காங்கிரஸிலிருந்து இந்தியா விடுதலை: ஹரியானா - மஹாராஷ்ரா மாநில தேர்தலில் நிரூபணம்

காங்கிரஸிலிருந்து இந்தியா விடுதலைஎன்ற கோஷத்தை முன் வைத்து பாரதீய ஜனதா கட்சி முந்தைய லோக்சபா தேர்தலைச் சந்தித்த போது, அது பகல் கனவு என்று தான் பல பத்திரிகைகள் - அரசியல் கட்சிகள் கணித்து, பி.ஜே.பி.யைக் கேலி செய்தன. ஆனால், அது உண்மையாகி, காங்கிர வெறும் 44 எம்.பி. இடங்களையே பெற்று எதிர் கட்சி அந்தஸ்தையும் இழந்தது. மற்ற பல அரசியல் கட்சிகளும் - ...தி.மு.., திருணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தால் - கட்சிகளைத் தவிர்த்து - ஒரிலக்க எம்.பி. இடங்களையே பெற்று படு தோல்வியைத் தழுவின. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் - முக்கியமாக பீகார் - .பி. மாநிலங்களில் பி.ஜே.பி. தனது முந்தைய வெற்றியினைத் தக்க வைத்துக் கொள்ள வில்லை என்ற நிலையைக் குறிப்பிட்டு, பி.ஜே.பி.யின் மோடி அலை இனி விலை போகாது என்று பல அரசியல் கட்சிகளும், மீடியா-பத்திரிகைகளும் கொண்டாடினர். ஆகையால், மோடி-அமித் ஷா மேஜிக் ஹரியானா-மஹாராஷ்ட்ராவில் பலிக்காது என்று கணித்து செய்திகளைப் பரப்பினார்கள்.

ஆனால், ஹரியானா - மஹாராஷ்ட்டிர ஆகிய மாநிலங்களில் தற்போது நடந்து முடிந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் படுதோல்வி அடைந்துள்ளது. 15 வருடங்களாக ஆட்சி செய்த மஹாராஷ்ட்ராவில் காங்கிரஸ் கட்சி சென்ற தேர்தலில் பெற்ற இடமான 82-லிருந்து அநேகமாக சரிபாதியான 42 இடங்களைப் பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.  1990 ஆண்டு மூன்று இலக்க இடங்களைப் பெற்ற காங்கிரஸ் அதற்குப் பிறகு இரண்டு இலக்க இடங்களைத் தான் பெற முடிந்துள்ளது. இப்போது பி.ஜே.பி. எந்தவிதமான கூட்டும் இல்லாமல் தனித்துப் போட்டி இட்டு, முந்தைய சிவசேனா கூட்டில் 2009 ஆண்டு தேர்தலில் ஜெயித்த 46 இடங்களை கிட்டத்தட்ட  3 மடங்கு இடங்களாக 122/123 என்ற மூன்று இலக்கு இடங்களைப் பெற்று சரித்திரம் படைத்துள்ளது.

ஹரியானாவில் பி.ஜே.பி.யின் வெற்றி அசாதாரணமான ஒன்றாகும். 2009 தேர்தலில் 4 இடங்களைப் பெற்ற கட்சி பி.ஜே.பி. அதற்கு ஹரியானாவில் தொண்டர் கூட்டமோ, கட்சி அலுவலகமோ குறிப்பிட்டுச் சொல்லும் அளவு இல்லை. ஆனால், மோடி-அமித் ஷா ஆகியவர்களின் கூட்டு முயற்சியால், 90 மொத்த இடங்களில் 47 இடங்களில் வென்று தனித்து ஆட்சி அமைக்கும் நிலையில் இருக்கிறது. காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியை பி.ஜே.பி. முடிவிற்குக் கொண்டு வந்து, முதன் முதலாக எந்தவித கூட்டு மின்றி தனித்து ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் 2009 ஆண்டு பெற்ற 41 இடங்களிலிருந்து வெறும் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மஹாராஷ்ரா - ஹரியானா என்ற இரண்டு முக்கிய ராஜ்யங்களிலும் பி.ஜே.பி. ஆட்சி அமைவதன் மூலம் மோடி அலை இந்தியாவில் நன்கு வீசிக் கொண்டிருப்பதைத் தான் காட்டுகிறது.

மோடியின் வெற்றியில் இந்தியா முன்னேற்றப் பாதையில் வெகு வேகமாகச் செல்ல ஆண்டன் அருள் பெற வாய்மை பிரார்த்திக்கிறது.


பாரத மாதாவுக்கு ஜே

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017