கர்நாடகாவில் காங்கிரஸின் வரலாற்று வெற்றி





காங்கிரஸ் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் மொத்த முள்ள 224 தொகுதிகளில் தனித்து நின்று 135 சீட்டுக்கள் அதாவது ஆட்சி அமைக்க வெற்றி பெற வேண்டிய 113 சீட்டுக்களை விட 22 சீட்டுக்கள் வென்று அசுர வெற்றி பெற்றுள்ளது. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் பெற்ற 80 சீட்டுக்களை விட 55 சீட்டுக்கள் அதிகம் பெற்று பிஜேபி ஜேடிஎஸ் இரண்டு கட்சிகளையும் மக்கள் தோற்கடித்து விட்டார்கள்

பிஜேபி இந்தத் தேர்தலில் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்ததுமோடி முழு மூச்சுடன் தேர்தல் பிரசாரம் செய்தார். அமித் ஷா நட்டா பல மத்திய அரசு மந்திரிகள் பிஜேபி மாநில முதல்வர்கள் தமிழ் நாட்டு பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலை என்று ஒரு பெரும் பட்டாளமே தேர்தல் பிரசார களத்தில் மும்முரமாக இயங்கியது. பிரசாரத்தில் எந்த தொய்வையோ, குறையையோ காணமுடியாத அளவிற்கு பிஜேபி கட்சியின் செயல்பாடு இருந்தது. இவ்வளவு முயன்று தோல்வி கண்டாலும், வெறும் 66 சீட்டுக்களே காங்கிரஸ் பெற்ற சீட்டுக்களை ஒப்பிடும் போது இந்த சீட்டுக்கள் பாதிக்கும் 3 சீட்டுக்கள் குறைவாகவே பெற்றது அதிர்ச்சித் தோல்வி என்பதில் எந்தவித ஐயமும் இல்லை தான்.

பஜ்ரங்தாளைத் தடை செய்வோம் அது முஸ்லீம் தீவிரவாத இயக்கம் போன்றது தான் என்ற காங்கிரசின் பிரசாரத்தையும் தீவிரமாக மோடி உட்பட பலரும் ஹனுமானுக்குத் தடையா? – என்று பீரங்கிப் பிரசாரம் செய்து ஹனுமாரை நினைத்து தாமரைக்கு ஓட்டுப் போடுங்கள்என்ற அளவில் பிஜேபி பிராசாரம் சூடு பிடிக்க, காங்கிரசும் ஹனுமான் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து தாங்களும் ஹனுமான் பக்தர்கள் தான் என்று ஓட்டர்களை எண்ண வைத்தார்கள்.

காங்கிரசின் வெற்றி மஹத்தான ஒன்று என்பதை கீழ்க்கண்டவைகள் நிரூபிக்கும்:

1.   கர்நாடகா தேர்தலில் பிஜேபி 31 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. இது பிஜேபி வென்ற 66 தொகுதிகளின் சரிபாதி என்பதைக் கவனிக்க வேண்டும். இது ஒரு பெரும் பின்னடைவு என்பது அதிர்ச்சி தரும் செய்தி. டெபாசிட் இழக்காமல் இருப்பதற்கு வேட்பாளர் நின்ற தொகுதியில் போடப்பட்ட மொத்த ஓட்டுக்களில் 1/6 என்ற அளவில் பெற வேண்டும் என்பது விதி. அந்தக் குறைவான ஓட்டுக்களைக் கூட பிஜேபியால் 31 தொகுதிகளில் பெற முடியாமல் தோற்றது ஒரு பெரும் பின்னடைவே. 

2.   காங்கிரஸ் 26 லட்சம் ஓட்டுக்கள் பிஜேபியை விட அதுவும் பரவலான பல தொகுதிகளிலும் பெற்றுள்ளது. காங்கிரசின் ஓட்டு சதவிகிதம் 42.88 – பிஜேபியின் ஓட்டு சதவிகிதம் – 36 – வித்தியாசம் – 6.88 என்பது பிஜேபிக்கு அதிர்ச்சி தரும் தகவலாகும். 

அதன் விவரம்: 

காங்கிரஸ் – 167 லட்சம் ஓட்டுக்கள்

பிஜேபி      141 லட்சம் ஓட்டுக்கள்

ஜேடிஎஸ்    52 லட்சம் ஓட்டுக்கள்

3.   135 சீட்டுக்களில் காங்கிரஸ் 59 சீட்டுக்களை சென்ற தேர்தலை ஒப்பிடும் போது தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேலும் 52 சீட்டுகளை பிஜேபியிடமிருந்தும் 22 ஜேடிஎஸ் இடமிருந்தும் சுயோட்சையிடமிறுந்து 2 ம் கைப்பற்றி உள்ளது. ஆகையால் இது பிஜேபியை கவலை கொள்ளவே செய்யும். 

