மக்கள் மன்றக் கோவிலின் பக்தராக பாரதப்பிரதமர் மோடி
மோடிஜி
அவர்கள்
15-வது இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்று விட்டார். 26-ம் தேதி மே மாதம் 2014 இந்திய வரலாற்றில் மறக்க முடியாத
நாளாக ஆகிவிட்டது. அதுவும் பாரதீய ஜனதா கட்சியே 282 லோக் சபா வேட்பாளர்கள் (54 வேட்பாளர்கள் தோழமைக் கட்சிகள்
- மொத்த சீட்டுகள் 336) நடந்து முடிந்த
16-வது லோக் சபா தேர்தலில் வெற்றி
பெற்று
அறுதிப் பெரும்பான்மை பெற்று விட்டதை உலகமே ‘இது இந்திய ஜனநாயகத்தின்
வெற்றி’ என்றுவியந்து பாராட்டுகிறது. 10 ஆண்டுகள் மன்மோஹன் சிங் அவர்களின் தலைமையில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில்
இருந்திருந்தாலும், அந்தக் கட்சியால் வெறும் - இரண்டு இலக்கமான - 44 லோக் சபா அங்கத்தினர்களைத்தான்
(காங்கிரசின் தோழமைக் கட்சிகள் 10) வெற்றி
பெறச் செய்ய முடிந்துள்ளது. இது தான் எதிர்கட்சியின் அதிக எண்ணிக்கைக்
கட்சியாக இருந்தாலும், மொத்த லோக் சபா அங்கத்தினர்களான
543-ல் 10 சதவிகிதமான 55 பேர்களைப் பெறாததால் காங்கிரஸ் கட்சி 16-வது லோக் சபாவில்
எதிர் கட்சி என்ற பதவியையும் இழந்துள்ளது. மேலும் காங்கிரஸ்
20 மாநிலங்களில் பூஜ்யம் இடங்கள் தான். காங்கிரஸ்
மட்டும் இன்றி தி.மு.க., பகுஜன் சமஜ்வாத கட்சி ஆகியவைகளுக்கும் பூஜ்யம் தான். மற்ற கட்சிகளான சமாஜ்வாத கட்சி, ஐக்கிய ஜனதா தளம்,
மதசார்பற்ற ஜனதா தளம், தேசிய காங்கிரஸ்,
இடது மற்றும் வலது சாரிக் கட்சிகள் படுதோல்விகளை அடைந்துள்ளன.
ஆனால், ஜெயலலிதா, பட்நாயக்,
மம்தா ஆகியவர்களின் கட்சிகள் மோடி அலையை எதிர்கொண்டு பா.ஜா.வை தோற்கடித்து, அந்தக் கட்சிகளின்
வேட்பாளர்கள் பெரும் அளவில் வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சிக்குப்
பிறகு அதிக இடங்களை ஜெயலலிதா(37), மம்தா(34), பட்நாயக் (20), மற்றவர்கள் (72) என்ற வரிசையில் இருக்கின்றனர். அதிலும் காங்கிரசை விட
ஜெயலலிதா கட்சி 7 இடங்கள் தான் குறைவு என்பது ஒரு பெரிய சரித்திரச்
சாதனையாகும்.
பஞ்சாபில்
ஆம் ஆத்மி கட்சி
4 இடங்களைக் கைப்பற்றினாலும், அது டெல்லியில் பூஜ்யம்.
மிகவும் நம்பிக்கையாக எதிர்பார்க்கப்பட்ட ஹரியானா - கர்நாடகாவில் அந்தக் கட்சி படு தோல்வி. ராகுலை எதிர்த்துப்
போட்டி இட்ட ஆம் ஆத்மி விஸ்வாஸ் பெற்ற ஓட்டுக்கள் வெறும் சுமார் 25,000 தான். கர்நாடகாவில் பல இடங்களில் போட்டி போட்டாலும்,
அங்கு அந்தக் கட்சி வேட்பாளர்கள் நோட்டா ஓட்டுக்களை விடக் குறைவாகவே
பெற்றுள்ளனர். அத்துடன் அங்குள்ள கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை
விட இது குறைவாகும். பி.ஜே.பி. கூட மொத்தம் 383 லோக்சபா இடங்களில்
தான் போட்டி இட்டுள்ளது. ஆனால், ஆம் ஆத்மி
கட்சியோ 446 இடங்களில் போட்டி போட்டுள்ளது.
“மோடி அலை எங்கே? அது அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாவிலும் தான் இருக்கிறது. குஜாராத் மாடல்
ஒரு மாயை. மோடி ஒரு ஹிட்லர். ஒரு பொய்யர்.
ஏமாற்றுப் பேர்வழி. 2002 கலவரத்தை தலைமை ஏற்று
சிறுபான்பை முஸ்லீம்களைக் கொன்று, ரத்தக்கரை படிந்தவர்.
பெண்களை வேவு பார்ப்பவர். மணம் செய்த மனைவியைக்
காப்பாற்றத் தவறியவர், நாட்டை எப்படிக் காப்பாற்றுவார்?
