குஜராத் புஜ்ஜை பூகம்பமும், மோடியின் மீட்புப் பணிகளும்
பூகம்பத்தால் பள்ளிகளில் உள்ள 8000 வகுப்புக் கூடங்கள் முற்றிலுமாக இடிந்து போயின. மேலும் 42,000 வகுப்புக் கூடங்கள் சேதமடைந்திருந்தன. 90க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய பாலங்கள் முற்றிலும் பயன்படுத்த முடியாத படி உடைந்து போயிருந்தன.
நரேந்திர மோடி, 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த புணரமைக்கும் பணியை விரைவுபடுத்தினார். குடிநீர் குழாய்களும், கால்வாய்களும், கழிவுநீர் குழாய்களும் பெரிதும் சேதப்பட்டிருந்தன.
நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்தினார் மோடி. 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள், 8 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. சராசரியாக ஒரு நாளைக்கு 2200 வீடுகள் கட்டப்பட்டன. 3 மாத காலத்திற்குள் 6.6 இலட்ச வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு, அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1.100 கோடி ரூபாய்களுக்கான நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. வீடுகள் கட்டுவதற்காக ஒரு கோடி சிமெண்ட் மூட்டைகளை அரசாங்கம் மானியத்தில் மக்களுக்கு விநியோகித்தது.
புணரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு, ஒவ்வொரு கிராமத்திலேயும் அங்கிருக்கும் மக்களை வைத்து பல குழுக்கள் தயார் செய்யப்பட்டு, அவர்களுக்கு அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்தது. இதன் பயனாக குறுகிய காலத்திலேயே, இந்த கிராமக் குழுக்கள் சுமார் 42,678 வகுப்புக் கூடங்களை சீரமைத்தன. இனியொரு பூகம்பம் வந்தால் கட்டிடங்கள், படிக்கச் சென்ற குழந்தைகளின் மீது விழாதவண்ணம் கட்டப்பட்டன. நிவாரணப் பணிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மாணவர்கள் தங்களுடைய கல்வியைத் தொடர்ந்தனர். இதனால் மாணவர்களுக்கு ஒரு பள்ளி ஆண்டு வீணாகவில்லை.
கல்லூரிகளிலும், பாலிடெக்னிக்குகளிலும் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பூகம்பம் சம்மந்தமான பாடங்கள் சொல்லிக்கொடுக்கப்பட்டன. பூகம்பம் போன்ற பேரழிவுகளிலிருந்து எப்படி தங்களை காத்துக்கொள்வது போன்ற வகுப்புகள் பள்ளிக்கூடங்களில் எடுக்கப்பட்டன.
குஜராத் அரசு மேற்கொண்ட தீவிரப் பணிகளின் காரணமாக, 2005 ஆம் ஆண்டுக்குள் 9,08,710 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, உடைமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பூகம்பத்தால் செயலிழந்த மருத்துவமனைகள் மாற்று இடங்களிலிருந்து செயல்படுத்தப்பட்டன. 2001 ஆம் ஆண்டு
பூகம்பத்தால் வேலையிழந்த பல்லாயிரக்கணக்கான கைத்தொழில்
செய்வோர்களுக்கும், நெசவாளர்களுக்கும் அவர்களின்
திறமையை மேம்படுத்தும் விதத்தில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டன.
தொழில்புரிவதற்கு தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன. உற்பத்தி செய்யப்பட்ட
பொருட்களை சந்தைப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. இதன் பொருட்டு
பூகம்பம் ஏற்பட்டு சிறிது நாட்களிலேயே அரசின் முயற்சியால் கைத்தொழில் செய்வோரும்,
நெசவாளர்களும் வருமானம் கிடைக்கப்பெற்றனர்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாயக் கருவிகள், விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவைகளை அரசாங்கம் இலவசமாக வழங்கியது. சேதமடைந்த அணைகள், சாலைகள், நீர்க் குழாய்கள் அனைத்தும் வெகு விரைவிலேயே சரி செய்யப்பட்டன. மின்சார இணைப்புகள் சரிசெய்யப்பட்டு, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அதி விரைவிலேயே மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. 152 கிராமங்களில், புதிதாக 222 ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்பட்டன.
பூகம்பத்தினால் அனாதை ஆக்கப்பட்ட குழந்தைகள், கணவனை இழந்த விதவைகள், வயோதிகர்கள், ஊனமுற்றோர்கள் ஆகியோர்களுக்கும், நரேந்திர மோடி அரசு தகுந்த நஷ்ட ஈடு வழங்கியதோடு, குழந்தைகளின் படிப்பு செலவு, பெரியவர்களின் மருத்துவ செலவு என அனைத்தையும் அரசாங்கமே எடுத்துக்கொண்டது.
மேற்கூறிய புணரமைப்பு விவகாரங்களைப் பார்த்து கொள்வதற்காகவே, பூகம்பம் நடந்து முடிந்த உடனேயே குஜராத் அரசாங்கம், GSDMA - Gujarat State Disaster Management Authority என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியது. குஜராத் பூகம்பத்தால் ஏற்பட்ட பேரழிவை விரைவாகவும், சிறப்பாகவும் சரிசெய்ததற்காக GSDMAவிற்கு உலகளவில் பல விருதுகள் கிடைத்தன. Commonwealth Association for Public Administration and Management என்ற அமைப்பு ஐ.நா சபையின் தலைமையில், ஜெர்மனி நாட்டில் நடந்த விழாவில் GSDMA விற்கு Gold Award Green Award என்ற பரிசை வழங்கியது. உலக வங்கியும் GSDMA விற்கு Green Award என்ற பரிசை வழங்கி அதை கவுரவித்தது.
