பாரதீய யுவ சக்தி டிரஸ்ட்
எஸ். ஷங்கருக்கு லட்சுமி அத்தை மகள்.
அது மட்டும் அன்று. அவர் லூகாஸ் டிவிஎஸ் என்ற பெரும்
உற்பத்தித் தொழிற்சாலையில் உற்பத்திக்கு அவசியமான உபரிப் பாகங்களை சிறு தொழில் செய்வோரிடம்
தரம் – விலை அறிந்து கொள்முதல் செய்து வைக்கும் அதிகாரியாகப்
பணியாற்றிய அனுபவத்தால் லட்சுமியின் பாரதீய யுவ சக்தி டிரஸ்டின் வழிகாட்டி ஆலோசகர்களுக்கு
ஆலோசனைகள் – அனுபவ ரீதியான உபயோகமான அணுகுமுறைகள் ஆகியவற்றைப்
பற்றி விளக்கி அந்த டிரஸ்டில் பங்குகொண்டவர்.
அந்த
நியூஸ் 7 சேனல் பேட்டியில் லட்சுமி
தமது நிறுவனமான பிஒய்யெஸ்டியின் கொள்கை ( அதன் பெயரின் ஆங்கியல்
முதல் எழுத்துக்களே அதன் கொள்கை விளக்கமாக இருக்கிறது – BYST –
BUSINESS YOUTH STARING TOGETHER – என்பதை வாசகர்கள்
கவனக்க வேண்டுகிறேன் – அந்த டிரஸ்டின் மின் வலை விலாசம் - https://byst.org.in/ ) – மற்றும் அதன் செயல்பாடுகள்
– அதனால் பயன் அடந்த சிறு – குறு தொழில் அதிபர்கள்
என்று விளக்கினார்.
“என் அப்பா பெரிய தொழிற்சாலைகளை அரசு சார்பில் ஏற்படுத்தி அதற்கு உறுதுணையாக
உபரிப் பாகங்கள் உற்பத்தி செய்ய சிறு தொழில் கூடங்களை உருவாக்கினார். அதன் மூலம் தொழிற்பேட்டைகள் செயல்பட்டன. அதே பாணியில்
நானும் படித்த இளஞர்களை வேலை தேடி ஒரு நிறுவனத்தின் தொழிலாளியாக வேலை செய்யாமல்,
அவர்களே ஒரு சிறு தொழில் செய்து பலருக்கும் வேலை கொடுக்கும் வாய்ப்பை
ஏற்படுத்தும் சிறுதொழில் அதிபராக உருவாகி நாட்டை உயர்த்தப் பாடுபடுவது தான் எங்களது
டிரஸ்டின் நோக்கம். இது தொழில் அதிபர் ஜேஆர்டி டாட்டாவின் மிகப்பிரபலமான
பொன் மொழியான – “நாம் ஒருவரின் வாழ்வை முன்னேற்றினால்,
அந்தச் செய்கையே பில்லியன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும்
சக்தி படைத்தது” என்பதை அடிப்படையாக்க்கொண்டு உருவானத்து தான்
எங்கள் டிரஸ்ட்.
அந்த
நோக்கம் நிறைவேற எங்கள் டிரஸ்டின் வழிகாட்டிகள் உழைக்கிறார்கள். அவர்களின் உழைப்பினால் பலர் பலவிதங்களில்
சிறு தொழில் அதிபர்களாக ஆகி உள்ளார்கள் என்பது எங்களது டிரஸ்டின் வெற்றிச் சின்னமாகத்
திகழ்கிறது. பலரது பாராட்டுப் பத்திரங்களே இதை ஊர்ஜிதம் செய்யும்.
படிக்காத
ஒருவர் எங்களது ஆலோசனையால் இப்போது ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராகச் செயல்படுகிறார்
என்பது உங்களை ஆச்சரியப்படுத்தும்.”
மேலும்
பல செய்திகளை இப்பேட்டியில் லட்சுமி பகிர்ந்து கொண்டார்.
"Turning Job Seekers into Job
Creators" – என்பது தான் லட்சுமியின்
டிரஸ்டின் தாராக மந்திரம்.
இந்திய
இளைஞர்களின் சக்தியை இந்தியா பொருளாதாரத்தில் மேம்மை அடையச் செய்வது தான் இந்த லட்சுமியின்
அரசு சாரா – லாப நோக்கில்லாமல் செயல்படும்
நிறுவனமாகும்.
