குஜராத் 2002 இனக் கலவரம்
மோடியைத்
தரக்குறைவாக மீடியாக்கள் விமரிசிப்பதும், தூஷணைகள் செய்வதும், அதி மேதாவிகளாகத் தாங்களே தங்களுக்குப் பட்டம் கொடுத்து வலம்
வரும் அத்தகைய மோடியை வெறுக்கும் ‘சிக்குலர்’ மற்றும் ‘காங்கிரஸ் - இடதுசாரி கொள்கையர்கள்’ ஆகியவர்களை இனம் கண்டு, ஸ்டூடியோவிற்கு அழைத்து மோடி எதிர்ப்புகளை ஒளி-ஒலி பரப்பி, ஆட்சியில் இருக்கும்
காங்கிரசின் சலுகைகள் பல பெற்று பத்திரிகைக்கு மிகவும் அவசியமான சுதந்திர எண்ணங்களை
காற்றிலே பறக்க விட்டு - ஆனால், தாங்கள் தான் ‘மக்களின் பிரதிநிதிகள்’ என்று வலம் வரும் மூன்று பேர்களை மோடியே விமரிசனம் செய்துள்ளார்.
2002-ம் ஆண்டு நடந்த சம்பவங்களை மோடி 8-4-2014 அன்று தான் வெளியிட்டுள்ளார். இருப்பினும், இந்த வீடியோ அப்போதே பரவலாக ஒளிபரப்பப்பட வில்லை என்பதும்
உண்மை.
அந்த
மூன்று ரிபோட்டர்கள் யார் யார்?
மோடியின்
ஹிந்திப் பேட்டியின் தமிழ் வடிவம்:
குஜராத்தில்
நடந்த கலவரத்தை அடக்கி, அமைதியை உடனே நிலை நாட்டுவதில் நான் மிகவும்
முயன்று கொண்டிருந்த தருணம் அது. நிலைமையின் விவரங்களைப் பார்த்தால்,
கலவரம் 72 மணி நேரத்திலேயே அடக்கப்பட்டதை நீங்கள்
உணரலாம். ஆனால், டி.வி.சேனல்கள் ஒரே சம்பவங்களையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக்
கொண்டே இருந்தன. அந்தச் சமயத்தில், ராஜ்தீப்,
பர்க்கா ஆகிய இருவரும் என்.டி.டி.வி.யில் பணியில் இருந்தனர்.
அந்த கொதிப்பான கலவரங்களால் பாதிக்கப்பட்ட நாட்களில், பர்க்கா மிகவும் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டார்கள். சூரத்தில் எந்தவிதமான இனக் கலவரத்தால் இறப்புகள் ஏற்பட வில்லை. அங்கே ஒரு சில சிறிய மோதல்கள் தான் நிகழ்ந்தன. ஆனால்,
கடைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்தன. பர்க்கா அந்த மூடிய கடைகளுக்கு முன்னால் நின்று கொண்டு, ‘இது சூரத் டைமெண்ட் மார்கெட். ஆனால், இங்கு ஒரு போலீஸ் கூட இல்லை’ என்று சத்தமாக உரக்கச் சொல்லி
டி.வி.யில் ஒளிபரப்பினார். உடனே, நான் பர்க்காவிற்குப் போன் செய்து, சொன்னேன்:”கலவரக்காரர்களுக்கு இந்த போலீஸ் பாதுகாப்பு
இல்லாத இடத்தின் விலாசத்தைக் கொடுத்து உதவுகிறீர்களா? அந்தக்
கலவரக்காரர்களை இந்த இடத்திற்கு வந்து, வன்முறையில் ஈடுபட வைக்கிறீர்ககளா?
இந்த இடத்தில் போலீஸ் இல்லை என்பதைத் தெரியப்படுத்தி, கலகம் செய்பவர்கள் பாதுகாப்பாகக் கலகம் செய்ய முடியும் என்பதைத் தெரியப்படுத்தி,
கலகத்திற்கு வித்திடுகிறீர்களா?”
“அஞ்சார்எ ன்ற இடத்தில் பர்க்கா மீண்டும் தவறான செய்தியை ஒளி பரப்பினார்கள்.