அதே சமயம் 66 சீட்டுகளில் பிஜேபி தக்க வைத்துள்ள சீட்டுக்கள் 43 தான். காங்கிரஸிடமிருந்து 16 சீட்டுக்களும், ஜேடிஎஸ் இடமிருந்து 6 சீட்டுக்கள், சுயோட்சையிடமிருந்து 1 ஆக மொத்தம் 66. இதிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. 

4.   எஸ்.டி. ரிசர்வ் மொத்த 15 தொகுதியில் 14 தொகுதிகளில் வென்று சரித்திரம் படைத்துள்ளது. மொத்தமுள்ள 36 எஸ்.சி. ரிசர்வ் தொகுதியிலும் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வென்றுள்ளது. இது காங்கிரசின் 5 – இலவச வாக்குறிதிகளின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று கணிக்கத் தோன்றுகிறது.

இந்த விவரங்கள் காங்கிரசை மகிழ்ச்சிக் கடலிலும், பிஜேபியை சோக சமுத்திரத்திலும் தள்ளி, வருகின்ற 2024 லோக் சபா மக்களவைத் தேர்தலுக்கு பிஜேபியின் தேர்தல் உத்தியை மறுபரிசீலனை செய்ய வைக்கும். .

இதில் குமாரசாமியின் ஜேடியுஎஸ் கட்சியில் நிலை நாங்கள் கிங்க மேக்கர் இல்லை கிங்கே தான் என்றேல்லாம் சொல்லி வந்தது இப்போது பகல் கனவாகி அவரது மகனும் மீண்டும் தோல்வி அடைந்துள்ளார். 2018-ல் பெற்ற 37 சீட்டுக்கள் இந்த 2023 தேர்தலில் 19 ஆக சரிபாதியாகப் போய் தந்தையும் மகனும் கண்ணீர் விடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் அரசியல் களம் இன்னும் சுருங்கும் என்று தான் எதிர்பார்க்கப் படுகிறது.

புள்ளி விபரங்களை சிறிது கூர்ந்து உற்று நோக்கினால் பிஜேபியின் தோல்வி ரொம்பவும் மோசம் என்று சொல்ல வேண்டியதில்லை என்ற சமாதானம் சொல்ல உதவும் சில காரணீகள் இதோ உங்கள் பார்வைக்கு:

ü  பிஜேபி படு மோசமாக சீட்டுக்களை வென்றாலும் அதன் ஓட்டு சதவிகிதம் அதே 36% என்ற நிலையில் மையம் கொண்டுள்ளது. ஜேடிஎஸ் சதவிகிதம் 5% குறைந்தது அநேகமாக இது அப்படியே காங்கிரசுக்குச் சென்று விட்டதால் தான் இந்த காங்கிரசின் அபிரிமிதமான வெற்றி. ஆகையால் இது ஓட்டர்களின் காங்கிரஸ் அபிமானம்என்று கணிப்பதை விட பிஜேபியின் வெறுப்பு ஜேடிஎஸ் யிடம் நம்பிக்கை குறைவுஎன்ற அடிப்படையில் காங்கிரஸ் பெற்ற வெற்றி என்று சொல்லலாம். 

ü  2.5% குறைவாக வெற்றி பெற்ற சீட்டுக்கள் 33. இதில் காங்கிரஸ் 18 – பிஜேபி 12 என்ற அளவில் இருப்பதால் காங்கிரசின் 18 சீட்டுக்கள் பிஜேபிக்குக் கிடைக்கலாம். அதே சமயத்தில் குறைந்த வாக்கில் வென்ற 12 சீட்டுக்களையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் பிஜேபிக்கு உள்ளது. 

ü  கர்நாடகாவில் தேர்தலில் 1989 வருடத்திலிருந்து ஒரே கட்சி ஆட்சியில் இல்லை, ஒட்டர்கள் மாறிமாறித் தான் ஓட்டளிக்கிறார்கள்.  இது 34 வருட நிகழ்வு. சுமார் 7 சட்ட மன்ற தேர்தல் நிலையும் இதுவாகும். இந்த நிலையை மாற்ற நினைத்த பிஜேபி காங்கிரசின் 40% ஊழல் பிரசாரத்தால் படுதோல்வியைத் தழுவ வேண்டியதாகி விட்டது. 

