காஷ்மீர் பிறந்த கதை


காஷ்மீர் பள்ளத்தாக்கு முதலில் ஒரு பெரிய ஏரியாக இருந்ததாம். அதன் பெயர் அப்போதுசாடிசார்என்பதாகும். புராதனமான இதிகாசங்களில் இந்த விவரங்கள் காணப்படுகின்றன

காஸ்யப ரிஷி

காஸ்யப ரிஷி தமது தபோ வலிமையால் அந்த ஏரியில் உள்ள தண்ணீர் அனைத்தையும், பல சிற்றாறுகளாக உருமாற்றி, அவைகளை ஜீலம் - இந்து நதிகளுடன் கலக்கும்படிச் செய்தார்.

இப்படிச் செய்ததால், அந்த நிலம் மக்கள் வசிப்பதற்கு ஏதுவாக மாறியது. இதன் காரணமாக காஷ்மீர் என்ற அந்த நிலத்தின் பெயர் காஷ்யப ரிஷியின் ஞாபகார்த்தமாக எழுந்ததாகும்



தமது தவ வலிமையால் சிவபெருமானை அழைத்து, அந்த பூமியை அவரது அருளால் வாழ்த்தும் படி வேண்டினார்சிவ பெருமான் அவரது வேண்டுகோளுக்கு இணைங்கி, அருள் பாளித்த இடம் தான் அமர்நாத் என்று அழைக்கப்படுகிறது. அந்தப் புனிதமான குகையில் சிவ பெருமான் பனி லிங்கமாக இன்றும் காட்சி அளிப்பதாக நம்பப்படுகிறது.

ஸ்ரீநகரிலிருந்து வடக்கில் அமர்நாத் 145 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்கள் அந்தப் பனி லிங்கத்தை தரிசிக்க அமர்நாத் குகைக்கு வருகிறார்கள்.

காஷ்மீரை ஆண்ட அரசர்கள்:

காஷ்யபரின் மகன் - நீல் என்பவர் தான் காஷ்மீரின் முதல் மன்னராவார்.

அதன் பிறகு மவுரியர்கள் கி.மு. 322- 185 கால கட்டத்திலும், கி.பி. 100 வாக்கில் குஷான் வம்சத்தினரும் காஷ்மீரத்தில் ஆட்சி செய்தனர்.

ஆகையால் பல நூற்றாண்டுகளாக, காஷ்மீரம் இந்திய அரசர்களால் ஆட்சி செய்யப்பட்டதாகும்.

அதன் பிறகு இஸ்லாமியர்கள் வியாபாரிகளாகவும், மத போதகர்களாகவும் காஷ்மீரில் சுமார் கி.பி.1200 யில் நுழைந்தார்கள்.

கி.பி. 1327 ஆண்டு, ரிச்சன் ஷா என்ற அப்போதைய காஷ்மீரின் ஹிந்து அரசரை இஸ்லாமிய மதத்தில் சேரும் படி மத்திய ஆசியாவிலிருந்து வந்த அப்துர் ரெஹ்மான் புல்புல் என்பவரால் கோரப்பட்டார்.

காஷ்மீரத்தில் அப்போது அரசாண்ட கடைசி ஹிந்து அரசரான உதியானா தேவா என்பவருக்குப் பிறகு, கி.பி. 1346-ஆண்டு முதல் முதலாக ஒரு முஸ்லீம் மன்னரின் ஆட்சியின் கீழ் வந்தது. அந்த முதல் முஸ்லிம் சுல்தான் பெயர் ஷாம்ஸ்-உத்-டின் இல்டுல்முஷ் என்ற கிழக்கு துருக்கியின் இல்பாரி மன்னர் இனத்தைச் சேர்ந்தவர்.

அதற்குப் பிறகு காஷ்மீர் முஸ்லீம் படையெடுப்பால் நான்கு நூற்றாண்டுகளாக முஸ்லிம் ஆப்தானியர்கள் - முகலாயர்கள் ஆகியவர்களால் ஆட்சி செய்யப்பட்டது.

 இல்டுட்முஷ் சகோதரர்கள் ஷாம்ஸ்-உட்-டின்-இல்டுட்முஷ் என்ற தங்களது தம்பியை அடிமையாக விற்றார்கள். பலருடைய கைகள் மாறியபிறகு, அந்த அடிமை குதுப் உட் டின் ஐபாக் என்ற டெல்லி அரசரால் வாங்கப்பட்டார்.