காசியில் தோற்கும் பயத்தால், வதோதராவிலும் நிற்கிறார்.
ஹிந்துத்துவா கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஆசாமி. மோடி ஜெயித்தால், இந்தியாவில் மீண்டும் ஒரு கலவரம் ஏற்பட்டு,
20,000 பேர்கள் இறப்பார்கள். மோடியின் பொருளாதாரக்
கொள்கையை ஒரு தபால் தலையில் எழுதி விடலாம். மோடி பிரதமராக ஒரு
போதும் ஆக முடியாது. அது மோடியின் பகல் கனவு. மோடி அதானி-அம்பானி ஆகியவர்களுக்கு சலுகைகள் கொடுத்து
ஊழல் செய்யும் பேர்வழி” - இப்படி ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்
கட்சியின் பிரதம வேட்பாளராக நியமிக்கப்பட்ட மோடியை மற்ற அனைத்துக் கட்சிகளும் கடுமையாக
விமரிசித்தனர்.
அது
மட்டுமல்ல.
மோடி பறந்து பறந்து ஓட்டு கேட்கிறார். மக்களை வீடு
வீடாகச் சென்று சந்திப்பதில்லை. மக்கள் மோடிக்கு ஓட்டுப் போட்டால்
ஏமாறப்போகிறார்கள். மோடி தமது கல்யாண விவரத்தை மறைத்ததுடன்,
மோடி தமது மனைவியை ஏழ்மையில் அழவிட்டவர். இப்படிப்
பட்டவரிடம் நாட்டை ஒப்படைக்கலாமா? குறிப்பாக பெண்கள் மோடியை ஆதரிக்க
மாட்டார்கள். மோடியின் மார்பளவு 56 இஞ்ச்.
ஆனால், அதில் காருண்யம் கிடையாது. தேர்தல் பிரசாரத்தில் மோடி ஒரு நடிகர் போல் வித விதமான உடைகளை அணிந்து காட்சி
தருகிறார். மக்கள் முன்னிலையில் நாடகமாடுகிறார். ஆகாயத்தில் பறக்கும் மோடி தமது தாயை ஒரு சிறிய அறையில் வசிக்க வைத்து,
தமது கடமையை மறந்தவர். மோடி பிரதமராக வெற்றி பெற்றால்,
நான் இந்தியாவை விட்டே குடிபெயர்ந்து விடுவேன். மோடி உ.பி.யை குஜராத்தாக ஆக்க முயன்றால்,
மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன். - இந்த மாதிரியான
தீவிரமான விமரிசனங்கள் யாரோ கட்சித் தொண்டர்களின் கோபத்தொனிகள் என்று நினைக்க வேண்டாம்.
எதிர்க் கட்சியின் தலைவர்கள் தேர்தல் களத்தில் உதிர்த்த போர்க் குரல்கள்.
இதை
எல்லாம் மிஞ்சும் விதமாக பிரபல எழுத்தாளர்கள், நோபல் பரிசு மேதாவிகள்,
பாலிவுட் நடிக-நடிகைகள், அயல் நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர்கள் பல விதமான அறிக்கைகளின் மூலம்
- மோடியை தோற்கடியுங்கள். மோடிக்கு ஓட்டுப் போடாதீர்கள்
- என்று எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு எதிர்ப் பிரசாரம் செய்தனர்.
மோடியும்
பதிலுக்கு மக்களிடம் நேரிடையாகவே பல மாதங்கள் பல பேரணிகள், கூட்டங்கள், டீ க்கடைப் பிரசாரங்கள், காணொலிகள் மூலம் மக்களுடன் கலந்துரையாடல்கள், 3-டி காணொலி
பிரசாரப் பேச்சுக்கள், டி.வி. பேட்டிகள், டிவிட்டர் - பேஸ் புக்
- மின் பிளாக் என்று அயராது உழைத்தார் - உழைத்தார்
அப்படி உழைத்தார். உலகமே அவரது பிரசார உத்தியையும், வேகத்தையும், சக்தியையும் பார்த்து வியந்தது.
தேர்தல்
எண்ணிக்கை நாளான
16-ம் தேதி மே மாதம் முன்பு வரை, பி.ஜே.பி.க்கு 272+ என்ற கனவு பகல் கனவாகத்தான் இருக்கும் என்று பலர் கணித்தார்கள். ஏன்? ராஷ்ட்ரபதி பவனில் சட்ட வல்லுனர்கள் அழைக்கப்பட்டு
தொங்கு பாராளுமன்றமாக இருப்பின் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க தயார் நிலையில் இருந்தனர்.
எப்பொழுதும் போல், ஜனாதிபதி மாளிகைக்கு முன்பு
பத்திரைகையாளர்களுக்கு விவரங்கள் அளிக்க மைக்குகளுடன் மேடையும் அமைக்கப்பட்டன.
