மோடியின் சீனாவை வரவேற்கும் மந்திரம்: ‘இஞ்ச் டுவேர்ஸ் மைல்ஸ்’


INCH (India & China) towards MILES (Millennium of Exceptional Synergy) -  அங்குலத்திலிருந்து மைல்களை நோக்கிப் பயணம் என்ற சொல் பிரயோகம் அர்த்த புஷ்டியுள்ளது. இந்த சொல் பிரயோகத்தின் மூலம், இந்திய-சீன உறவுகளை இந்தியாவும் சீனாவும்  பல காலம் அசாதாரணமான ஒருங்கிணைந்த சக்தியை நோக்கிய பயணம் என்பதாக மோடி விளக்குகிறார். சீன அதிபர் ஜீ ஜின்பிங் மோடியின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் விதமாக இந்தியா வருவதற்கு முன்பே ஒரு நீண்ட கட்டுரையில் எழுதி உள்ளார். அதில் மோடியைப் பலபட புகழ்ந்து எழுதி உள்ளார். அந்த கட்டுரையில் உள்ள சில வாக்கியங்களை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
v அவரவர்கள் நாட்டின் தனிப்பட்ட தன்மைகளையும் தாண்டி, சீனா டிராகனும், இந்திய யானையும் ஒன்றாக சமாதானம், சமதர்மம், நீதி ஆகியவைகளைக் காக்கும்.
v புதிய மோடி அரசாங்கம் பதவி ஏற்ற பிறகு, சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி ஆகியவைகளில் ஒரு புதிய அலை இந்தியா முழுதும் வேகமாக வீசுகிறது. இந்த அலையால், இந்திய மக்களின் தன்னம்பிக்கை மிகவும் அதிகமாகப் பொங்கி, இந்தியா தனது வாய்ப்பை அகில உலக அளவில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
v மோடியின் தலைமையில், புதிய இந்திய அரசாங்கம் 10 முக்கியமான அம்சங்களை அடையாளம் கண்டு - தூய்மை - திறமை ஆகியவைகளுடன் உள் கட்டமைப்பு அம்சங்கள் ஆகியவைகளும் இதில் அடங்கும் - அவைகளை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளது. ஷ்ரஸ்தா பாரத் - ஒற்றுமையான, வலிமையான, நவீனமான இந்தியாவை - உருவாக்குவதில் மோடி அரசு முழு வீச்சில் இறங்கி உள்ளது
v சீனாவின்உலகத் தரம் வாய்ந்த தொழிற்கூடங்கள்’, இந்தியாவின்உலகத் தரம் வாய்ந்த தகவல் தொழில் நுட்ப ஆற்றல்’ - ஆகிய இந்த இரண்டும் இணைந்து உற்பத்தியை குறைந்த செலவில் உண்டாக்கும் அடித்தளத்தை உருவாக்கி, அதனால் மிகவும் அதிகமான அளவில் நுகர்வோர் சந்தையை மேம்படுத்த உள்ளோம்.
v சீனாவின் சக்தியும், இந்தியாவின் அறிவும் இணைந்து அதன் மூலம் ஒரு பெரும் வாய்ப்புகள் பெருக வழி ஏற்படும்.
v BCIM Economic Corridor - பங்களா தேசம் (B), சீனா (C), இந்தியா (I), மியாமன்மார் (M) ஆகியவைகள் சேர்ந்த பொருளாதார மையம், MSR - Maritime Silk Road - என்ற புராதன பொருளாதார பட்டுப் பாதை - ஆகிய இரண்டையும் சீனாவும், இந்தியாவும் இணைந்து செயல்படுத்தி, அதன் மூலம் ஆசியாவின் பொருளாதாரத்தை நிரந்தரமாக முன்னேற்றச் செய்ய வேண்டும்.
v இந்தியாவையும், சீனாவையும் குறிப்பிடும் போது, மோடி இரு உடம்புகள், ஒரே உயிர்என்று விளக்கியதை, நான் மனமுவந்து பாராட்டி, வரவேற்கிறேன்.
v சீனா-இந்தியா ஆகிய இரு நாடுகளும் ஒன்றாகச் செயல்படும் வரை, ஆசியாவின் நூற்றாண்டு கால வளர்ச்சியும், புதுமையும் எதிர்பார்க்கும் காலத்திற்குள் நிச்சயமாக நிகழும்.

