15 கோடி சொத்துக்கு அதிபதி தலித் காங்கிரஸ் தலைவர் கார்க்கே


குல்பர்க்காவின் காங்கிரஸின் முடிசூடா ராஜா. ஏழை தலித்துக்களின் பணக்காரத் தலைவர். தன் மகன்  பிரியங்க் கார்க்கேவை சிட்டாபூர் எம்.எல்.ஏ.ஆக வெற்றி பெறச் செய்து காங்கிரஸின் குடும்ப அரசியல் திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்திய தீரர்.

7 முறை தொடர்ந்து கர்நாடக அசம்பளித் தேர்தல்களில் (6 முறை கும்ரிட்கல் தொகுதியிலும், 1 முறை சிட்டாபூர் தொகுதியிலும்) வெற்றிக் கொடி நாட்டி – தேர்தலில் கார்க்கேயை ஜெயிக்க முடியாது – என்ற கிரீடத்தை அணிந்து மன்னராக குல்பர்க்கா தொகுதியில் வலம் வந்தவர் 2019 லோக் சபா தேர்தலில் மல்லிகார்ஜுன கார்க்கே பிஜேபி வேட்பாளரிடம் 95 ஆயிரத்திற்கும் மேல் வாக்கு வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்து சரித்திரம் படைத்தார்.

கார்க்கேயின் காங்கிரஸ் சோனியா குடும்பத்தின் விஸ்வாசம் அனைவரும் அறிந்த ஒன்று. சோனியா – ராஹுல் – பிரியங்கா ஆகியவர்களின் சொற்கள் தான் கார்க்கேக்கு வேத வாக்கு. அந்தக் குடும்பத்தினருக்கு தமது உடல்-பொருள்-ஆவி ஆகிய அனைத்தையும் அடகு வைத்திருப்பவர். அதை கார்க்கேயும், அவரது அரசியலில் ஈடுபட்டிருக்கும் கர்னாநடக எம்.எல்.ஏ. பிரியங்க் கார்க்கேயும் ஜோடியாக காங்கிரஸ் சோனியா குடும்பத்திற்கு சேவகம் செய்வதையே நாட்டிற்குச் செய்யும் சேவை என்று பெருமையாக நினைப்பவர்கள்.

அதை வெளிப்படுத்தும் விதமாக அப்பா – மகன் இருவர்களும் மோடியைத் தரக்குறைவாகத் திட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டு அரசியல் களத்தில் வலம் வரும் காங்கிரஸ் தலைவர்கள்.

முதலில் தந்தையின் ‘மோடி அவதூறுகளைப்’ பற்றி அறிந்து கொள்வோம். 



2022 நவம்பர் குஜராத் தேர்தலின் போது மல்லிகார்ஜுன் கார்க்கே மோடியை 100 தலை ராவணன் என்று வர்ணித்தார்:

https://timesofindia.indiatimes.com/videos/toi-original/do-you-have-100-heads-like-ravana-mallikarjun-kharges-latest-jibe-at-pm-narendra-modi/videoshow/95854092.cms?from=mdr

“எந்தத் தேர்தலிலும் – சட்ட சபைத் தேர்தல் என்றாலும், கார்ப்பரேஷன் தேர்தல் என்றாலும், பஞ்சாயத்து தேர்தல் என்றாலும் மோடியின் பெயரால் ஓட்டுக் கேட்கப்படுகிறது. அவருக்கு என்ன 100 தலைகளா? ராவணன் போல் 100 தலைகளா மோடிக்கு?’

குஜராத் மக்கள் தங்களையும்,, தங்கள் தலைவர் மோடிஜியையும் அவதூறாகப் பேசியதற்கு தேர்தலில் பிஜேபி மீண்டும் வெற்றியடையச் செய்து காங்கிரசைத் தோல்வி அடையச் செய்தது.

இப்போது நடந்து கொண்டிருக்கும் கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது காடக் மாவட்டம் நரேகலில் நடந்த கூட்டத்தில் கார்க்கேயின் மோடி பற்றிய அவதூறு பேச்சு மிகவும் கீழ்த்தரமான ஒன்று என்பது தெள்ளத் தெளிவு.

