பெருந்தலைவர் காமராஜருடன் ஒரு கற்பனைப் பேட்டி
பவித்திரன்:
சொத்து
சுகம் நாடார்,
சொந்தந்தனை நாடார்,
பொன்னென்றும் நாடார், பொருள் நாடார்,
தான் பிறந்த அன்னையையும் நாடார், ஆசைதனை நாடார்,
நாடொன்றே நாடித்தன் நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்.
காமராஜர்: என்னைய்யா கண்ணதாசன் பாட்டைப் பாடிக்கிட்டேவரே! நல்லாத்தான் இருக்கு. ஆனா, என்னை யாரையா நாடறா?
பவித்திரன்: ஏன், அப்படிச் சொல்கிறீர்கள்? .. தமிழ் நாடு காங்கிரஸ் 'காமராசர் ஆட்சி அமைத்தே தீருவோம்னு' ஒத்தைக் கால்லே நிக்கறாக .. இது, ஐயாவுக்குத் தெரியாதா?
காமராஜர்: சரியாச் சொன்னீங்க! காங்கிரஸு இப்போ தமிழ் நாட்டிலே ஒத்தக்கால்லேதான் நிக்குது.. மற்றொரு காலைத் தான் தி.மு.க.விட்ட அடமானம் வச்சாச்சே.. காமராசர் ஆட்சியும் வராது, கக்கன் ஆட்சியும் வராது .கருணாநிதி ஆட்சிதான் வரும். ஆனால், கருனாநிதி அட்சிதான், காமராஜர் ஆட்சின்னு, காங்கிரஸ்காரன் சொன்னாலும், அச்சரியப்படக்கூடாது.
பவித்திரன்: மூப்பனார் இருந்திருந்தால் ஒரு வேளை உங்கள் ஆட்சி வந்திருக்குமில்லே!
காமராஜர்: மூப்பனார் செத்துப் போனபோது நடந்த கூத்து மறந்து போச்சா என்ன? தமிழ் மாநில காங்கிரஸ் தேனாம்பேட்டை மைதானத்தை கபளீகரம் செய்யப் போவதாக நினைத்து, அம்மையார் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க, மூப்பனாரின் சடலம் அந்த மைதானத்தில் எரியூட்டப்பட்டு, தங்கள் உரிமையை நிலை நாட்டினர். ஆனால், எல்லாம் பழய கதை! இப்போ
மூப்பனார் பையன் ஜி.கே.வாசன் புள்ளிவிவர மத்திய மந்திரியாகி, அன்னை சோனியா புகழ் பாட ஆரம்பித்தாய் விட்டது! இனி, சோனியா ஆட்சி வரனும்னும் தான் அவாளெல்லாம் ஆசைப்படுவா. ஏதோ நல்ல ஆட்சி வந்தா சரிதான் .. பெயரிலே என்ன இருக்கு?
பவித்திரன்: உங்களின் வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன் .. உங்கள் வாயாலே கேட்க எனக்கும், வாய்மை வாசகர்களுக்கும் ரொம்பவும் ஆவலாக இருக்கிறது.
