சந்தியா வந்தனத்தில் சகஸ்ரநாமம் – ஆக்கம்: பவித்திரன்

(எஸ். ஷங்கர்அண்ணா நகர் சமீபத்தில் கோபால் கெளசிக் அனுப்பியநாமங்களின் மகத்துவம்என்ற பதிவினைப் படித்தவுடன் எனக்கு தொலை பேசி மூலம்இந்த பன்னிரண்டு மஹா விஷ்ணுவின் நாமாக்கள் தான் சந்தியாவந்தனத்தில் ஆரம்பத்திலேயே அங்கவந்தனமாக சொல்லப்பட்டிருக்கிறதே !” என்ற அற்புதமான ஒரு விளக்கத்தைத் தெரிவித்தார்.

இந்த அவரது அபூர்வமான செய்தியைக் கேட்டவுடன் அதன் தாக்கத்தால் இந்தக் கட்டுரையை வரைந்துள்ளேன்.

ஓம் நமோ நாராயணாய நம:

-    பவித்திரன்.) 

சந்தியா என்றால் அந்தி நேரம் என்றாலும், அந்தச் சொல் காலை – மாலை என்ற இருவேளைகளையும் குறிக்கும்.

இது எப்படி என்றால், சந்தியா சந்திப்பு என்ற பொருளால் இந்தச் சொல்  இரவு பகலைச் சந்திக்கும் வேளையான அதிகாலையையோ அல்லது பகல் இரவைச் சந்திக்கும் வேளையான அந்திமாலையையோ குறிக்கும்.

காலையில் செய்யும் சந்தியாவந்தனத்தை பிராத சந்தியா என்றும் மாலையில் செய்யும் சந்தியாவந்தனத்தை சாய சந்தியா என்றும் அழைக்கிறோம்.

சந்தியா வந்தனம் ஒரு நாளைக்கு இரு முறை செய்வதே வழக்கம். ஆனால், சில நூல்கள் அதிகாலை, பிற்பகல், அந்திமாலை என மூன்று வேளைகளில் செய்வதற்கும் பணிக்கின்றன.

இந்த சந்தியா வந்தனத்தால் ஆத்ம ஞானம் பெறலாம். மூன்று வேளை சந்தியா வந்தனத்தில் காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி ஆகிய மூன்று கடவுளர்களைத் துதித்து அவர்களின் அருளால் ஆத்ம ஞானம் பெறுவர்.  

காலையில் செய்யும் பிராத சந்தியா வந்தனத்தை கிழக்கு திசை நோக்கி நின்று கொண்டும், சாயங்காலம் செய்யும் சாய சந்தியாவை வட மேற்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டும் செய்ய வேண்டும் என்பது விதி. 

சந்தியாவந்தனத்தின் ஆரம்பமேஆசமனம் செய்து அங்க வந்தனம் செய்வதில் தொடங்குகிறது.

ஆசமனத்தில் விஷ்ணுவின் அச்சுதன், அநந்தன், கோவிந்தன் பெயர் சொல்லி பஞ்ச பாத்திரத்திலிருந்து ஜலத்தை உத்தரணியால் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு நமஸ்கரித்து சந்தியாவந்தனம் செய்ய ஆரம்பிப்பார்கள். (இந்த மூன்று நாமாக்களில் கோவிந்தன் கீழே சொல்லப்பட்ட பன்னிரெண்டு நாமாக்களில் ஒன்றாக வருகிறது. மற்ற இரண்டும் வரவில்லை.)

அதன் பிறகு அங்க வந்தனம் செய்து, பகவான் விஷ்ணுவின் பன்னிரெண்டு நாமாக்களைச் சொல்லி வந்தனம் செய்வார்கள்.

