26/11 பம்பாய் தீவிர வாதத்தாக்குதல்
சிறப்புக் கட்டுரை
26/11 பம்பாய் தீவிர
வாதத்தாக்குதலில் காங்கிரசின் தேசிய விரோதச் செயல்கள் –
ஆக்கம்: வாய்மை நிருபர் பவித்திரன்
நெஞ்சு
பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் – என்று தான் ருத்திரமாக பொங்கி
எழத் தோன்றுகிறது. காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில்
ஆட்சி செய்யும் போது பிஜேபியை ஹிந்து தீவிரவாதக் கட்சியாக மக்கள் மத்தியில் பிரசாரம்
செய்ய காங்கிரஸ் – முஸ்லீம்கள் 26/11 பம்பாய்
பாகிஸ்தான் தீவிரவாதத் தாக்குதல் (2008 -
யு. பி. ஏ
1 ஆட்சியின் போது) நடைபெறுவதற்கு முன்பே காங்கிரசின்
மூத்த தலைவர்கள் – திக்விஜய் சிங்க், ப.
சிதம்பரம், சிசில் குமார் ஷிண்டே, மணி சங்கர் ஐயர் ஆகியவர்கள் இந்தியாவில் நடக்கும் தீவிரவாதம் பாகிஸ்தானில்
உள்ள முஸ்லீம்களால் மட்டும் நடைபெற வில்லை. ஹிந்துக்களும் இந்தியாவில்
தீவிரவாதத் தாக்குதல் நடத்தி உள்ளார்கள் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்க பல ஜோடிக்கப்பட்ட
வழக்குகள் போட்டு பிஜெபியை அரசியல் களத்தில் தோல்வி அடைய முயன்றனர். அதற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவுக் கரம் நீட்டி மக்களை திசை திருப்பி தேர்தலில்
வெற்றி பெற திட்டம் தீட்டப்பட்டது.. ஆனால் அது ஒரு சிறிது ஹிந்துக்களிடம்
கலக்கத்தை ஏற்படுத்தினாலும், அவர்கள் திட்டம் வெற்றி பெற வில்லை.
ஆனால் மக்கள் மீண்டும் இரண்டாவது முறை யு.பி.ஏ. 2-க்கு வாக்களித்து காங்கிரசை ஆட்சி பீடத்தில் அமர்த்தினர்.
இதனால் காங்கிரஸ் தனது ஹிந்து தீவிரவாதம் என்ற கோஷத்தை எடுத்து முழங்கியது.
கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் எந்தவித ஆதாரமும்
இல்லாமல் மக்களிடம் ‘பிஜேபி இந்து தீவிரவாதக் கட்சி’ என்ற பட்டம் சூட்டிப் பரப்பி வந்தனர்.
தற்போது
ஓய்வு பெற்ற முன்னாள் பம்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மாரியா என்பவர் ““LET ME SAY IT NOW” என்ற தலைப்பில் தனது சுய சரிதையை
எழுதி சில தின்ங்களுக்கு முன்.வெளியுட்டுள்ளார். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் ஆதார பூர்வமாக இந்த 26/11 மும்பாய் பாகிஸ்தான் தீவிர வாதத்தைப் பற்றி விவரித்துள்ளார்.
காசாப்பை
உயிரோடு பிடிக்க உதவிய துக்காராம் கோபால் ஓம்லே என்ற உதவி சப்-இன்ஸ்பெக்டரை இந்தியா ஒரு
போதும் மறக்கக் கூடாது. பிடிக்க உதவிய அவர் சம்பவ இடத்திலேயே
சுடப்பட்டு உயிரழந்தார். காசாப் பின் 11 தீவிரவாத பாகிஸ்தான் கூட்டாளிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் காசாப் ஒருவன் மட்டும் தான் உயிரோடு பிடி பட்டு, அவன் வாக்கு மூலம் – போலி அடையாள அட்டைகள் ஆகியவைகள்
– ஹிந்து தீவிரவாதமாக 26/11 பம்பாய் தாக்குதலை
காட்சிப்படுத்தும் பயங்கரமான சதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
துக்காராம்
கோபால் ஓம்லேயின் நினைவுச் சின்னம்.
அசோக் சக்ரா விருதும் வழங்கி கொரவிக்கப்பட்டார்.
|
இந்தியாவின்
வாழும் உள்ளூர் வாசிகளின் உதவி இல்லாமல் இந்த 12 போலி அடையாள அட்டைகளை உருவாக்குவது முடியாது..
பல உண்மைகள் மறைந்திருக்கும் இந்த சதியை மீண்டும் விசாரித்து களை எடுக்க
வேண்டியது அவசிய – அவசர வேலையாகும்.
2010 ஆண்டு – அதாவது 26/11 பம்பாய் தீவிரவாதத்
தாக்குதல் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு ‘26/11 ஆர்.எஸ்.எஸ். சதியா?’ என்ற தலைப்பில் ஆஸிஸ் பர்னே – உருது சஹாரா தினசரியின் ஆசிரியர் எழுதிய நூலை திக்விஜய் சிங்க் ஆகியவர்கள்
கலந்து கொண்டு வெளியிட்டார்கள். இது எவ்வளவு பெரிய இந்தியாவிற்குச்
செய்யும் துரோகம்? ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் இதை ஒரு பொருட்டாகவே
கருதுவதில்லை.
வாய்மை
காங்கிரசின் இந்த தேசவிரோத செயல்களை மிகவும் மூர்க்கமாகக் கண்டிக்கிறது. அதன் காரணமாக திக்விஜய்
சிங்க், சிதம்பரம், ஷிண்டே ஆகியவர்களுக்கு
சவுக்கடி கொடுத்து, முள் கிரீடம் சூட்டி அவர்களின் தேசத் துரோகச்
செயல்களுக்காக வாய்மை தண்டனை கொடுக்கிறது.
Comments