சிலைகளால் சீரழியும் தமிழகம்

 பழம் தமிழ் நாட்டில் வீதியிலே சிலைகள் வைக்கும் பழக்கம் இல்லை. கோயிலில் வழிபடு தெய்வங்களின் சிலைகளைத் தான் பிரிதிஷ்டை செய்து வழிபடும் பழக்கம் தான் தமிழ் நாட்டில் இருந்துள்ளது. கோயிலைக் கட்ட உதவிய மன்னர்களின் சிலை ஒன்று கோயில் வளாகத்தில் ஓரத்தில் செதுக்கப்பட்டிருக்கும். அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது ஒரு சரித்திரச் சான்றுக்காகவே நிருவப்பட்டதாகும். தெய்வ சன்னிதானத்தில் மன்னர்களும் தங்களை முன்னிலைப்படுத்த விரும்புவதில்லை என்பது உண்மையாகும். இன்னும் சொல்லப்போனால் மன்னர்களின் இருப்பிடங்களும் சாதாரணமானவையாகவே இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் வடக்கே அரசர்களின் அரண்மனைகள் போல் இங்கே தெற்கில் மன்னர்களுக்கு அரண்மனைகள் பிரம்மாண்டமாக்க் கட்ட படவில்லை என்பதையும் இந்த சமயத்தில் வாசகர்கள் உணர வேண்டும்.

மேலும் பக்தி மார்க்கத்தில் திளைத்த சைவம் தழைக்கச் செய்த நாயன்மார்கள், ஆழ்வார்கள், மத ஆச்சரியர்களான அத்வைதம் போதித்த ஆதி சங்கரர், வசிஷ்டாத்வைத சிந்தாந்த குரு ராமானுஜர், த்வைத மத போதகர் மத்துவாச்சாரியார் ஆகியவர்களுக்கும் வீதியிலே சிலை எழுப்பும் பழக்கம் இல்லை. அவர்கள் கோயிலில் சில சந்நிதிகளில் நிருவப்பட்டு, பூஜிக்கப்படுகிறார்கள். இது ஹிந்து சமயம் தழைக்க ஏற்பட்ட பழக்கம். அது அவர்களைப் பாராட்டுவதற்காக இல்லாமல், அவர்களின் வழிகாட்டுதல்களைப் பின் பற்றவே அந்தச் சிலைகள் எழுப்பப்பட்டுள்ளன.  

முகலாயர், ஆங்கிலேயர் மற்றும் பிரஞ்சுபோர்ச்சுகீசியர் ஆகியவர்களின் ஆதிக்கத்தில் பாரதம் அடிமைப்பட்ட சமயத்தில் தான் அரசர்களுக்கு சிலைகள், வசிக்க பிரம்மாண்டமான அரண்மனைகள் ஆகியவைகள் கட்டப்பட்டுள்ளன. சிலைகள் அப்போது தான் வீதிகளில் நிறுவப்படும் பழக்கம் பாரத பூமியில் அந்நியர்கள் ஆட்சியின் போது கடைப்பிடிக்கப்பட்டு, அந்தப் பழக்கம் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அரசியல் கட்சிகளால் தங்கள் தலைவர்களுக்கு சிலைகள்பிரம்மாண்டமான சமாதிகள் வீதிகளிலும், பொது இடங்களிலும் அரசியல் ஆதாயங்களுக்காக வைக்கப்பட்டன. அந்தக் அரசியல் கலாச்சாரம் அனைத்துக் கட்சிகளாலும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி ஆட்சியில் அவரது கட்சியின் சின்னமான யானை வீதிக்கு வீதி மக்கள் வரிப்பணத்தில் நிறுவப்பட்டதை இங்கு நினைவு கூறவேண்டும். அதற்கு அடுத்த படியாக தமிழ் நாட்டு இரு திராவிடக் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் தலைவர்களுக்கு பொது இடங்களில் சிலைகள், சமாதிகள்அவைகளை மிகுந்த பொருட் செலவில் புதிப்பித்தல் என்று மக்கள் வரிப்பணம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தமிழ் நாட்டு மக்கள் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிப்பதில்லை என்பது ஒரு வேதனைக் குறியதாகும்.

காங்கிரஸ் பதவி இழந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றிய உடன் வீதிக்கு வீதி நாத்திக வாத வாசகமானகடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டிஎன்பதை பெரியார் என்ற திராவிடத் தலைவரான பெரியாரின் சிலைகளை வீதிக்கு வீதி தமிழ் நாடெங்கிலும் முக்கிய வீதிகளின் மையப்பகுதிகளில் மக்கள் வரிப்பணத்தில் அமைத்தனர். வரி கட்டும் மக்களில் பெரும்பாலோர் கடவுளை நம்பும் பக்தர்கள்வரி கட்டும் நாத்திகவாதிகள் மிகவும் குறைவானவர்களே. அப்படி இருக்கும் போது தி.மு..வினர் ஆட்சிக்கு வந்தவுடன் பெருவாரியான மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக எந்தவித எதிர்ப்பும் இன்றி சிலைகளை நிறுவினர்.