ü  காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றாலும் ஆட்சியில் பங்கு பெறவே இரு அணிகள் மும்முறமாக போட்டு போட்டுக் கொண்டு குஸ்திபோடும் அளவில் பொதுவெளியில் வலம் வருகிறார்கள். இதனால் காங்கிரஸ் முழுமையாக 5 ஆண்டுகள் ஆளுமா என்பதும் ஒரு கேள்விக் குறியே.

ü  காங்கிரசின் 5 அம்ச இலவங்கள் அளிக்கப்படுமா? – என்பதும் ஒரு பெரும் பொருளாதாரப் பிரச்சனையாக உருவெடுக்கும் அபாயமும் இருக்கிறது. இருதலைக் கொள்ளி எறும்பாக காங்கிரஸ் திணரும் நிலையும் ஏற்படலாம். 

ü  பிஜேபி கட்சியின் கொள்கையான 75 வயதிற்கு மேல் தேர்தலில் நிற்க வாய்ப்பு இல்லை என்பது கட்சியின் வருங்கால கட்சியைப் பலப்படுத்தும் திட்டமாகும். அதனை இந்த கர்நாடகா தேர்தலிலும் கடைப்பிடித்து பல நீண்டகால மூத்த தலைவர்களுக்குப் பதில் இளம் வேட்பாளர்களைக் களத்தில் இறக்கி சோதனை செய்து பார்த்ததில் வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் 92 வயது வேட்பாளரையும் நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார்கள். இருப்பினும் பிஜேபியின் ஓட்டு சதவிகிதம் இதனால் பாதிக்கப்படாவிட்டாலும் – 36 % என்ற ஓட்டு சென்ற தேர்தலைப் போல் 2023 தேர்தலிலும் தக்க வைத்துக்கொண்டுள்ளதால் புதிய இளம் வேட்பாளர் திட்டம் படு தோல்வி என்று கூறமுடியாது. ஆனால் ஓட்டு சதவிகிதம் வரும் தேர்தல்களில் கூடினால் இது கட்சியின் திட்டத்திற்கு வலு சேர்த்து காங்கிரஸ் போன்ற பல கட்சிகளும் புதிய இளம் வேட்பாளர்களை நிற்க வைக்க வாய்ப்புள்ளது.

ஒன்று மட்டும் சொல்லலாம். இது காங்கிரஸ் சரித்திரம் படைத்த வெற்றி. இருப்பினும் ஏனோ மக்களுக்கு இந்த வெற்றியில் அமிரிமிதமான களிப்பு உண்டானதாகத் தெரியவில்லை.

யார் முதன் மந்திரி மற்ற மந்திரிகள் என்பதில் இழுபறி. 10 பேர்கள் முதல் மந்திரி துணை மந்திரியோடு 8 மந்திரிகள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டும், இன்னும் இலாக்காக்கள் அளிக்கப்பட வில்லை. மற்ற மந்திரிகள் யார் என்பதில் ஒரு திடமான வழிகாட்டல் இல்லை. அததுடன் முஸ்லீம் கிருஸ்துவர்கள் தாங்களால் தான் காங்கிரஸ் வென்றது எங்களுக்கு மந்திரிப் பதவிகள் கொடுங்கள் என்ற மிரட்டல்கள் வேறு.

எது எப்படி இருப்பினும் காங்கிரஸ் கர்நாடகாவை சிறப்பாக ஆள வாழ்த்துகிறோம்.

இதற்கு முழுக் காரணமும் சோனியா ராஹுல்- பிர்யங்கா ஆகிய மூவர் தான் காரணம் என்று ஒரே கோரசாக காங்கிரஸ் துதிபாடுகிறது. ஆகையால் அவர்களையும் வாய்மை பாராட்டுகிறது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்க்கே காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடந்த இந்தத் தேர்தல் வெற்றி அவருக்கு புகழ் சேர்க்கும் என்பதும் உண்மையாகும். அவரையும் பாராட்டினால் தான் இந்த காங்கிரசின் வெற்றி பூர்த்தியாகும்.

கர்நாடகா காங்கிரஸ் திறமையாகவும், சிறப்பாகவும், ஒற்றுமையாகவும் ஆட்சி செய்ய எல்லாம் வல்ல மூகாம்பிகைத் தேவியை வேண்டுகிறோம்




 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017