ஸ்ரீநிவாசன் ரிசர்வ் வங்கியின் கவர்னரால் கவுரவிக்கப்படும் விழா




பாங்க் ஆப் பரோடா (முன்பு விஜயா பாங்க்) டிஜிடல் உலகில் வங்கியின் பணிஎன்ற தலைப்பில் ஹிந்தியில் கட்டுரைப் போட்டி 2018 நடைபெற்றதில் வென்ற ஸ்ரீநிவாசன் கிருஷ்ணன் 2019 வருடம் இந்தியாவின் ரிசர்வ் பாங்க் கவர்னர் ஸ்ரீ ஷாந்திகான் தாஸால் போட்டியில் வெற்றி பெற்ற சர்டிபிகேட், வெற்றிக் கேடயம் 2019 அன்று வழங்கப்பட்டது.
அதன் பிறகு பாங்க் ஆப் பரோடா அகில இந்திய அளவில் ஹிந்தியில்  செமினார் 07-02-2020 அன்று ‘$5 டிரிலியன் கோடியாக (£ 350 லட்சம் கோடி) இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்ப்டுத்தும் வழிமுறைகள்என்ற தலைப்பில் ஸ்ரீநிவாசன் கிருஷ்ணன் தனது கட்டுரையை அனுப்பி அதிலும் அவரது கட்டுரை தேர்வாகியது. அதற்கும் ஸ்ரீநிவாசன் கிருஷ்ணனை அந்த செமினாரில் பேச வைத்து, அவருக்கு பரிசு, பாராட்டுப் பத்திரம் கொடுத்துக் கவுரவிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீநிவாசன் கிருஷ்ணன் வாய்மை ஆசிரியரின் அக்காவின் மகனாவார்.
இது ஸ்ரீநிவாசனுக்குக் கிடைத்த சிறந்த பாராட்டாகும். .
ஸ்ரீநிவாசன் போட்டோக்களில் வலது புரம் நின்று பரிசு வாங்குகிறார். உட்கார்ந்துள்ள மேடையில் உள்ள போட்டோவில் வலது புரம் உட்கார்ந்துள்ளார். அந்த செமினாரில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் வலது புரம் இரண்டாவதாக அவர் அமர்ந்துள்ளார். வாய்மை ஸ்ரீநிவாசன் கிருஷ்ணனுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்தைத் தெரிவிக்கிறது.




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017