரம் வாய்ந்த நகரமாக உருவாக்குவதான் என் லட்சியம். அதற்கு
மோடி அரசுடன் ஒத்துழைத்து அந்த லட்சியத்தை பூர்த்தி செய்வேன். டெல்லி மக்களாகிய உங்களின் ஆசீர்வாதத்தை வேண்டுகிறேன்’ என்ற பாணியில் பேசி உள்ளார். பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்
‘பாரத் மாதாக்கி ஜே, வந்தே மாதரம், இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வாழ்க’ – என்று உரக்க கோஷங்கள் எழுப்பினார். பாரத் மாதாக்கி ஜே
– வந்தே மாதரம் என்பதெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ‘புரட்சி வாழ்க’ என்பது தான் எஞ்சி நிற்கும் என்று நினைக்கத்
தேன்றுகிறது. ஏனென்றால், டெல்லியில் முதன்
மந்திரியாக பதவி வகிப்பவர் அரசியல் சாசனத்தை மதிக்க வேண்டும் – புரட்சி என்பது பதவியில் இல்லாத போது இருக்க வேண்டும். ஆனால், பதவிக்காக எதையும் செய்யச் துணியும் மனநிலை கெஜ்ரிவாலுக்கு
உண்டு. காலம் தான் தெளிவை உண்டாக்க வேண்டும்.
ஜனநாயகத்தில்
மக்களின் ஓட்டைப் பெற்றவர் பதவியில் அமரும் போது அதை பரந்த மனத்துடன் ஏற்க வேண்டியது
இந்திய மக்கள் அனைவரின் கடமையாகும்.
ஹனுமார்
தான் கேஜ்ரிவாலுக்கு நல்ல மனத்தையும்,
நேர்மையான நோக்கங்களையும், தூய்மையான செயல்களை
அளிக்க வேண்டும். அவரது ஆட்சியில் டெல்லி ஒரு உலகத் தரம் வாய்ந்த
நகரமாக உருவெடுக்க மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசுடன் இணைந்து செயல்பட ஹனுமாரை
மனதார வேண்டுகிறோம். அர்விந் கெஜ்ரிவாலின் அமோக – சரித்திரம் படைத்த வெற்றியைப் பாராட்டி, அவருக்கு வாய்மை
பூச்செண்டு கொடுத்து பாராட்டி, நல்ல ஆட்சியைத் தர விழைகிறோம்.
Comments