முருகன் பிறந்த தினம் – விசாகம் – ஜூன் 2, 2023 – வெள்ளிக் கிழமை
இந்த 2023 ஆம்
ஆண்டில் வைகாசி விகாசம் வரும் ஜூன் 2 ஆம் நாள் காலை 05.55
மணிக்குத் தொடங்கி, ஜூன் 3 ஆம்
நாள் காலை 05.54 வரை இந்த விசாகம் நட்சத்திரம் உள்ளது.
முருகன் அவதரித்த தினம் தான் வைகாசி விசாகமாக கொண்டாடப்படுகிறது. அந்த புண்ணிய நாளில் முருகனை நினைத்து விரதம் இருப்பார்கள் முருக பக்தர்கள்.
ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து
தோன்றியவர் முருகப் பெருமான். ஈசனின் கண்களிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாகியது. அக் குழந்தைகளை ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தார்கள். ஆறு உருவங்களாக இருந்த முருகப்
பெருமானை அன்னை பார்வதி தேவி, ஒன்றாக சேர்த்து அணைத்ததும் ஆறு
உருவமும் ஒரே உருவாகமாக மாறி, ஆறு முகங்களுடன் முருகப் பெருமான்
காட்சி அளித்த தினம் தான் இந்த வைகாசி விசாக திருநாள். நெற்றிக்கண்ணில் இருந்து
தோன்றியதால் அவருக்கு கந்தன் என்ற பெயரும் ஏற்பட்டது.
விசாக நட்சத்திரத்தில் புதிய உருவம்
கொண்டவர் என்தால் முருகனுக்கு விசாகன் என்ற திருநாமம் உண்டு. 'வி' என்றால் பக்ஷி என்றும், 'சாகன்' என்றால் வாகனமாக கொண்டவன் என்றும்
பொருள். மயிலை வாகனமாக கொண்டவன் என்பது விசாகன் என்ற சொல்லுக்கு பொருளாகும்.
இதனால் வைகாசி விசாகத்தன்று வேலையும், மயிலையும்
வணங்குவது மிக சிறப்பானதாகும்.
பாரதி முருகன் அருள் வேண்டி துதித்துப் பாடுகிறார்:
ஆறு சுடர் முகங்கண்டு விழிக்கின்ப
மாகுதே ; - கையில்
அஞ்சலெனுக்குறி கண்டு
மகிழ்ச்சியுண்டாகுதே.
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி
யாவையும் – இங்கு
நீக்கி அடியாரை நித்தமுங்
காத்திடும் வேலவா !
இந்த புனித முருகன் பிறந்த நன்னாளில் வாசக அன்பர்கள் அனைவருக்கும் முருகன் அருள் முழுவதுமாக கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.
வேலும் மயிலும் துணை


Comments