காமராஜர்: நான் பிறந்தது விருதுநகரில். 15 ஜீலை 1903 வருடம். அப்பா பெயர் குமாரசாமிநாடார். அம்மா பெயர் சிவகாமி அம்மாள். எனது பெயர் காமாக்ஷி குமாரசாமி. அம்மா என்னை அன்பாக ராஜா என்று அழைப்பார். நான் பள்ளியில் படிக்கும் பொழுதே அப்பா காலமாகி விட்டார். அப்பொழுது எனக்கு 11 வயது. அம்மா தன் நகைகளையெல்லாம் அடகு வைத்து அதிலிருந்து கிடைத்த பணத்தை ஒரு வியாபாரியிடம் கொடுத்து, அதிலிருந்து வரும் வட்டியிலேதான் ஜீவனம். என் படிப்பும் பாதியிலேயே நின்று விட்டது. எனது 15 வயதிலிருந்தே காங்கிரஸின் சக்தியாக்கிரக இயக்கத்தில் ஈடு பட்டு ஆறு முறை பல சிறைகளைப் பார்த்து விட்டேன். எனது மொத்த 8 வருட சிறை வாசங்களின் போதெல்லாம் பல விதமான புத்தகங்களைப் படித்து என் அறிவை விருத்தி செய்து கொண்டேன். விருதுநகர் வெடிச் சம்பவங்களில் நான் கைதானபோது, வரதராஜுலு நாயுடுவும், ஜார்ஜ் ஜோசப்பும் வாதாடி, விடுதலை வாங்கிக் கொடுத்தார்கள். வரதராஜூலு நாயுடுவின் பேச்சைக் கேட்டுத்தான் காங்கிரஸின் சுதந்தரப் போராட்டங்களில் பங்கேற்கும் உத்வேகம் எனக்கு உண்டாயிற்றுங்கிறேன்..ஜார்ஜ் ஜோசப்பிடம் எனக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. ஜோசப்பும் என்னை அவர்கள் வீட்டின் ஒரு நபராகவே மதித்து வந்தார். சத்தியமூர்த்தி எனக்கு அரசியல் குரு என்றால், ஜார்ஜ் ஜோசப் எனக்கு உற்ற நண்பர்.
பவித்திரன்: நீங்கள் முதன் முதலில் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக 1954 அன்று பதவி ஏற்றவுடன், சத்தியமூர்த்தியின் மனைவியைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதாகச் சொல்வார்கள். அதேபோல் ஜார்ஜ் ஜோசப் அவர்களையும் நீங்கள் என்றும் நன்றி உணர்வுடன் நடந்ததாகத் தான் சரித்திரம். அதை எல்லாம் விட, உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு எடுத்துக் காட்டாக நான் சொல்ல நினைப்பது, உங்களை எதிர்த்து தோல்வி உற்ற திரு. சி. சுப்பிரமணியம், எதிரணியில் இருந்து செயல்பட்ட திரு.எம். பக்தவத்சலம் ஆகியவர்களை உங்கள் மந்திரிசபையில் பொறுப்பு வாய்ந்த இலாக்கா மந்திரிகளாக ஆக்கினீர்களே, அந்த பெருந்தன்மை யாருக்கு வரும்?
காமராஜர்: அதெல்லாம் ஒன்னும் பெரிதில்லைங்கிறேன் ..என்னை எதிர்த்தது கட்சியின் ஜனநாயகம். அவங்களுக்கு பதவி கொடுத்தது ஆட்சி ஜனநாயகம். திறமை இருந்தது, பதவி கிடைத்தது. அவ்வளவு தான்.
பவித்திரன்: உங்கள் ஆட்சியில் நீங்கள் பல நல்ல காரியங்கள் செய்திருக்கிறீர்கள்- கிராமங்கள் தோரும் பல பல பள்ளிகள். ராஜாஜி கஜானாவில் பணம் இல்லை என்ற காரணம் காட்டி மூடிய 6000 பள்ளிகளைத் திறந்ததுடன், 12000 பள்ளிகளை புதிதாகத் திறந்தீர்கள். மூன்று மையிலுக்கு மேல் கிராமத்துப் பிள்ளைகள் பள்ளிகளுக்காக நடக்கக் கூடாது என்று தீர்மானித்து இந்த நடவடிக்கை எடுத்தீர்கள். 'ஆரம்ப பள்ளி இல்லாத கிராமம் ஒன்று கூட இருக்கக் கூடாது; உயர்நிலைப் பள்ளி இல்லாத பஞ்சாயத்தும் இருக்கக் கூடாது' என்பதைச் செயலில் செய்து காட்டினீர்கள். உலகத்திலேயே முதல் முறையாக மதிய உணவுத் திட்டத்தை அமல் படுத்தி வெற்றி கண்டீர்கள். ஏழைக் குழந்தைகளுக்கு இலவச புத்தகங்கள், சீருடைகள் வழங்கி சமத்துவத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்தினீர்கள். ஐந்தாண்டுத் திட்டத்தில் பல தொழிற்சாலைகள், சிறு தொழில் தொடங்க பல தொழிற் கூடங்கள். கிராமம் தோறும் மின்சாரம் வழங்கினிர்கள். மூன்று முறை தமிழக முதல்வராகப் பணிபுரிந்து, 1963-ல் 'காமராஜர் திட்டம்' என்ற அகில இந்திய காங்கிரசைப் பலப்படுத்த பல முக்கிய தலைவர்கள் பலரும் பதவி விலகி, கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்தீர்கள். அதற்குப் பிறகு, நீங்கள் பிரகாசிக்க முடிய வில்லையே? தமிழ் நாட்டிலேயே ஒரு தேர்தலில் உங்களது சொந்தச் தொகுதியிலேயே தோற்று விட்டீர்களே?