அல்பக் என்பவர் தான் முதல் துருக்கி சுல்தான் ஆவார். அதன் மூலம் தான் இந்தியாவின் அடிமை சாம்ராஜ்யம் உருவாகியது. அல்பக் ஷாம்ஸ்-உட்-டின்-இல்டுட்முஷ் என்ற அடிமையின் சக்தியை நன்கு அறிந்ததால், அவர் அந்த அடிமையை அன்போடு நடத்தினார். அலிபெக் தமது சொந்த மகளையே அந்த அடிமைக்கு கல்யாணம் செய்து வைத்தார். ஆராம் ஷா என்ற அலிபெக்கின் மகன் திறமையற்றவனாக இருந்தான்ஆகையால், அலிபெக்கிற்கு பிறகு, இல்டுட்முஷே டெல்லியின் சுல்தானாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்

இந்த இல்டுட்முஷ் என்ற சுல்தான் தான் புகழ் பெற்ற குதுப்பினார், ஆஜ்மீர் மசூதி ஆகியவைகளைக் கட்டினவராவார். இந்த இரண்டு கட்டிடங்களும் கட்டடக் கலைஞர்களால் கட்டிடக் கலையின் அதிசயம் என்று பெரிதும் போற்றப்படுகின்றன.

26 ஆண்டுகள் அரசாட்சி செய்த பிறகு இல்டுட்முஷ் ஏப்ரல் மாதம் 1236-ம் ஆண்டு காலமானார். அதன் பிறகு 1586 ஆண்டில் காஷ்மீரை அக்பர் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.  

துரானானி சாம்பராஜ்யம் 1747 - 1823 ஆண்டுகள் காந்தஹாரைத் தலைநகரமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. அந்த ராஜ்யம் முகலாயர் ஆட்சி பலம் இழந்த போது, காஷ்மீரத்தை துரானிய மன்னர்கள் முகலாயர்களைத் தோற்கடித்து, தங்கள் வசம் ஆட்சியைக் கொண்டு வந்தனர். அஹமத் ஷா துரானி என்ற அரசர் காஷ்மீரை 1757 ஆண்டிலிருந்து 1819 ஆண்டு வரை ஆண்டு வந்தார்.

 
அஹமத் ஷா துரானி



அதன் பிறகு  ரஞ்சித் சிங் என்ற அரசர் பஞ்சாப் சீக்கிய கூட்டுத் தலைமையின் கீழ் 1819-ம் ஆண்டு காஷ்மீரத்தை துரானியர்களிடமிருந்து வென்றார்ரஞ்சித் சிங் காஷ்மீரை பல ஆண்டுகள் ஆட்சி செய்தார். அப்போது காஷ்மீரின் பல அதிகமான பகுதிகள் இப்போதுள்ள பாகிஸ்தானில் இருக்கிறது. அவர் ஆண்ட போது அவரது ராஜ்யத்தின் தலைநகரங்கள் அமிர்தசரஸும், லாஹூருமாக இருந்தன

1846-ல்  பிரிட்டிஷார் சீக்கியர்களைத் தோர்கடித்தனர். காஷ்மீர் பிரிட்டிஷாரின் வசமாகியது. லார்ட் ஹார்டிஞ்ச் என்ற பிரிட்டிஷ் அதிகாரி குலாப் சிங் என்பவருக்கு காஷ்மீரை ரூபாய் 7.5 மில்லியனுக்கு விற்றார்.

குலாப் சிங் என்பவர் ஜம்மு & லாடக் பகுதிகளுக்கு அரசராக இருந்தார். அவர் ரஞ்சித் சிங்கின் தகப்பனாரின் தாத்தா உறவாகும். டோக்ரா வம்சம் குலாப் சிங்கினால் உருவாகப்பட்டதாகும். அவர்களை ஜாம்வால் ராஜ்புத்திரர்கள் என்று அழைப்பார்கள்அந்த வம்சத்தில் பிறந்த 4 அரசர்கள் தான் காஷ்மீரத்தைப் பல விதங்களில் முன்னேற்றியவர்களாவர்குலாப் சிங் 1857-ம் ஆண்டு காலமானார். அதன் பிறகு, அவரது மகன் ராம்பிர் சிங் அரசராகப் பதவி ஏற்றார்.