மோடிய கார்க்கே ‘விஷப்பாம்பு’ என்று வர்ணித்துள்ளார். அப்படி அவர் வர்ணிக்கும் தொனி, வார்த்தைகள் அனைத்தும் அரசியல் நாகரீகமற்ற கீழத்தர அரசியல் வாதியாகவே அவரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அவர் பேச்சின் பகுதி:

‘மக்களே, தவறு செய்து விடாதீர்கள். மோடி விஷப்பாம்பு போன்றவர். அவர் விஷம் இல்லை. அதை நக்கிக் கண்டு பிடிப்போம் என்று சொல்கிறீர்களா? நக்கப்போகாதீர்கள். நீங்கள் நக்கினால் செத்துப் போவீர்கள்.

‘இல்லை. இல்லை. இது மோடி கொடுத்த்தால் விஷம் இல்லை. நல்ல மனிதரான பிரதமர் கொடுத்தார். இதை முயற்சி செய்து நக்குவோம் என்று நினைத்து நீங்கள் அந்த விஷத்தை நக்கினால் நிரந்தரமாக தூங்கி விடுவீர்கள்.”

இது தான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்தி காங்கிரஸின் இன்னாளைய தலைவரின் பேச்சு.

ஒரு நாட்டின் பிரதமரை – இந்திய மக்களால் தேர்வெடுக்கப்பட்ட பிரதமரை -அவமரியாதையாகப் பேசுவது மிகவும் கண்டணத்திற்கு உரியதாகும். இது கார்க்கேயின் கீழ்த்தரமான எண்ண ஓட்டங்களையும், தான் வகிக்கும் பதவிக்குத் தகுதியின்மையும் காட்டுகிறது.

ஆனால் ராஹுல் தேர்வான எம்.பி.க்களிடம் ‘இனி கொஞ்சம் அதிகமாக உரக்க கோஷம் – மூர்க்கமான கண்ணடங்களை நான் உங்களிடம் எதிர் பார்க்கிறேன்’ என்ற அறிவுரையை கார்க்கே அப்படியே ஒரு படி மேலேயே செய்து காட்டி உள்ளார்.

கர்நாடக மக்கள் சென்ற லோக் சபா தேர்தலில் கார்க்கேயே அவரது சொந்தத் தொகுதியான குல்பர்க்காவிலேயே தோற்கடித்ததைப் போல் இந்த கர்நாடகா சட்டசபைத் தேர்தலிலும் பிஜேபியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி, காங்கிரசிற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். 



 https://www.youtube.com/watch?v=C2f5Gfje0_s

அப்பாவிற்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை என்று காட்டுவதற்கு, அவரது அரசியல் மகன் – கர்நாடக காங்கிரசின் தலவர் பிரியங்க் கார்க்கே மோடியை ‘நாளாயக்’ என்ற பதப் பிரயோகத்தால் அவதூறு பரப்பி உள்ளார்.

மோடியின் உரையில் இருந்து மேற்கோள் காட்டப்பட்ட கருத்துக்கணிப்பு கூட்டத்தில் பிரியங்க் பேசுகையில், "நீங்கள் (பிரதமர் மோடி) குல்பர்கா (கலபுராகி) வந்தபோது பஞ்சாரா சமுதாய மக்களிடம் என்ன சொன்னீர்கள்? பஞ்சாரா கா ஏக் பீடா டில்லி மே பைதா ஹை (நீங்கள் பயப்பட வேண்டாம்...டெல்லியின் உங்கள் மகன் ஆட்சியில் உள்ளான்)

"ஐசா நாளாயக் பீட்டா பைதா தோ கைசே ஹோதா பாய்? கர் கைசே சலேகா?" (தில்லியில் ஒரு திறமையற்ற மகன் அமர்ந்திருந்தால், நீங்கள் எப்படி குடும்பத்தை நடத்த முடியும்?) என்று கேட்டார்.

இது மோடியின் பிறப்பையே கொச்சைப் படுத்துவதாகும். இது அவதூற்றின் உச்ச கட்டமாகும். இதற்கும் கர்நாடக ஓட்டர்கள் பிஜேபியைச் ஜெயிக்க வைத்து இந்த மதி கெட்ட அரசியல் தலைவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

Comments

Popular posts from this blog

தமிழில் நான்கு வேதங்கள்

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017