வள்ளுவம்: நடமாடும் பிணங்கள் & சாதலே நன்று
வள்ளுவம் 7: நடமாடும் பிணங்கள் ஆக்கம் : எஸ். சங்கரன். பெற்றோர்கள் சிலர் தங்கள் குழந்தைகளின் செயல்பாட்டில் உச்சகட்ட வெறுப்படையும் பொழுது, 'நீ இருப்பதை விட இறப்பதே மேல்' என்று சொல்வார்கள். 'நீ ஏன் இறக்க வேண்டும்? நாங்களே செத்தொழிகிறோம்!' என்றும் பெற்றோர்கள் சொல்வது உண்டு.ஆனால், உலகத்திற்கே நீதி போதிக்க வந்த வள்ளுவர் இது மாதிரிச் சொல்லி இருந்தால், உங்களால் நம்ப முடிகிறதா? உண்மையில் சொல்லப் போனால், வள்ளுவர் இன்னும் அதீதமான சொற்பிரயோகம் செய்கிறார். 'சில பேர்கள் சில கெட்ட எண்ணங்கள் கொண்டு திரிகிறார்களே! அவர்கள் எல்லாம் நடமாடும் பிணங்கள்!' என்று எரிமலையாகச் சீறுகிறார் வள்ளுவர். தெய்வப் புலவர் வள்ளுவர் இவ்வாறு சீறுகிறார் என்றால், அதில் காரணம் இல்லாமல் இருக்காது. அதுவும், 'இனிய சொற்கள் இருக்கும் பொழுது கடுமையான சொற்களைக் கூறல், கனிகள் இருக்கும் பொழுது காய்களைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்' என்று சொன்ன வள்ளுவரே இப்படிக் கடுமையாகக் கூறி இருந்தால், அது தார்க்குச்சி போட்டு நம்பை விழிக்கச் செய்யத்தான். வள்ளுவரின் இந்த அதீத வெறுப்பு ஆறு குறட்பாக்களில் வெளிப்படுகி...