வாகன எரி எண்ணைக்கு மாற்று - இஸ்ரேல் அரசாங்கப் பரிசு!
உலகப் பொருளாதாரத்தின்
ஏற்றத் தாழ்வுகள் - அரேபிய மற்றும் எண்ணை வள நாடுகளின் கைகளில்
தான் இருக்கின்றன. அவைகளின் எண்ணைக் குழு நிர்ணயம் செய்யும்
பெட்ரோல் விலைகள் உலக வர்த்தகம் - பொருளாதாரம் ஆகியவைகளைப்
பாதிக்கும் நிலைதான் காணப்படுகிறது. இயற்கையாகக் கிடைக்கும்
எண்ணைக் கிணறுகளின் பெட்ரோலுக்கு மாற்றாக வேறு எந்த வேதிப் பொருளும் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட
வில்லை. ஆனால், மெதனால் என்ற எரிசாராயப் பொருள் பெட்ரோலுக்கு மாற்றாகச் செய்ய பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த மாதிரியான ஆய்வுகளுக்கு ஊக்கம் கொடுத்து, பெட்ரோலுக்கு மாற்றுப் பொருளைக் கண்டு பிடிக்க ஒரு
மில்லியன் டாலர் பரிசை ‘வாகனங்களுக்குப் பயன்படும் மாற்று எரிபொருட்களுக்கான
ஆய்வுக் கண்டுபிடிப்புகளுக்கான எரிக் மற்றும் ஷீலா சாம்சன் பிரதம மந்திரிப் பரிசு’
என்ற பெயரில் உலக
அளவில் உள்ள விஞ்ஞானிகளுக்கு இஸ்ரேல் அரசு அளிக்கிறது.
அந்தப் பரிசை இந்த
வருடம் பங்களூர் விஞ்ஞானி ஜி.கே.சூர்யபிரகாஷுக்கும் வேதியியல் நோபல் பரிசு பெற்ற ஜியார்ஜ் ஏ. ஒலாஹ் என்பவருக்கும் சேர்த்து வழங்கி உள்ளது.
இந்தப் பரிசு இஸ்ரேல் அரசாங்கத்தால் இருவருக்கும்
சேர்த்து அவர்களின் படிம எரிபொருளுக்கு மாற்றாகக் கண்டு பிடிக்கப்பட்ட எரி சாராய ஆய்விற்குக்
கொடுக்கப்பட்டதாகும்.
இந்தப் பரிசு தற்போதைய இஸ்ரேல் பிரதமந்திரியான பெஞ்சமின்
நெதான்யாஹுவால் - டெல் அவி என்ற இடத்தில் அந்த இரண்டு விஞ்ஞானிகளுக்கும்
செவ்வாய்க்கிழமை - 5-11-2013 அன்றுஅளிக்கப் பட்டது.
வருங்காலத்தில் இந்த இரண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பால், மெதனால் என்ற எரிசாராயம் படிமஎரிபொருளான - பூமிக்கு அடியில்
கிடைக்கும் பெட்ரோல் காஸ் போன்ற இயற்கை வளங்களுக்கு மாற்றாக அமையும் என்று நம்பப்படுகிறது.
இந்தப் பரிசளிப்பு விழாவில் இஸ்ரேலிய பிரதம மந்திரி
நெதான்யாஹு சொன்னார்: எரி எண்ணையான பெட்ரோலின் சந்தை விலையின்
ஏற்ற-இறக்கத்தினால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதிலிருந்து
விடுபட ஆதரவு கொடுக்கும் முயற்சிக்கான செய்கைதான்
இந்தப் பரிசாகும். இந்த நோக்கில் செயல்படும் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க
இது உதவும். உலகப் பொருளாதாரத்தை இந்த பெட்ரோல் எதேச்சதிகார விலைக்
கட்டுப்பாட்டிலிருந்து முழுவதும் விடுவித்து அதற்கான நிரந்தர விடை காணவே இஸ்ரேல் விரும்புகிறது.
Comments