நரேந்திர மோடி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பிறகு, தானே பல முறை பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டார். பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசோ, மந்திரிகளோ அன்னியப்பட்டவர்கள் அல்ல என்று தெரிவிக்கும் விதமாக நரேந்திர மோடியும் மற்ற மந்திரிகளும் பல நாட்கள் அவர்களுடன் தங்கினர். முதலமைச்சரோ , மந்திரிகளோ போகவில்லை என்றால் அரசு செயலாளர்கள் அங்கு சென்று தங்கினர். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று, என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டன; அந்த பணிகள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கின்றன என்பன போன்ற விவரங்களை அரசு செயலர்கள் முதலமைச்சரிடம் தெரியப்படுத்தவேண்டும்.
GSDMA சிறப்பாக செயல்படுவதை
கேள்விப்பட்டு, அதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும், அது எப்படி செயல்படுகிறது என்பதை நேரில் பார்ப்பதற்கும், ஈரான், ஆஃப்கானிஸ்தான், ஸ்ரீ
லங்கா, பங்களாதேஷ் போன்ற பல உலக நாடுகள் குஜராத்திற்கு
வந்தன.பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாயக் கருவிகள், விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவைகளை அரசாங்கம் இலவசமாக வழங்கியது. சேதமடைந்த அணைகள், சாலைகள், நீர்க் குழாய்கள் அனைத்தும் வெகு விரைவிலேயே சரி செய்யப்பட்டன. மின்சார இணைப்புகள் சரிசெய்யப்பட்டு, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அதி விரைவிலேயே மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. 152 கிராமங்களில், புதிதாக 222 ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்பட்டன.
பூகம்பத்தினால் அனாதை ஆக்கப்பட்ட குழந்தைகள், கணவனை இழந்த விதவைகள், வயோதிகர்கள், ஊனமுற்றோர்கள் ஆகியோர்களுக்கும், நரேந்திர மோடி அரசு தகுந்த நஷ்ட ஈடு வழங்கியதோடு, குழந்தைகளின் படிப்பு செலவு, பெரியவர்களின் மருத்துவ செலவு என அனைத்தையும் அரசாங்கமே எடுத்துக்கொண்டது.
மேற்கூறிய புணரமைப்பு விவகாரங்களைப் பார்த்து கொள்வதற்காகவே, பூகம்பம் நடந்து முடிந்த உடனேயே குஜராத் அரசாங்கம், GSDMA - Gujarat State Disaster Management Authority என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியது. குஜராத் பூகம்பத்தால் ஏற்பட்ட பேரழிவை விரைவாகவும், சிறப்பாகவும் சரிசெய்ததற்காக GSDMAவிற்கு உலகளவில் பல விருதுகள் கிடைத்தன. Commonwealth Association for Public Administration and Management என்ற அமைப்பு ஐ.நா சபையின் தலைமையில், ஜெர்மனி நாட்டில் நடந்த விழாவில் GSDMA விற்கு Gold Award Green Award என்ற பரிசை வழங்கியது. உலக வங்கியும் GSDMA விற்கு Green Award என்ற பரிசை வழங்கி அதை கவுரவித்தது.
நரேந்திர மோடி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பிறகு, தானே பல முறை பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டார். பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசோ, மந்திரிகளோ அன்னியப்பட்டவர்கள் அல்ல என்று தெரிவிக்கும் விதமாக நரேந்திர மோடியும் மற்ற மந்திரிகளும் பல நாட்கள் அவர்களுடன் தங்கினர். முதலமைச்சரோ , மந்திரிகளோ போகவில்லை என்றால் அரசு செயலாளர்கள் அங்கு சென்று தங்கினர். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று, என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டன; அந்த பணிகள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கின்றன என்பன போன்ற விவரங்களை அரசு செயலர்கள் முதலமைச்சரிடம் தெரியப்படுத்தவேண்டும்.
நரேந்திர மோடி, இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்வதற்கென்றே Gujarat Institute of Disaster Management (GIDM) என்ற அமைப்பை உருவாக்கினார். பூகம்பம் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, இந்தியாவில் முதன்முறையாக Institute of Seismological Research (ISR) என்ற ஒரு பிரத்தியேக ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார்.
இன்று குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றால் அடையாளமே தெரியாது. அந்த அளவிற்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கட்ச் பகுதியில் நிறைய தொழிற்சாலைகள் தோற்றுவிக்கப்பட்டு, இன்று அந்த இடமே தொழில்மயமாகி இருக்கிறது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்து, அவர்களது வாழ்க்கை பொருளாதார அளவில் மேம்பட்டிருக்கிறது.
கட்ச் பகுதி ஒரு சுற்றுலா தலம் என்பதால், நரேந்திர மோடி கட்சில் சுற்றுலா மேம்பாடு
அடைவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்தார். ஆண்டுதோறும் நடைபெறும் விதமாக சாரதா உட்சவ்,
ரனோ உட்சவ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, குஜராத்தில் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு ஏற்பாடு செய்தார்.
நரேந்திர மோடி மேற்சொன்ன பல நல்ல காரியங்களை செய்திருந்தாலும், அவற்றைப் பற்றி எந்தவொரு ஆங்கிலப் பத்திரிக்கையும் செய்திகள் வெளியிடுவதில்லை.
நரேந்திர மோடி மேற்சொன்ன பல நல்ல காரியங்களை செய்திருந்தாலும், அவற்றைப் பற்றி எந்தவொரு ஆங்கிலப் பத்திரிக்கையும் செய்திகள் வெளியிடுவதில்லை.
Comments