லட்சுமி
தாம் இந்த நிறுவனத்தை 1990 ஆண்டு தோற்றுவித்ததின் பின்னணியை அவரே விவரிக்கிறார்: “1990 வருடம் அப்பா அரசுப் பயணமாக யு.கே. சென்ற பொழுது நானும் கூடப் போனேன். அப்போது பிரின்ஸ்
அப் வேல்ஸ் அவர்களின் அடுத்த இருக்கையில் அமரும் பாக்கம் பெற்றேன். அப்போது அவர் பிரின்ஸ் டிரஸ்ட் என்ற தமது நிறுவனம் ஈடுபட்டுச் செயல்படுவதைப்
பற்றி விவரிக்கவும், நான் அந்த டிரஸ்டின் கொள்கைகள் –
செயல்கள் ஆகியவைகளில் மனத்தைப் பறிகொடுத்தேன். பிரின்ஸ் டிரஸ்ட் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய மிகவும் பின் தங்கிய
வகிப்பினரைத் தேர்வு செய்து, அவர்களை சுய தொழில் செய்யும் தொழில்
அதிபர்களாக மாற்றும் திட்ட்த்தைச் செயல்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
அப்போதே
நான் இதைப் போல் இந்தியாவில் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க முடிவெடுத்தேன். அந்த எண்ணத்தின் அடிப்படையில்
1990 வருடம் ஆரம்பிக்கப்பட்டது தான் எனது பாரதீய யுவ சக்தி டிரஸ்டாகும்.
32 வருடங்களாக இந்த டிரஸ்டின் செயல்பாடுகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.”
பிரின்ஸ்
ஆப் வேல்ஸ் யூத் பிசினஸ் டிரஸ் - Prince of Wales Youth Business Trust (PYBT) மற்றும் இந்தியாவின் பாரம்பரிய காலம்
காலமாக பெரிதும் போற்றப்படும் குரு – சிஷ்யா கலாச்சாரம் ஆகிய
இரண்டின் கொள்கைகளின் சங்கமம் தான் இந்த இந்தியாவில் செயல்படும் லட்சுமியின் பிஒய்பிடி
என்றால் பொருத்தமாக இருக்கும். இதன் மூலம் லட்சுமி டிரஸ்டின்
உதவியாளர்களான குருஸ்தானத்து ஆலோசகர்கள் தொழில் செய்யும் எண்ணம் மனத்தில் உதித்த யுவர்களிடம்
தன்னம்பிக்கையையும், சுய மரியாதையையும் உணர்த்தி, உயர்ந்த தொழில் தர்மத்தைக் கடைப்பிடித்து, சுய தொழில்
ஆரம்பித்து லாபம் சம்பாதித்து, பலருக்கும் வேலை கொடுக்கும் நிலையில்
உயர்கிறார்கள்.
லட்சுமியின்
இந்த டிரஸ்ட் இப்போது 32 வருடங்களைப் பூர்த்தி செய்கிறது. அது தமிழ் நாடு,
மஹாராஷ்ரா, ஒடிசா, தெலிங்கானா,
அஸ்ஸாம் என்று விரிவாகி, 5 லட்சம் யுவர்களுக்கு
ஆலோசனைகள் வழங்கி உள்ளது. மேலும் சுமார் 7,000 பேர்கள் லட்சுமி டிரஸ்டின் பங்குதார வங்கி மூலமாக சுமார் 240 கோடி ரூபாய் வரை கடன் பெற்று சுய தொழில் அதிபர்களாக உருவாகி உள்ளார்கள்.
இந்த டிரஸ்டில் 5,000 உதவி ஆலோசகர்களுக்கு மேல்
– இதில் பல தொழில் சார்ந்தவர்கள் – இருப்பது ஒரு பெரிய சாதனையாகும்.
இந்த
லட்சுமியின் டிரஸ்ட் மூலம் 2,50,000 பேர்கள் சுய தொழிலதிபர்களாகி இருக்கிறார்கள் என்பதுடன், அவர்களில் 10 சதவிகிதம் பேர்கள் கோடீஸ்வர்களாகி உலக மற்றும் இந்திய அளவில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார்கள்
என்பது மிகவும் போற்றதலுக்கும் பாராட்டுக்கும் உரியதாகும்.
லட்சுமியின்
டிரஸ்ட் மூலம் கடன் பெற்று தொழில் தொடங்கியவர்களின் வெற்றிப் பட்டியல் 95 % என்பது ஆச்சரியமான விஷயமாகும்.
இது லட்சுமி டிரஸ்டின் மூலக் கொள்கையான – குரு
– சிஷ்ய பாரம்பரிய கலாச்சாரம் – கடைப்பிடிப்பதால்
தான் என்று நாம் கணிக்கத் தோன்றுகிறது.
பாரதீய யுவ சக்தி டிரஸ்ட் நிறுவனர் –
நிர்வாக அறங்காவலர் லட்சுமி வெங்கடேசன் அவர்களுக்கு வாய்மை இந்திய இளஞர்களை
தொழிலதிபராக உருவாக்கும் அவரது சிறந்த சேவையைப் பாராட்டும் விதமாக பூச்செண்டு
கொடுத்து மேலும் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறது
Comments