அதிசயம் – ஆனால் உண்மை
ரிஷி சுனாக் (பிறப்பு:
12-05-1980 – வயது 39). அவர் இன்போசிஸ் நாராயண
மூர்த்தியின் மாப்பிள்ளை. மூன்று முறை கன்சர்வேடிவ் கட்சியின்
வேட்பாளராக ஒவ்வொரு முறையும் அதிக ஒட்டு வித்தியாசத்தில் வென்றவர். இதற்கு முன் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்து பலராலும் புகழப்பட்டவர்.
‘பிரக்சிட்’ என்ற பிரிட்டன் ஐரோப்பிய யுனியனிலிருந்து
வெளியேறும் கொள்கைக்கு ஆதரவு அளித்தவர். எம்.பி.யாக பகவத் கீதைப் புத்தகத்தில் தனது கைகளை வைத்து
எம்.பி.யாக பதவிப் பிரமாணம் எடுத்தவர்.
“நான் ஒரு இந்து என்று பொருமையுடன் சொல்கிறேன். எனது அடையாளமும்
ஒரு ஹிந்து தான். எனது மதம், எனது கலாச்சார
பாரம்பரியம் ஆகியவைகளும் இந்தியன் என்பது தான்” – என்று சொல்கிறார் ரிஷி சுனாக்.
ஆகையால் பிரிட்டனுக்கு பூச்செண்டு கொடுக்கும் அதே வேளையில் ரிஷி சுனாக்கிற்கும் பூச்செண்டு கொடுத்த வாய்மை வாழ்த்துகிறது. இது இந்தியாவிற்குக் கிடைத்த மிகப்பெரும் கெளரவமாகும். வாழ்க பிரிட்டன். வாழ்க பாரத்.இந்தியாவை அடிமைப் படுத்திய பிரிட்டிஷ் – சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று பெருமை கொள்ளும் பிரிட்டிஷ் – இந்தியா சுதந்திரப் போராட்டத்தில் பல பிரிட்டிஷ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற கொடூரத்தையும் மறந்து ஒரு ஹிந்துவுக்கு மந்திரி பதவி – அதிலும் முதன் மந்திரிக்கு அடுத்த நிலையில் உள்ள நிதி மந்திரியாக ரிஷி சுனாக்கை நியமித்ததை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதனால் பிரிட்டன் ஜனநாயக் காவலன் என்று போற்றினால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
Comments