ஓடை ஆக்கம்: ஜயந்திநாதன்
உருவகக் கதை:
பெரிய தூண்டிலைத் தோளிலே சாத்திக் கொண்டு ஒருவன் மெதுவாக நடந்து வந்தான். அங்கு ஒரு ஓடை ஓடிக்கொண்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் சதுப்பு நிலம். அங்கு மண் புழுவை எடுப்பதற்கு வந்தான். மீனுக்கு ஆகாரமாக தூண்டிலின் கொக்கியிலே புழுவை மாட்டி, மீன் பிடிக்கத்தான்!
பல மண் புழுக்கள் நிலத்திலே நெளிந்தன. அவன் மிகுந்த பூரிப்படைந்தான். தன் தோளிலே இருந்த தூண்டிலைப் பக்கத்தில் வைத்து விட்டு, தான் கொண்டு வந்த்ருந்த ஓலைப் பெட்டியில் புழுக்களை கொன்று போட்டான். அந்நிலத்திலுள்ள எல்லாப் புழுக்களும் அவன் பெட்டியிலே செத்துக் கிடந்தன.
அவன் எழுந்து ஓடையின் பக்கத்தில் அமர்ந்தான். தூண்டிலின் கொக்கியிலே ஒரு புழுத் துண்டை மாட்டி, அதை ஓடை நீரில் வீசி யெறிந்து விட்டு, கரையிலே உட்கார்ந்து கொண்டான். தூண்டிற் கயிற்றுடன் கட்டப் பட்டிருக்கும் தந்தம் போன்ற நீரில் மிதக்கும் குச்சியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
நேரம் சென்றது. அவன் தூண்டிலை வெட்டி வெட்டி இழுத்தது தான் மிச்சம். ஒரு மீன் கூட அவனுக்கு அகப்படவில்லை. ஓலைப் பெட்டியில் நிறைந்து செத்துக் கிடந்த புழுக்கள் அவனைப் பார்த்துப் பரிகசிப்பதைப் போல் இருந்தன.
ஆஹா, எவ்வளவு புழுக்கள் கிடைத்திருக்கின்றன! நிறைய மீன்களைப் பிடித்து விடலாம் என்று முதலில் ஆர்வத்தோடு இருந்த அவன் முகம் சுண்டிவிட்டது. அவன் பொறுமையிழந்தான். கோபம் கோபமாக வந்தது. உடனே அவன் ஓலைப் பெட்டியில் இருந்த புழுக்கள் அத்தனையையும் ஓடையில் வீசியெறிந்தான். தூண்டில் கயிற்றைச் சுற்றிக் கொண்டு, வெறுப்போடு திரும்பினான்.
ஓடை அவனைப் பார்த்து சிரித்தது.
ஏ, அறிவிலி! புழுக்களைக் கொன்றாயே, அதனால் நீ பெற்றதென்ன? ஒன்றுமில்லை. ஒரு சில புழுக்களை எடுத்து, உன் தூண்டிலே மாட்டி, மீனைப் பிடிக்காமல், பிரயோசனமின்றி எல்லாப் புழுக்களையும் கொன்றாய்! நாளைக்கு நீ மீன் பிடிப்பதற்குக் கூட வகையின்றிச் செய்து விட்டாய். நீயே உன் தொழிலுக்குச் சாவு மணி அடித்து விட்டாய்! - ஓடை இவ்விதம் பகர்ந்து விட்டு, வேகமாக அவனை விட்டு விலகிச் சென்றது

Comments