விஜேந்திரரின் அமுத மொழிகள்


 

இந்த அறிவியல் சார்ந்த பல கருவிகள் அதைப் பற்றிய அறிவு நமது இளைய சமூகத்தினரிடம் இருப்பதைப் போல், ஆன்மீகத்திலும் பற்று உடையவர்களாக இருக்கிறார்கள். ஆகையால் அறிவியல்ஆன்மீகம் இரண்டையும் இணைத்து இக்கால இளைஞர்களுக்கு அவைகளைப் பற்றிக் கற்பிக்க அவசியமானவைகளை ஏற்பாடு செய்து, பலனை எதிர்பாராது சேவை செய்யும் மனப்பக்குவத்தை உணர்த்த வேண்டும்.

கோயிலில் உழவாரப்பணியைச் செய்யும் போது அதைப் பக்தியுடன் எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் செய்வது மனத்தை மேம்படுத்தும். இந்த மனோ பாவம் தான் சமூக சேவையின் முக்கிய அம்சமாகும்.  

கடவுள் பக்திநமது கலாச்சாரம் ஆகியவைகளில் அனைத்து சமூகத்தினரும் நம்பிக்கை கொண்டு, தேசபக்தியை முழுமையாக கடைப்பிடித்து, நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்த பணி புரியவேண்டும்.

தமிழ் நாட்டில் உள்ள செய்யார் ஊரில் உள்ள குளத்தில் ஒரு பக்கத்தில் படிகள்மற்றொரு பக்கத்தில் சரிவான கீழே இறங்க வசதி செய்யப்பட்டிருக்கும் பாதை. படிகள் வழியாக மனிதர்களும், சரிவான பாதை வழியாக கால்நடைகளும் கீழே இறங்கி குளிப்பதற்கு வசதி செய்யப்பட்டிருக்கும். மனிதர்களுக்கும்மிருகங்களுக்கும் உதவும் உன்னத கொள்கை கொண்ட மதம் ஹிந்து மதமாகும். சுமை தூக்கிகளுக்கு உதவியாக கருங்கற்களால் ஆன சுமை தாங்கிகள் ஆங்காங்கே பாதை நெடுக கட்டப்பட்டிருக்கும். அதற்கு அருகில் மிருகங்களின் தோல் அரிப்புக்கு நிவாரணமாக கற்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

அனைவரும் சந்தோஷமாக வாழ வழிவகிக்கும் மதம் இந்துமதமாகும்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017