ஹிந்து மதம் – மாதமெல்லாம் பண்டிகைகள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள்

 ஐப்பசி மாதத்தில் ஹிந்து மதத்தினர் கொண்டாட இருக்கும் பண்டிகைகளின் பட்டியல்:

1.   திபாவளி – 24 – 10 – 2022திங்கட் கிழமைஐப்பசி – 7-ம் நாள்

2.   கந்த சஷ்டி விரதம் & சூர சம்ஹாரம் – 25 – 10 – 2022செவ்வாய்க் கிழமை தொடங்கி சூர சம்ஹாரம் – 30 – 10 2022 – ஞாயிற்றுக் கிழமை அன்று ஆறு நாட்கள் கொண்டாட்டம் முடிகிறது. – ஐப்பசி – 8-ம் நாளிலிருந்து 13-ம் நாள் வரை.

3.   சிவ பிரானின் லிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகம் – 08 – 11 – 2022 – செவ்வாய்க் கிழமைஐப்பசி – 22-ம் நாள்.

4.   மாமன்னர் ராஜராஜன் பிறந்த நாள் விழா - 1037-வது சதய விழா - 03 நவம்பர் 2022 – 17 ஐப்பசி 2022.

ஹிந்து மதம் தூய வாழ்வைசந்தோஷ வாழ்வைஅன்பு வாழ்வைஅற வாழ்வை - ஆன்மீக வாழ்வைதார்மீக வாழ்வை ஹிந்துக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வலியுறுத்தும் விதமாகப் பல பண்டிகைகள், திருவிழாக்கள், கலாச்சார விளக்க உபன்நியாசங்கள் என்று நல் வழிப்படுத்தும் உன்னத மதம். அந்த மதத்தில் பிறந்ததற்கு ஹிந்துக்கள் அனைவரும் பெருமை கொண்டு, ஆனந்தமாக விழாக்களில் பங்கு கொண்டு ஆண்டவன் அருளைப் பெறுவோமாக.



தீபாவளி: 

இந்துக்களின் மிக பெரிய திருவிழாவான தீபாவளி இந்த மாதம் வருகிறது. அனைவரும் எண்ணெய் ஸ்னானம் செய்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவர். புதுமண தம்பதியர் தலை தீபாவளி கொண்டாடுவர்.

 2022 ம் ஆண்டில் தீபாவளி திருநாள் அக்டோபர் மாதம் 24 ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி மகாலட்சுமிக்கு உரிய

நாளாகவும் கொண்டாடப்படுவதால், அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்வது விசேஷமானதாகும். தீபாளி நாளில் தான் மகாலட்சுமியை வணங்கி, சகல செல்வ சம்பத்துக்களையும் குபேரர் பெற்றதாக ஐதீகம். இதனால் அன்றைய தினம் லட்சுமி தேவியை வணங்குவதால், அவளின் பரிபூரண அருளை பெற முடியும



கந்த சஷ்டி திருவிழா :

இம்முறை திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில், 6 நாள் ஸ்கந்த சஷ்டி விரதம் அக்டோபர் 25 ஆம் தேதி தொடங்குகிறது. சூரசம்ஹாரம் அக்டோபர் 30 தேதி வருகிறது.

ஐப்பசி அமாவாசை அடுத்து வரும் ஆறு நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். சூரபத்மனை வீழ்த்தி முருக பெருமான் வெற்றி பெற்றதையே இவ்விழாவாக கொண்டாடப்படுகிறது. செந்தில் ஆண்டவனின் அனைத்து கோயில்களிலும் மிகப்பெரிய விழாவாக நடைபெறுகிறது



அன்னாபிஷேகம் :

நவம்பர் 8-ம் தேதி - ஐப்பசி 22-ம் தேதி பௌர்ணமியில் அனைத்து சிவாலயங்களிலும் லிங்க திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். தஞ்சை பெரிய கோவிலில் மிக பெரிய விழாவாக நடைபெறும். உணவு தானியங்கள் பெருகி பசி பிணி ஏற்படாது.

 


மாமன்னர் ராஜராஜன் விழா:

1037-வது ராஜராஜன் சதய விழா 03 நவம்பர் 2022 – 17 ஐப்பசி 2022 - சதயத்தில் பிறந்த மாமன்னர் ராஜராஜரை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.

கி.பி 985ம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் ராஜராஜ சோழனுக்கு முடி சூட்டப்பட்டதை நினைவு கூறும் விதமாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி சதய நாளில் தஞ்சையில், ராஜராஜனின் திருவுருவத்துக்கு மாலை அணிவித்தல், திருமுறை வீதி உலா, தஞ்சைப் பெருவுடையார் பெரியநாயகி மூர்த்தங்களுக்கு அபிஷேகம், பெருந்தீப வழிபாடு, இசை, இலக்கிய, நாட்டிய நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகளும் இடம் பெறும். 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017