காமராஜர்: ஆமாம்..உண்மைதான். ஒருவேளை நான் தொடர்ந்து, தமிழ் நாட்டு அரசியலில் மட்டும் பொறுப்பேற்று இருந்தால், இந்த நிலை வந்திருக்காதோ என்னவோ? ..பழசைப் பேசுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை.
பவித்திரன்: சரி, இப்போது நீங்கள் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?
காமராஜர்: 'என்னை அவர் பேசா மடந்தை' என்று நான் அதிகம் சட்டசபைகளில் பேசாததைக் சுட்டிக் காட்டுவார். நான் அவரிடம் வேண்டுவது, 'நீங்கள் பேசுவதைக் குறைத்து, செயலில் ஈடுபடுங்கள்' என்பது தான்.
பவித்திரன்: 'தி.மு.க.வினர் வாய்ச் சொல்லில் வீரர்; செயலில் சீரோ' என்று சொல்ல வருகிறீர்களா?
காமராஜர்: பிறந்த நாளுக்கு என் சிலைக்குக் கிடைக்கும் ஒரு மாலையையும் கெடுத்து விடுவாய் போலிருக்கிறது. என்னாங்கிறே? போயேங்கிறேன்!
பவித்திரன்: போறேன், ஐயா! அதற்குள் ஒரு பத்திரிகையில் உங்களைப் பற்றி எழுதியதை படிக்கிறேன் .. கேட்க வேண்டும். 'காமராஜர் கண்மூடினார். அவர் வாழ்ந்த வீட்டை அதன் உரிமையாளர் எடுத்துக் கொண்டார். அவர் பயன்படுத்திய காரைக் கட்சி எடுத்துக் கொண்டது. அவருடைய உடலை நெருப்பு எடுத்துக் கொண்டது. அவரது பெயரை வரலாறு எடுத்துக் கொண்டது. அவர் வாழ்ந்த காலம் தமிழர் வாழ்வில் ஒரு பொற்காலம்.'
காமராஜர்: பொற்காலம் மீண்டும் மலரும்னேன் வரும்னேன்! வரும் காலத்தில் என்னை விட ஒரு பெரிய மகான் தமிழ் நாட்டில் பிறக்கத்தான் போறான். தமிழ் நாடும், இந்தியாவும் செழிக்கத் தான் போறது. யாரையும் அதிகமாய் துதிபாடறது எப்போ நிக்குதோ, அப்போத்தான் நாடு உறுப்படும்.
பவித்திரன் சொர்க்கலோகத்திலிருந்து, நேரே கிண்டியிலுள்ள காமராஜர் நினைவிடத்திற்கு அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிமித்தமாகச் சென்றார். நமது நிருபருக்கு அதிர்ச்சியான அதிர்ச்சி. எல்லா இடத்திலும் புதரும், குப்பையுமாக கேட்பாற்றுக் கிடந்தது. கட்டை பிரம்மசாரி பெருந்தலைவர் காமராஜர். ஆனால், காமராஜர் நினைவிடத்திலோ சரிசெய்யப் படாத புதரில், காதலர்கள் தங்களை மறந்த நிலை!
'காமராஜர் ஆட்சி கிடக்கட்டும்; அவரது நினைவிடத்தையாவது, காங்கிரஸ்காரர்கள் 'அண்ணா-எம்.ஜி.ஆர். நினைவிடங்களைப் போல்' பராமரிக்க தி.மு.க. மைனாரிட்டி அரசைக் கேட்கக் கூடாதா?' - என்று பவித்திரன் நம் அலுவலகத்திற்கு வந்து புலம்பித் தீர்த்து விட்டார்.

Comments