 அவர் 1857-1885 வரை அரசராக இருந்தார். பிறகு, பர்டாப் சிங் காஷ்மீர் அரசராக இருந்தார்.

பர்டாப் சிங்கிற்குப் பிறகு, ஹரி சிங் காஷ்மீர் அரசரானார். இந்த ஹரி சிங் தான் டாக்டர் கரன் சிங்கின் தந்தையாவார்.

காஷ்மீர் பிரச்சனை

இந்தியா-பகிஸ்தான் பிரிவினை 1947-ம் ஆண்டு நிகழ்ந்தது.

அப்போது, ஹரி சிங்கிற்கு மூன்று வழிகளில் ஒன்றை தேர்வு செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டது - காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது அல்லது பாகிஸ்தானுடன் இணைப்பது அல்லது சுதந்திர நாடாகச் செய்வது ஆகியவைகள் தான் அவர் எதிர் கொண்ட பிரச்சனை. ஹரி சிங்கோ இந்தியாவுடன் இணைய முடிவெடுத்தார். ஹரி சிங் ஷேக் அப்துல்லாவை காஷ்மீரின் பிரதம மந்திரியாக நியமித்தார்.
  

 ஷேக் அப்துல்லா முஸ்லிம் கூட்டமைப்பு  என்ற கட்சியை உருவாக்கினார். அது 1932 -வது ஆண்டில் தேசிய கூட்டமைப்பு என்ற பெயர் மாற்றம் பெற்றது.
 அதன் பிறகு, ஷேக் அப்துல்லா ஹரி சிங்கிற்கு எதிராகச் செயல்பட்டார். 1946- ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லா ஹரி சிங்கிற்கு எதிராக - ‘காஷ்மீரை விட்டு வெளியேறுஎன்ற 
போராட்ட்த்தைத் தொடங்கினார்.  


1947-ம் ஆண்டு இறுதியில், நேரு ஷேக் அப்துல்லாவுடன் காஷ்மீரை இந்தியாவுடன் இணையும் உடன்படிக்கைக்கு ஒப்புக் கொள்ள பேச்சு வார்த்தை நடத்தினார்.

இது இந்தியாவில் முன்பு கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. ஏனென்றால், மற்ற ராஜாங்க சமஸ்தான்ங்களை ஒன்றிணைக்கும் பணியை சர்தார் பட்டேல் தான் கையாண்டு வந்தார். ஆனால், காஷ்மீர் மட்டும் நேருவால் நேரடியாகக் கையாளப்பட்டது. இதன் காரணமாக நேருவுக்கும், பட்டேலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது பட்டேலின் ராஜிநாமா வரை கொண்டு சென்றுவிட்டது.

ஆனால் காந்திஜியின் தலியீட்டினால், இருவருக்குள்ளும் ஒரு சமரசம் ஏற்பட்டு, பட்டேல் ராஜினாமாவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

இந்திய அரசியல் சட்டத்தில் விதி எண் 370 நேரு-ஷேக் அப்துல்லாவால்  ஒரு இடைக்கால உடன்படிக்கையாகக் கொண்டு வரப்பட்டது. இந்த இடைக்கால ஷரத்தான விதி 370 தான் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக மிகவும் அதிகமாக விவாதிக்கும் அம்சமாக இருக்கிறது.


விதி எண் 370  என்ன சொல்கிறது?

ஜம்மூ & காஷ்மீர் இந்தியாவோடு இணைந்த ஒரு பகுதி. காஷ்மீர் மக்கள் இந்தியாவின் அனைத்து வசதிகளையும் பெற உரிமை உண்டு. அவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டு மென்றாலும் சென்று வசிக்கலாம். ஆனால், இந்தியாவில் மற்றப் பகுதி மக்கள் காஷ்மீரில் குடியேற முடியாது.

காஷ்மீர் ஒரு எரிமலை போன்ற மதவாத அரசியல்

காஷ்மீர் என்பது ஜம்மு & காஷ்மீர் இல்லைஅதாவது காஷ்மீர் ஒரு பிரச்சனைப் பகுதி. ஆனால், ஜம்மு & காஷ்மீர் பகுதிகள் பிரச்சனையான பகுதி இல்லை.