பெரியார் ஒரு தெலுங்கர்தமிழ் மொழிப் பற்றி அற்றவர்தமிழ் மொழியையே வெறுத்தவர்ஆபாசப் பேச்சு - ஆபாச நடத்தை வயதான காலத்தில் சிறுவயதுப் பெண்ணைக் கல்யாணம் செய்தல்ஆகியவை விரும்பத்தகாதஏன் வெறுக்கத்தக்க நடவடிக்கைகளின் மொத்த உருவம்என்ற இவ்வளவு குறைபாடுகள் உள்ளவருக்கு தமிழ் நாட்டுத் தெருக்களிலெல்லாம் சிலைகள் என்ற நிலை தமிழ் நாட்டுக்குத் தலை குனிவைத் தான் தரும். இதை இப்போதைய சமூதாயம் எதிர்க்காவிடினும், வரும் காலம் இது குறித்து அறிந்து, அவைகளுக்கு ஒரு முடிவு கட்டினாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.

அந்தணர்களைப் பாப்பான் என்று கேலியும் கிண்டலும் செய்து, அவர்களின் அக்கரஹாரங்களை பெரியாரின் திகச் சீடர்கள் சூரையாடி, அங்குள்ள பிராமணப் பெண்களை மானபங்கப்படுத்தியதையும், பக்தி மார்க்கத்தைக் கேலி செய்து நாத்திக வாதத்தை பரப்பிய பெரியாரைப் போற்றுவதும், துதிப்பதும் எந்த வகையில் நியாயம் என்ற கேள்விக்கு ஒழுங்கான பதில் இல்லை. இது போகட்டும். தமிழை மிகவும் கேவலமானச் சித்தரித்தவர் பெரியார். தெய்வப்புலவர் திருவள்ளுவரின் அற்புத நீதி நூலான திருக்குறளை மிகவும் கீழ்த்தரமாக விமரிசித்தவர் இந்தப் பெரியார்.

இதை எல்லாவற்றையும் கூட பொறுத்துக் கொண்டாலும், இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளிக்கக் கூடாது என்று குரல் கொடுத்த தேசத் துரோகி பெரியார். அவர் இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுத்தாலும், தமிழ் நாட்டிற்குச் சுதந்திரம் அளிக்காமல், ஆங்கிலேயர்கள் அவர்களின் ஆட்சியின் கீழ் தமிழ் நாடு இயங்க வேண்டும் என்று கொள்கையாக வெளிப்படையாக குரல் கொடுத்த ஆங்கிலேயர்களின் அபிமானி தான் இந்த ஈரோட்டுக்காரர். மேலும் இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்ற போது, அந்தப் புனிதமான நாளைதுக்க தினமாக - கருப்பு தினமாக துக்கம் அனுசரித்தவர் தான் இந்தப் பெரியார் என்ற சிறியார். அவருக்கு ஏன் இவ்வளவு மரியாதை என்று தமிழ் நாட்டு மக்கள் குரல் கொடுக்கும் நேரம்காலம் வராமல் போகாது.

ரஷ்யாவில் லெனின், ஸ்டாலின் ஆகியவர்களின் சிலைகள் மக்களின் எதிர்ப்பார்பால் அகற்றப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. அதிலும் லெனின் ரஷ்யாவின் தன்னிகரில்லாத் தலைவராகவே போற்றப்பட்டவர்.

இப்போது திரு கருணாநிதி அவர்களின் மகன் ஸ்டாலின் ஆட்சி நடக்கிறது. முன்பு எடப்பாடி ஆட்சியின் போது ஸ்டானின் அப்பா இறந்தார். அப்போது அவரது  உடலை எம்.ஜி.ஆர். உடல் புதைக்கப்பட்ட இடத்திற்குப் பின்னால் ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்டு மிகுந்த பொருட் செலவில் நினைவுச் சின்னம் எழுப்பட்டதைப் போல் தமது அப்பாவின் உடலையும் அண்ணாத்துரையின் சமாதிக்குப் பின் புறம் புதைக்க கண்ணீர்விட்டு கோர்ட் படியும் ஏறினார். எடப்பாடி ஆட்சியின் தயவால் அது நிறைவேறியது.

இப்போது தந்தையின் நினைவிடம் மக்கள் வரிப்பணத்தில் மொத்தம் 119 கோடி கீழ்க்கண்டவைகளுக்காக செலவு செய்யப்பட இருக்கிறது.

1. ஸ்டானின் தந்தையின் இப்போதைய நினைவிடம் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

2. வங்கக் கடலில் திருவள்ளுவர் சிலை போல் கடலிலுள் பாலம் அமைத்து பிரம்மாண்டமான பேனா வடிவில் தூண் – 134 அடி உயரத்தில் 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்' 80 கோடி ரூபாய் செலவில் எழுப்பப்பட உள்ளது.