சந்தியாவந்தனத்தில் ஆரம்பத்தில் ஆசமனத்திற்குப் பிறகு செய்யும் அங்கவந்தனம் செய்யும் மந்திரம்:

 ஆசமனம்  : அச்யுதாய நம : அனந்தாய நம : கோவிந்தாய நம:

அங்க வந்தனம்:

கேசவ நாராயண - கட்டைவிரல் வலது இடது கன்னம்

மாதவ : கோவிந்த-  பவித்ர விரல் வலது இடது கண்

விஷ்ணூ மதுஸூதன - ஆள்காட்டி விரல் வலது இடது மூக்கு

த்ரிவிக்ரம வாமன - சுண்டு விரல் வலது இடது காது

ஸ்ரீதர ஹ்ருஷீகேச - நடுவிரல் வலது இடது தோள்

பத்மனாப தாமோதர - ஐந்து விரல்களும் நாபி தலை

இந்த ஸ்ரீமன் நாராயணனின் பன்னிரெண்டு நாமாக்களை நம் உடம்பில் உள்ள அனைத்து இந்திரியங்களையும் சொல்வதால் அவைகளைக் காக்க வேண்டுவதாக இந்த மந்திரம் அமைந்துள்ளது. ஆகையால் தான் இந்த மந்திரங்களைச் செபித்தாலே முழு சகஸ்ரநாமாக்களையும் சொன்ன பலன் கிட்டும் என்பது அடியவர்களின் திருவாக்கு.

சஹஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். நாமம் என்றால் பெயர் என்று பொருள். ஆகையால் திருமாலின் மந்திர சக்திகொண்ட ஆயிரம் நாமங்களே விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படுகிறது.

இருப்பினும் சஹஸ்ரநாமாவை முழுவதும் பாராயணம் செய்ய நேரம் இல்லாதவர்கள் சந்தியாவந்தனத்தில் சொல்லப்படும் அங்கவந்தனத்தில் வரும் பன்னிரண்டு நாமாக்களைச் செபித்தாலே சஹஸ்ரநாமவை முழுவதும் பாராயணம் செய்த புண்ணியம் கிட்டும் என்பதால், சந்தியாவந்தனம் தினமும் செய்ய வேண்டிய கர்மாவின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.

அந்தப் பன்னிரெண்டு நாமாக்களும், அவற்றின் பொருளும் இங்கு விளக்கப்பட்டுள்ளது.

1. கேசவன் – துன்பத்தைத் தீர்ப்பவன்.

2. நாராயணன் – உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்.

3. மாதவன் – திருமகள் மணாளன்.4. கோவிந்தன் – பூமியை பிரளயத்திலிருந்து காத்தவன்/பசுக்களை மேய்த்தவன்.

5. விஷ்ணு – அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்.

6. மதுசூதனன் – புலன்களாகிய இந்திரியங்களை ஈர்ப்பவன்/மது என்னும் அரக்கனை வென்றவன்.

7. த்ரிவிக்ரமன் – மூன்றடிகளால் உலகத்தை அளந்தவன்.

8. வாமனன் – குள்ளமான உருவம் உடையவன்.

9. ஸ்ரீதரன் – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்.

10.ஹ்ருஷிகேசவன் – பலன்களைத் தன் ஆணப்படி நடத்துபவன்.

11. பத்மநாபன் – நாபியில் தாமரையை உடையவன்.

12. தாமோதரன் – உரலில் கயிற்றால் கட்டப்பட்ட அடையாளம் கொண்ட வயிறு உடையவன்.

மாகாபாரதத்தில் தர்மன் பீஷ்மரிடம் சில கேள்விகளை கேட்கிறார்.

எவர் சிறந்த கடவுள் ?

அவரை அடைவதற்கு சிறந்த வழி என்ன ?

எந்த தெய்வத்தின் புகழை பாடினால் நலம் பெற முடியும் ?

எந்த தெய்வத்தை உள்ளத்திலோ அல்லது வெளியிலோ வழிபட்டால் வாழ்வில் சிறக்க முடியும் ?