‘ஒரு ஹனுமான் மந்திர் நொறுக்கப்பட்டு, சூரையாடப்பட்டது’
என்று அந்த ரிபோர்டர் சத்தம் போட்டு ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்.
நான் சொன்னேன்: ‘உங்களுடைய நோக்கம் தான் என்ன?
நீங்கள் இருப்பதோ கட்சு. அது பாகிஸ்தான் எல்லைப்
பகுதியில் இருக்கும் இடம். அந்த இடத்தில் ஒரு கோயில் தாக்கப்பட்டு,
அழிக்கப்பட்டதாகக் காட்டுகிறீர்கள். இந்த மாதிரியான
செய்திகளை ஒளிபரப்புவதன் விளைவுகளை நினைத்துப் பார்ப்பதில்லையா? இன்னும் நாங்கள் கட்சில் நடந்த பூகம்பத்தின் சேதத்திலிருந்து இன்னும் மீண்டு
வரவில்லை. நீங்கள் கலவரங்களின் உண்மை நிலையை ஒழுங்காக நேர்மையாக
விசாரணை செய்துள்ளீர்களா? நீங்கள் எதற்காக கலவரத் தீயை எங்களுக்கு
எதிராக மூட்டிவிடுகிறீர்கள்? ஒரு சில நிமிடங்கள் தான் ஆகும் - இந்த இடம் போலீஸ் பந்தோபஸ்து
இல்லை அல்லது ஒரு கோயில் சூறையாடப்பட்டது - என்பது போன்ற கலவரச்
செய்திகளைப் பரப்ப. ஆனால், எங்களுக்கோ ஒரு
கலவரப் பகுதியிலிருந்து இன்னொரு கலவரப் பகுதிகளுக்கு போலீஸை அனுப்ப சில மணி நேரங்கள்
ஆகும். ஏனென்றால், கலவரங்கள் நாம் எதிர்பார்க்காத
இடங்களில் வெடிக்கின்றன. “
இதில்
ரொம்பவும் மோசமானது என்னவென்றால், அஞ்சார்
ஹனுமார் கோயில் இடிப்பு பற்றி உள்ளூர் போலீஸிடம் விசாரித்ததில், ஒரு மரத்தடியில் உள்ள மிகச் சிறிய ஹனுமான் கோயில் சிறிய அளவில் ஒரு சில போக்கிரிகளால்
சேதப்படுத்தப்பட்டதாகத் தெரியவந்தது. ஆனால், என்.டி.வி.வி.யோ இந்த மிகச் சிறிய சம்பவத்தையே ஒரு ஹனுமான் கோயில்
இடிக்கப்பட்டதாகப் பெரிது படுத்தி ஒளிபரப்பியது. பற்றி எரியும்
நெருப்பை மேலும் எரியவைக்க இது போன்ற டி.வி. சேனல் ரிபோர்ட்டர்கள் மேலும் எண்ணையை ஊற்றி எரிய வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள்.
அந்த நாளில், நான் டி.வி.சேனல்களுக்கு - அவைகள் கலவரங்களைத் தூண்டும் வண்ணம் செயல்படுவதால்
- தடைசெய்தேன். ஆனால், அந்தத்
தடை ஒரு நாள் மட்டுமே அமலில் இருந்தது.
ராஜ்தீப்
சர்தேசாய் தலைமையில் குஜாராத் கலவரத்தைப் பற்றி ஒளிபரப்பும் முக்கிய டி.வி.யாக இருந்ததால், நான் அவருக்கு நேரடியாகப் போன் செய்து இந்த தடையைப் பற்றித் தெரியப்படுத்தினேன்:
‘தொடர்ந்து மக்களைத் தூண்டும் வண்ணம் ஒளிபரப்பும் உங்களது டி.வி.யின் ஒளிபரப்பை நான் தற்காலிக தடை செய்ய வேண்டிய நிலையில்
உள்ளேன். இனக் கலவரங்களின்
போது, தாக்கப்படும் இடங்களை மந்திர் என்றோ அல்லது மசூதி என்றோ
குறிப்பிடக்கூடாது என்ற மிகத் தெளிவாக நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை மீறிச் செயல்படுகிறீர்கள்.