கன்னியா குமாரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை அவரது திருக்குறளை நினைவு கூறும் விதமாக திருக்குறளின் மொத்த குறளான 133 என்பதால் அந்த திருவள்ளுவரின் சிலையும் 133 அடியாகும். ஆனால் ஸ்டானிலின் விடியல் அரசுகுறலோவியம்படைத்த தமது தந்தையின் பேனா சின்னம் ஒரு அடி கூடுதலாக 134 அடி உயரத்தில் அமைய இருக்கிறது.

கருணாநிதியின் உடன் பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்களை நினைவூட்டும் விதமாக பேனா வடிவில் அவருக்கு நினைவிடம் – அதுவும் கடலில் பாலம் அமைத்துச் செல்லும் விதமாக அமைய இருக்கிறது.

அந்த வகையில், மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரம்மாண்ட பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை அமைக்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வங்ககடலில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும், பாலத்தில் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பேனா வடிவ நினைவு சின்னத்தை பார்க்கும் வகையில் பாலம் அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவத்தில் பிரம்மாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது.

முன்பு தி.மு.. மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட முகப்பு நுழைவு வாயிலில் இரட்டை இலைச் சின்னம் இருப்பதாக எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் இப்போதோ அதே திமுக எந்தவிதமான கூச்சமும் இன்றி கருணாநிதியின் நினைவிடத்தில் அவர்களின் தேர்தல் சின்னமான உதய சூரியன் உதயமாகப் போகிறது.

இவ்வாறு மக்கள் வரிப்பணம் செலவிடப்படுவதால் மக்கள் விழித்து விட்டால் உதய சூரியன் அஸ்தமன சூரியனாகக் கூடிய சீக்கிரம் வந்து விடும். ஆனால் ஸ்டானின் அரசு இதைப் பற்றி எல்லாம் கவலைப் படுவதாகத் தெரியவில்லை.

இன்னொறு செய்தியும் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விழைகிறேன்:

100 கோடி செலவில் பெரியார் சிலையுடன் கூடிய பெரியார் உலகம் திருச்சி அருகில் உள்ள சிறுகனூரில் உருவாக உள்ளது.

40 அடி பீடத்தின் மேல் 95 அடி உயரத்தில் பெரியார் சிலை (மொத்தம் 135 அடி) 27 ஏக்கர் பரப்பில் திருச்சிக்கு அருகில் உள்ள சிறுகனூரில் பெரியார் உலகம் என்ற மிகப் பெரிய வளாகம் ஒன்று அமைய இருக்கிறது. அதன் செலவினை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார அறக்கட்டளை ஏற்கிறது என்று சொல்லப்பட்டாலும், விடியல் அரசு மக்கள் வரிப்பணத்திலிருந்து அந்த அறக்கட்டளைக்கு நன் கொடையாகக் கணிசமான அளவில் பணம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. இந்தப் பெரியார் உலக வளாகத்தில் தந்தை பெரியார் ஒலி, ஒளி காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியம், அறிவியல் கண்காட்சி, கோளரங்கம், பெரியார் படிப்பகம், நூலகம், குழந்தைகளுக்கான விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய என பல அம்சங்கள் உண்டு என்று தெரியப்படுத்தப்படுகிறது.

இப்போது பெரியார் பிறந்து 143 ஆண்டுகளாகின்றன. 150 ஆண்டுகளுக்குள் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.

 

கருணாநிதியின் இலக்கிய சேவையும் சரி, தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈவி.ராமசாமி நாயக்கரின் கொள்கைகளும் சரி அவைகளின் தரம் எந்தவிதமான அரசியல் நிர்பந்தமின்றி ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் அரசியல் ரீதியாக சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்களே அன்றி அவர்கள் துறையில் மேம்பட்டவர்கள் என்று கணிக்க முடியாது என்பது தான் வாய்மையின் தீர்ப்பு.

 

இருவருக்கும் அமைந்த மற்றும் அமைய இருக்கும் நினைவுச் சின்னங்கள் அவர்களின் கொள்கைகள், திறமைகள், எழுத்துக்கள் ஆகியவைகளைச் சீர்தூக்கி மதிப்பிடாமல், அரசியல் அன்பு அதிகாரம் ஆதிக்கம் ஆகியவைகளின் அடிப்படையில் உருவானவைகள். அதுவும் மக்கள் வரிப்பணத்தில். அரசியலில் தூய்மையை எதிர்பார்ப்பது மிகவும் துர்லபம். சிலைகளால் சீரழழும் தமிழகத்திற்கு விமோசனம் வரவேண்டும். மக்கள் வரிப்பணம் விரையம் ஆவதைத் தடுக்க வேண்டும். விழிப்புணர்வுடன் தேர்தல் சீட்டை தமிழக மக்கள் பயன்படுத்தும் போது அரசியல் தூய்மை உண்டாகும். அந்த நன் நாள் வெகு விரைவில் வர ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக





Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017