(சீன அதிபர் ஜீ ஜின்பங் ஆங்கில கட்டுரையின் முழுவடிவம்: தொடர்பு)

சீன அதிபர் இந்தியா வருவதற்கு முன்பே இந்த அளவு மோடி அரசின் மேல் நம்பிக்கை வைத்து எழுதி இருப்பது நம்மைப் பெருமைப் பட வைக்கிறது. இந்த வருகையில் குஜாராத்தில் 3 ஒப்பந்தங்களும், டெல்லி ஐதராபாத் இல்லத்தில் 13 ஒப்பந்தங்களும் கை எழுத்தாகி உள்ளன.

பத்திரிகையாளர் கூட்டத்தில், சீன அதிபர் ஜீ ஜின்பங் இந்தியாவிற்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 1.22 லட்சம் கோடி) வரும் 5 ஆண்டுகளுக்கு சீனா முதலீடு செய்யவதாகவும்  தெரிவித்துள்ளார். அத்துடன் இந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலமான கைலாஸ் மனோசரோவர் செல்ல சிக்கிமில் உள்ள நாதுலா கனவாய் மூலம் புதிய பாதைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்தப் பாதை மூலம் மலை அடிவாரம் வரை மோட்டோர் வாகன ங்கள் மூலம் செல்ல வழி வகை ஏற்படுத்தப்படுகிறது. இது மோடியின் தனிப்பட்ட வேண்டுகோளை சீன அதிபர் நிறைவேற்றியதாகச் சொல்லப்படுகிறது. இந்த பாதை உத்தரகாண்ட் மாநிலம் வழியாகச் செல்லும் கரடு முரடான செங்குத்தான பாதையை விட சுலபமானது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்திய - சீனா எல்லைப் பிரச்சனையையும் மோடி சீன அதிபரிடம் மிகவும் தெளிவாகவும், அழுத்தம் திருத்தமாகவும் வலியுறித்தியதாகச் செய்திகள் வந்துள்ளன. சீன அதிபரும், “சில சம்பவங்கள் எல்லைகளைச் சரியான விதமான முறையில் வகுக்காத காரணத்தால் நிகழ்ந்துள்ளன. அவைகள் சீர் செய்யப்படும்என்று இந்தியாவிலேயே உடனேயே தெளிவு படித்தியதுடன், எல்லை மீறிய சீனச் சிப்பாய்கள் தங்கள் எல்லைக்குச் சென்றதாக செய்திகள் வெளி வந்துள்ளன. இந்த மோடியின் நிலைப்பாட்டை ஆங்கில இந்துப் பத்திரிகை புகழ்ந்துள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும்.

இருப்பினும் ஊஞ்சல் ராஜ தந்திர அரசியல் போக்குஎன்று மோடியை சீன-இந்திய எல்லையில் நடைபெற்ற சீன ராணுவத்தின் அத்துமீறலைச் சுட்டிக் காட்டி, அதைக் கண்டிக்காமல், சீன அதிபருடன் சபர்மதி ஆற்றங்கரையில் மோடி ஊஞ்சல் ஆடிக் களித்துக் கொண்டு இருந்த காட்சியை பல பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தீவிரமான தலைவர்கள் கண்டித்தனர். அதன் பின்னணியில் மோடியும் சீன அதிபரிடம் லடாக் அத்துமீறலை நேரடியாகவே கண்டித்து, தமது நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தியதுடன், சீன அதிபரிடம் நல்ல பதிலையும் தெரியபடுத்தச் செய்து விட்டார்.

இங்கு வாசகர்கள் ஒன்றை நினைவு கூற ஆசைப்படுகிறேன். 16 ஒப்பந்தங்கள் இரண்டு நாட்களில் கைஎழுத்தாகிறது என்று சொன்னால், இதற்குப் பின்னால் இரு நாட்டு அரசாங்க அதிகாரிகள் - அரசியல் தலைவர்கள் ஆகியவர்கள் பல நாட்கள் உழைத்திருக்க வேண்டும். அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தி நிறைவேற்றிய பெருமை சீன அதிபர் ஜீ ஜின்பங் - இந்தியப் பிரதம மந்திரி மோடி ஆகிய இருவரையுமே சாரும்.

தோற்றுப் போன பஞ்ச சீலக் கொள்கை உயிர்த்தெழுந்து, சீன-இந்திய உறவிற்குப் புத்துளிர் அளிப்பதைக் காணும் போது, ஆசியாவின் புகழும் பலமும் உலகளாவிய அளவில் பிரகாசிக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017