எந்த தெய்வத்தின் நாமத்தை ஜபித்தால் பிறவி இல்லா பெருநிலையை அடைய முடியும்  என்பது தர்மன் கேட்ட கேள்விகள். 

த்தனை கேள்விகளுக்கும், ஒரே விடையாக பீஷ்மர் சொன்னது:

விஷ்ணு, விஷ்ணு, விஷ்ணு …..”

ப்போது, விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களை மந்திர சக்தியோடு இணைத்து தர்மனுக்கு பீஷ்மர் போதித்தார்.

நாராயணன் என்ற சொல்லை நர + அயணன் என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். நர என்றால் மனிதர்கள், அயணன் என்றால் அபயம் அளிப்பவன்அருள்பாளிப்பவன் என்ற பொருள் வரும். நாராயணனே நமக்குத் துணை என்று துதிப்பதால், நம் கவலைகள், தொல்லைகள், பயங்கள் அனைத்தும் நீங்கி நமது வாழ்வு நாராயணனின் அருளால் ஒளிபெற்றுத் திகழும்.

சகஸ்ரநாமா சொல்வதற்கு நேரமில்லை. சந்தியாவந்தனமும் செய்ய முடியவில்லைஎன்றாலும் அப்படிப்பட்டவர்களுக்கு விஷ்ணு சகஸ்ரநாமத்தின் முடிவில் வரும்காயேன வாசா மனஸேந்திரியாவாஎன்று தொடங்கும் நான்கே வரிகளைக் கொண்ட ஸ்லோகத்தை இரவு தூங்கப்போவதற்கு முன் தினமும் சொன்னாலே அனைத்துப் பலன்களையும் ஸ்ரீமன் நாராயணன் அளிப்பான் என்பது திண்ணம். இந்த ஸ்லோகமும் சந்தியாவந்தனத்தில் கடைசியாகச் ஜெபிக்கும் ஸ்லோகமாக இருக்கிறது. இதன் மூலம் ஸ்ரீமன் நாராயணனிடம் பூர்ண சரணாகதி அடைகிறோம். “ஸ்ர்வம் கிருஷ்ணார்ப்பணம்என்பது தான் இதில் அடங்கி உள்ள தாத்பர்யம்.

அந்த ஸ்லோகமும் அதன் பொருளும்: 

ஸ்லோகம்:

காயேன வாசா மனஸேந்த்ரியைா் - வா

புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் l

கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை

நாராயணாயேதி ஸமா்ப்பயாமி ll

அர்த்தம்:

சரீரத்தாலோ,வாக்காலோ,மனத்தாலோ,கருமேந்திரியங்களாலோ, ஞானேந்திரியங்களாலோ, இயற்கையின் இயக்கத்தாலோ எது எதைச் செய்கின்றேனோ அது எல்லாவற்றையும் பரமபுருஷனாகிிய நாராயணனுக்கே ஸமா்ப்பிக்கிறேன்.

ஸ்லோகத்தின் பதம் பிரித்துப் பொருள்:

காயேன உடலாலோ

வாசா வாக்கினாலோ

மனஸ் மனதினாலோ

இந்த்ரியை (வா) இந்த்ரியங்களினாலோ

புத்தி அறிவினாலோ

ஆத்மனா (வா) - ஆத்மாவினாலோ

ப்ரக்ருதே ஸ்வபாவாத் இயற்கையான குணவிஷேஸத்தினாலோ

யத்யத் எதுஎதைச்

கரோமி செய்கின்றேனோ

ஸகலம் அவை அனைத்தையும்

பரஸ்மை நாராயணா இதி பரமபுருஷனாகிய நாரயணனுக்கே

ஸமர்ப்பயாமி ஸமர்ப்பிக்கிறேன் (அர்ப்பணிக்கிறேன்)

 

ஸ்ர்வம் விஷ்ணுமயம் ஜெகத் !

 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017