இந்த உங்களது செயல்கள் விதிமுறைகளை மதிக்காமலும், சட்ட திட்டங்களை மீறும் செயலாலும், வழிபாட்டுத்தலங்களின்
பெயர்களையோ அல்லது மதத்தினர்களின் பெயர்களையோ குறிப்பிடக்கூடாது என்ற விதிமுறைகளை கடைப்பிடிக்காததையும்
சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.’
பர்க்கா
தத் பற்றிய சிறிய குறிப்பு அவரை இனம் காண உதவும்.
2004 வருட சுனாமியைப் பற்றிய செய்திகளை ஒளிபரப்பியதற்காக,
2008 ஆண்டு காங்கிரஸ் அரசாங்கம் அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
யாசிர் ஹுசைன் என்பவர் ‘ஊழல் இல்லா இந்தியா:
அடியோடு ஒழிப்போம்’ என்ற 2012 ஆண்டு வெளியான புத்தகத்தில், பத்மஸ்ரீபர்க்கா அவர்களை
‘முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்’ என்றும்,
‘சோனியா காந்தியின் அபிமானி’ என்றும் குறை கூறிஉள்ளார்.
‘2008-ல் தீவிரவாதிகள் பம்பாயைத் தாக்கிய செய்தி ஒளிபரப்பு’, ‘காஷ்மீர் பண்டிட்களைத் தாக்கிய தீவிரவாதிகள் பற்றிய செய்தி’ ஆகியவைகளில் நியாயமாகவும், நேர்மையாகவும், பொறுப்புணர்ச்சி உடனும் செயல்படவில்லை என்ற குற்றச் சாட்டு பத்திரிகை உலகத்திலேயே
அவர் மேல் உள்ளது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல்,
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட நீரா ராடியா உரையாடல் விவகாரத்திலும்,
இவர் பெயர் இடம் பெற்று, 30-11-2010 அன்று நடைபெற்ற
டி.வி. நிகழ்ச்சியில், ‘நான் எந்தத் தவறும் செய்ய வில்லை என்றாலும், நான் நீரா
ராடியாவுடன் உரையாடியது ‘நான் எடுத்த தவறான முடிவின் விளைவு’
என்று ஒப்புக் கொண்டுள்ளார். இந்தக் குறைகளை எல்லாம் ஒரு சிறிதும்
நினைத்துப் பார்க்காமலும், திருத்திக் கொள்ளாமலும், மீடியாவில் வலம் வருவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
என்.டி.டி.வி.யுடன் எந்தவிதமான உறவும் கூடாது என்பதை மோடி உணர்ந்த சம்பவம் தான் விஜய் திருவேதியின்
பேட்டியில் ஏற்பட்டது.
விஜய்
திருவேதி மோடியுடன் ஹெலிகாப்டரில் உடன் பயணம் செய்து பேட்டி எடுத்தார். அப்போது மனம் புண்படும் கேள்வி ஒன்றையே மீண்டும் மீண்டும் கேட்டார்.
அதற்கு, மோடி மவுனம் காத்தார். பதில் சொல்ல வில்லை. இந்த சம்பவத்தை, திருவேதி மோடிக்கு எதிராக அவதூறாக செய்தியைப் பரப்பினார். ‘மிகவும் கடினமான கேள்வியைக் கேட்டதால், மோடி தன்னை ஹெலிகாப்டரிலிருந்து
உடனே இறக்கிக் கேவலப்படுத்தி விட்டார்’ என்ற வதந்தியைப் பரப்பிவிட்டார்.
இந்தச் சம்பவத்தை பல தடவை திருவேதி எழுதி, தன்னை
ஒரு பெரிய ஆளாக உயர்த்தப் பயன்படுத்தினார்.
இந்த
சம்பவத்திற்கு ப் பிறகு, மோடி என்.டி.டி.வி.க்கு எந்தவிதமான பேட்டியோ
அல்லது அவர்களது செய்திகளுக்கு மதிப்போ கொடுப்பதில்லை என்ற முடிவிற்கு வந்தார்.


Comments