47 ஹெக்டர் பரப்பளவு - 108 தூண்கள் - உஜ்ஜயினி மகாகாளேஷ்வர் கோயில் சிறப்பம்சங்கள்!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது ஆன்மீக நகரமான உஜ்ஜயினியில் உள்ளது, மகாகாளேஷ்வர் கோயில். ரூ.316 கோடி ரூபாயில் ‘ஸ்ரீமஹாகால் லோக்’ என அழைக்கப்படும் வழித்தடத்திற்கான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை பிரதமர் மோடி அக்டோபர் 11ம் தேதி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நாட்டில் உள்ள
அனைத்து சிவன் கோவில்களும் வடக்கு நோக்கி உள்ள நிலையில், உஜ்ஜயினி
மகாகாலேஷ்வர் கோவிலின் நுழைவாயில் தெற்கு நோக்கி உள்ளது தனிச்சிறப்பாக
கருதப்படுகிறது. இங்குள்ள மற்றொரு சிறப்பு என்னவென்றால், இக்கோயிலின் மூலவரின் கருவறை மூன்று அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது.
தரைமட்டத்துக்கு கீழேயும் ஒரு கருவறை அமைந்துள்ளது. அதற்கு படிக்கட்டுகள்வழியாக
சென்று தரிசிக்கவேண்டும். முதன்மைக் கருவறையானது பெரிதாக வட்டவடிவில் உள்ளது.
அதில் மாகாளர் பெரிய லிங்க வடிவில் காட்டியளிக்கிறார்.
மஹாகால்
லோக் திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
வரலாற்றுச்
சிறப்பு மிக்க இத்திருத்தலத்திற்கு உலக அளவிலான நவீன வசதிகளை வழங்குவதற்காகவும், பக்தர்களின்
வருகையை இருமடங்காக அதிகரிப்பதற்காகவும் “மஹாகால் லோக்” திட்டத்தின் தொடங்கப்பட்டது.
ரூ.856 கோடி செலவில் 'மகா காளேஷ்வர்
கோவில் வழித்தடத் திட்டம்' மேற்கொள்ளப்பட்டது. ரூ. 316 கோடி மதிப்பீட்டில் முதல் கட்டப்
பணிகள் நிறைவடைந்துள்ளன.
12 'ஜோதிர்லிங்கங்களில்' ஒன்றான
மஹாகாளேஷ்வர் கோயில், இந்துக்களின் புனித இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். சிவராத்திரி நாளில்
லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிகழ்ச்சியில்
பேசிய பிரதமர் மோடி, "ஆன்மிகம் ஒவ்வொரு துகளிலும் அடங்கியுள்ளது. மற்றும்
தெய்வீக ஆற்றல் உஜ்ஜயினின் ஒவ்வொரு மூலையிலும் பரவியுள்ளது. உஜ்ஜயினி
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் செழிப்பு, அறிவு, கண்ணியம் மற்றும் இலக்கியத்திற்கு வழிவகுத்தது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா, தான் இழந்த
பொலிவை புதுப்பித்தல் மூலமாக பெற்றுவருகிறது,” என்றார்.
வாழ்க பாரதம் ! வாழ்க தமிழகம் ! வாழ்க கோயில் வழிபாடு ! வாழ்க பக்தி மார்க்கம் !
Comments