வோட்டு எண்ணிக்கை ஆரம்பித்து ஒரு சில மணிகளிலேயே பி.ஜே.பி. 272+ வரும் என்று தெரிந்ததால்,
ஜனாதிபதி மாளிகையின் மைக்குகள் நீக்கப்பட்டு, சட்ட
வல்லுனர்களும் வெளியேறினர். பிரதம மந்திரியாக அறிவிக்கப்பட்டு
களம் இறங்கப்பட்ட மோடி அமோக வெற்றி பெற்றார். மோடி அலை எங்கே
என்று வினா எழுப்பியவர்கள் இப்போது இது அலை அல்ல. சுனாமி என்று
ஒப்புக் கொண்டனர்.
இதற்காக
உழைத்த மோடி பட்ட இன்னல்கள் அனந்தம். அவரது கட்சியிலேயே மோடியை
பிரதம வேட்பாளராக தேர்வு செய்து, தேர்தலைச் சந்திக்க எதிர்ப்பு.
ஆனால், ஆர்.எஸ்.எஸ். இரண்டு வருடங்களுக்கு முன்பேயே பி.ஜே.பி.யை எச்சரித்தது: “2014
லோக் சபா தேர்தலில் நீங்கள் ஜெயிக்காவிடில், இன்னும்
100 வருடங்கள் உங்களால் பதவியில் அமர முடியாது. 2014-ல் ஜெயித்து விட்டால், தொடர்ந்து 25 வருடங்கள் உங்கள் ஆட்சிதான்.”
இதைச்
செவியுற்ற பி.ஜே.பி.யின் தலைவர் ராஜ்நாத் சிங்
- ஜெயிட்லி போன்ற இளம் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, மோடியை டெல்லிக்கு வரவழைத்து - தேர்தல் பிரசாரம் செய்ய
மோடியை வேண்டியது.
சுதந்திரம்
பெற்ற உடன் காந்திஜி காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட வேண்டினார். ஏனென்றால், சுதந்திரம் வாங்கியதை எந்த ஒரு கட்சியும்
தேர்தலில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது என்ற காந்திஜியின் வாதம் காங்கிரஸ்
நேரு - படேல் போன்ற தலைவர்களால் ஏற்கப்படவில்லை. பல ஆண்டுகள் காங்கிரஸ் தான் இந்தியாவை ஆண்டு வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, காங்கிரஸ்
சோனியாவின் தலைமையில் - இத்தாலி நாட்டில் பிறந்து, ராஜிவ் காந்தியுடன் ஆன கல்யாண உறவால் பெற்ற உறவை - பி.ஜே.பியால் ஜீரணிக்க முடியவில்லை. அதை மறைமுகமாக, மோடி - காங்கிரஸ்
இல்லா இந்தியா - என்ற முழக்கத்தை தமது தேர்தல் கோஷங்களில் ஒன்றாக
வைத்தார். அது பலித்து விட்டது. குஜாரத்தில்
பிறந்த காந்திஜியின் கனவு அதே குஜராத்தில் பிறந்த மோடியால் காங்கிரஸ் கலைக்கப்படும்
அளவுக்கு குறைவான வெற்றியைப் பெற்று நிறைவேறி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
26-ம் தேதி தான் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட நாளாகும் - 26
- 01 - 1950.
இந்தியா
சுதந்திரம் அடைந்த
1947 ஆம் ஆண்டு காலண்டரும் 2014 ஆம் ஆண்டு காலண்டரும் ஒன்று.
மோடியின் வெற்றியை - இந்தியா இப்பொழுதுதான் உண்மையான
சுதந்திரம் அடைந்துள்ளது - என்று ஒரு சில பத்திரிகையாளர்கள் விமர்சனம்
செய்துள்ளனர்.
மோடி
அதிகார பூர்வமாக பதவி ஏற்ற நாள் 27-ம் தேதி மே மாதம். அது தான் நேருவின் 50-வது நினைவு தினமாகும்.
இந்திய
மக்களில் பெரும்பாலோர் மோடியை வல்லபாய் படேலுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். காந்திஜியால் பிரதம மந்திரி பதவியை நேருவுக்கு கொடுத்து தியாகம் செய்த பட்டேலின்
ஆத்மா சாந்தியடைய மோடி - நேரு வாரிசுகளிடமிருந்து ஆட்சியை மீட்டுள்ளார்
என்றும் மக்கள் பேசுகிறார்கள்.
‘இந்த வெற்றி 5 வருடத்திற்கு ஆட்சியை அளிக்கப்பட்ட ஒப்பந்தம்
இல்லை. வாக்களித்தவர்களின் எதிர்பார்ப்புகளை சேவை மனப்பான்மையோடு
செயல்படாவிடில், நம்மை ஆட்சிக் கட்டிலிருந்து விரட்டி அடிப்பார்கள்.
அந்த நிலை வராமல், நாம் அனைவரும் சேவை செய்ய வேண்டும்’
என்று மோடி லோக் சபா அங்கத்தினர்களிடம் வெளிப்படையாகவே சொல்லி உள்ளார்.
இந்தியா
மோடியை நம்புகிறது.
இந்தியா மோடியின் ஆட்சியால், உலக அரங்கில் ஒளிவீசும்.
மோடியை
வாழ்த்தி,
மோடியின் ஆட்சியில் இந்தியா வளம், வளர்ச்சி,
அமைதி அனைத்தும் நிலவ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
Comments