அசாத் போராட்டக்காரர்களுக்கு  காஷ்மீர் மிகவும் சிறிய பகுதி.

ஒருங்கிணைந்த ஜம்மு & காஷ்மீர் பகுதியில் காஷ்மீர் பகுதி வெறும் 6.8% என்ற அளவில் தான் இருக்கிறது. ஆனால், இந்தச் சிறிய நிலப்பரப்பு தான் இந்தியாவை அல்லாட வைக்கிறது.

இந்த காஷ்மீர் நிலப்பரப்பில் ஹிந்துக்கள் வாழும் பகுதியான பான்னை நீக்கி விட்டால், காஷ்மீர் பகுதி இன்னும் குறுகி 6.8% -க்கும் குறைவாகப் போகும்.

காஷ்மீரில் வாழும் முஸ்லீம்களின் பிரிவினை வாதத் தலைவர்கள் தங்களது சுயநலத்திற்காக காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க விரும்புகிறார்கள்.


நீரால் சுழப்பட்ட மிகவும் சிறிய நிலப்பரப்பு கொண்டது தான் காஷ்மீராகும். உலகத்திலேயே இது மிகவும் சிறிய நிலப்பரப்பாகும்.

முஸ்லிம்கள் காஷ்மீரில் மட்டும் தான் பெருவாரியானவர்கள். அதாவது 97% என்ற அளவில் வசிக்கிறார்கள். ஆனால் ஜம்மு & காஷ்மீரில் முஸ்லீம்களின் ஜனத்தொகை குறைவு. ஆனால், ஹிந்துக்களின் ஜனத்தொகை வெளியேற்றம் - மதமாற்றம் ஆகியவைகளால் குறைந்து கொண்டே வருகின்றது. ஜம்மு & காஷ்மீர் என்றால் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லாடக் என்ற மூன்றும் சேர்ந்ததாகும்.

காஷ்மீரும் முன்பு ஆனந்நாக், பிரமுல்லா & ஸ்ரீநகர் ஆகியவைகள் அடங்கிய ஒருங்கிணைந்த ஜில்லாக்களாக இருந்தது. ஆனால், இப்போது அவைகள் 10 ஜில்லாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தியா என்றால் காஷ்மீரிலிருந்து கன்யா குமரி வரைஎன்று சொல்லும் வாசகமே சரியானது அல்ல.   ஏனென்றால், இந்தியாவின் கடைசி வடக்கு எல்லை காஷ்மீர் இல்லை - லாடக் தான் இந்தியாவின் வடகோடி எல்லை.

பூலோகப்படி காஷ்மீர் இந்தியாவிற்குள் இருக்கும் பகுதி.



காஷ்மீர்பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்இல்லை.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பேசப்படும் மொழிகள்:
பஹாரி, மிர்புரி, கோஜ்ரி,ஹின்ட்கோ, பஞ்சாபி, பாஸ்டோ.

இந்த மொழிகள் காஷ்மீரில் பேசப்படுவதில்லை.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் இந்திய காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்கு முற்றிலும் வேறு பட்டவர்கள்.

 இப்போது ஒரு கேள்வியை உங்கள் முன் வைக்க வேண்டும்:
ஹைதராபாத் அல்லது மீரட் அல்லது பம்பாய் பெண்டி பசார் ஆகிய இடத்தில் வசிக்கும் ஒரு முஸ்லிம் முல்லா இந்தியாவிலிருந்து ஒரு தனியான நாட்டைக் கேட்கலாமா?

ஆனால் இந்தக் கேள்விக்கு இந்தியாவில் வாழும் 13.8 கோடி முஸ்லிம்கள் மவுனம் சாதிக்கிறார்கள்.

காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் மற்ற பகுதியில் வாழும் முஸ்லிம்கள் மவுனம் களைந்து ஹிந்துக்களுக்கு இழைக்கும் அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கும் காலம் எப்போது வருமோ?

 

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEgOWW4anE4xM4qGgkAU_zZ72XBTBWPM3gEy4FB83sao1SAm8U2UxHfSWN5oxqbAXRA69Hyyw0URr_tHVAv9fjzs78udAbRNUWilxbywnFOHHL4oohL5YI8s_OQbywdUlTj59SFNtx1CHbCjqJ6dptLHnmT7fQ=s0-d-e1



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017