சாமிநாத சர்மாவின் கூன் நிமிர்ந்த சம்பவம் – கு. அழகிரியின் வாயிலாக அறிவோம்





எனது பர்மா வழி நடைப் பயணம்’ என்ற வெ. சாமிநாத சர்மா அவர்களின் புத்தகத்தில் கு. அழகிரிசாமி சர்மாவின் வாழ்க்கைக் குறிப்பில் தான் சர்மாவின் கூன் நிமிர்ந்த சம்பவத்தை விவரிக்கிறார். 

கு. அழகிரிசாமி தமிழ் இலக்கியவாதிகளுக்கு மிகவும் பரிச்சயமானவர். அவரும் ஒரு சிறந்த கதை – கட்டுரையாளர். சர்மாவின் எழுத்தைப் பற்றி அழகிரிசாமி இவ்வாறு கூறுகிறார்: “சர்மாவின் நூல்கள் வெளிவந்த மாத்திரத்தில் தேடிப்போய் வாங்கிப் படிக்கும் கூட்டத்தில்  நானும் ஒருவன். முன்பு என் நண்பர்களுக்குக் கல்யாணப்பரிசு கொடுக்க புத்தகம் வாங்குவேன். அவற்றில் பெரும்பானவை சர்மாவின் புத்தகங்களாகவே இருக்கும்.” 

அதே போல் வை. கோவிந்தன் சக்தி என்ற ஒரு ஒப்பற்ற மாதாந்திர பத்திரிகையை நடத்தி வந்தார். அந்தப் பத்திரிகையை நான் மிகவும் விரும்பிப் படிப்பேன். லைப்ரரியில் இதற்காகவே சென்று படிப்பேன். பத்திரிகையை சில சமயம் என் அண்ணா வாங்குவார். அத்துடன் சக்தி பிரசுலாயம் மூலம் பல சிறந்த புத்தக்ங்களை மிகவும் குறைந்த விலைக்கு அச்சிட்டு தமிழ்த் தொண்டு செய்த மகான். குறைந்த விலை என்றால் உண்மையிலேயே மிகவும் குறைந்த விலை. உயர்ந்த வெள்ளைக் காகிதத்தில் எந்தவிதமான அச்சுப்பிழையும் இன்றி வெளியிட்ட உத்தமர். திருக்குறள், மாகாகவி சுப்பிரமணிய பாரதி கவிதைகள், ராஜாஜியின் சக்கிரவர்த்தித் திருமகன் – வியாசர் விருந்து என்பன போன்றவைகள் வை. கோவிந்தன் சக்தி பிரசுரம் மூலமாக மலிவுப் பிரசுரமாக வெளியிட்டு தமிழ்த் தொண்டு ஆற்றியவர். அவரும் வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளார். 

இந்த முன்னுரையை இத்துடன் முடித்திக்கொண்டு, சர்மாவின் கூன் நிமிர்ந்த சம்பவத்தைப் பார்ப்போம். 

கு. அழகிரிசாமியின் வார்த்தையில்:

“பர்மாவிலிருந்து குடும்பத்தோடு கால் நடையாக நடந்து இந்தியா வந்து சேர்ந்தார் சர்மா. அப்பொழுது உடல் நிலை அசெளகரியம் அடைந்த்துடன், முதுகும் கூனி விட்ட்து. நிமிர்த்து நிற்க முடியாமல் மிக மிக அதிகமாகக் கூனிக் கொண்டிருந்தார்.

மேஜையின் முன் அட்கார்ந்து எழுத முடியாது. படுத்துக் கொண்டே 200 பக்கம், 300 பக்கமுள்ள பெரிய நூல்கள் சிலவற்றை எழுதினார்.

இந்தச் சமயத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் சென்னைக் வந்திருந்தார். அவர் வைத்தியத்தில் மகா நிபுணர். பெயர் புகழும் பெருமாள் பிள்ளை. காசு வாங்காமல் வைத்தியம். யாரும் காசு கொடுக்கவும் கூடாது. கொடுத்தாலும்  கோபித்துக் கொண்டு போய் விடுவாராம்.

அவரும் சக்தி காரியாலாய உரிமையாளர் வை. கோவிந்தனும் நெருங்கிய நண்பர்கள்.

வை. கோவிந்தன் அந்தச் சாமியாரை சர்மாவின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். சர்மாவின் புத்தகங்கள் அப்பொழுது சக்தி காரியாலயத்தில் வெளிவந்து கொண்டிருந்தன.

சாமியார் சர்மாவைப் பார்த்தார். முதுகு எவ்வளவு நாட்களாக கூனியிருக்கிறது என்ற விவரத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

மறுநாள் சர்மாவின் வீட்டுக்குப் போய், அவருடைய கால்களைப் பிடித்துச் சுண்டி விட்டாராம்.

சர்மாவின் கூனல் போய் விட்டது !  எத்தனையோ நிபுணர்களின் சிகிச்சைக் கிடையில் இந்தக் குறையை மிக எளிதில் போக்கிவிட்ட சாமியாருக்கு ஏதேனும் மரியாதை செய்ய வேண்டுமென்று சர்மா விரும்பினாராம். சாமியாரோ சிரித்துக் கொண்டே போய் விட்டார்.”

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017