அணிமாறி முதலவர் பதவி சுகம் காணும் அரசியல் பச்சோந்தி நிதிஷ் குமார்
பீஹார் மாகாணத்தின் கருப்பு தினம் – 10 – 08 – 2022 –
ஏனென்றால்
அன்று தான் தன் பதவியையும், தேசிய
ஜனநாயகக் கூட்டணியிலிருந்து – குறிப்பாக பிஜேபியின் உறவை உதறித் தள்ளி, ‘ஊழல்
கிருமிகள்’ என்று லல்லு – தேசஸ்வி பிரசாத் யாதவ் ஆகியவர்களை ஊழல்வாதிகளாக
வெளிப்படையாக குற்றம் சாட்டியதுடன், சிபிஐ
பாட்னா ஓட்டலில் லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது “லல்லு – மனைவி ராப்ரி தேவி – இரு
மகன்கள் தேசஸ்வி & தேஸ்
பிரதாப் (இருவரும் நிதிஷ் அரசில் மந்திரிகளாக இருக்கும் தருணத்தில்) ரயில்வே
ஹோட்டல் ஒதிக்கீட்டில் லஞ்சமாக பாட்னாவின் முக்கியமான இடத்தில் உள்ள மூன்று ஏக்கர்
நிலம் மிகவும் குறைந்த விலைக்கு வாங்கிய ஒரு நிறுவனத்தில் லல்லு மற்றும் மனைவி –
மகன்கள் பங்குதாரர்கள்” என்று பகிரங்கமாக அறிக்கையே விட்ட மிஸ்டர் கிளீன் நிதிஷ்
தானே ஊழல் கிருமி என்று பட்டம் சூட்டிய லல்லுவின் இளைய மகனுடன் இணைந்து நிதீஷ்
மீண்டும் 8-வது முறையாக
பீஹார் முதல் மந்திரியாகவும், தேசஸ்வி
துணை முதல் மந்திரியாகவும் அந்த ஆகஸ்ட் 10-ல்
பதவி ஏற்றுள்ளனர்.
19 – 10 – 1994 அன்று நிதிஷ் குமார் – பீஹாரை லல்லுவிடமிருந்து
காப்பாற்றும் கொள்கையுடன் சாமதா என்ற கட்சியைத் தோற்றி வித்ததையும் இங்கு நினைவு
கூறவேண்டும்.
அது மட்டுமல்ல.
நிதிஷ் குமார் கட்சி ஐக்கிய ஜனதா தள கட்சியின் அதிகார பூர்வ செய்தி
வெளியீட்டாளரும், நிதிஷ் குமார்
கட்சி – ல்ல்லு கட்சிகள் கூட்டணி
அரசின் மந்திரியுமான நீராஜ் குமார் இப்படி லல்லுவை குற்றம் சொல்லி இருக்கிறார்:
“லாலு யாதவ்
இப்போது சிறைக்கதை நம்பர் 3351 – ஹார்வார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஏன்
தெரியுமா? அவர் ஊழல்
கொரானா வியாதியால் அவதிபட்டு இருக்கிறார். அந்த கொரானா ஊழல் மற்றவர்களையும்
பாதிக்கக் கூடாது என்ற காரணத்தினால், சமூக
விலகலைக் கடைப்பிடிக்க ஜெயிலில் உள்ளார். நிதிஷ் குமாரின் நல் ஆட்சி என்ற மருந்து
ஊசியினால் லல்லு ஊழல் குற்றத்தில் ஜெயில் தண்டனையை அனுபவிக்கிறார்.”
நிதிஷ் குமார்
‘லல்லுவின் ஜங்கிள் ராஜ் முடிவுக்கு வந்து, இப்போது
நல்லாட்சி நடக்கிறது’ என்று பிஜேபியுடன் ஆட்சி செய்த போது சொன்னார். அத்துடன்
‘லல்லு ஊழல் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது. இதற்கு அவர்கள் ‘அரசியல்
காட்புணர்ச்சி – செக்குலரிசம் செத்து விட்டது’ என்ற பொய்யைப் பரப்பி, தப்பிக்க
முயலக்கூடாது’ என்றும் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியவர் தான் இந்த யு-டர்ன்
நோபல் மாஸ்டர் நிதிஷ் குமாராகும். ஆனால் லல்லுவுக்கு – ‘செக்குலரின் போர்வையில் ஓடி ஒளிந்து
தப்பிக்க முயல வேண்டாம்’ – என்று வழங்கிய அறிவுரையை மறந்து,
இப்போது – தான் லல்லு கட்சியுடன் மீண்டும் கூட்டணி
ஆட்சி அமைப்பது – செக்குலரிசத்தைக் காப்பாற்றவே – என்று விளக்கம் கொடுக்கிறார் அரசியல் யு-டர்ன் மாஸ்டர்
நிதிஷ் குமார் !
நிதிஷ் குமார்
ஒரு சுயநலவாதி – சந்தர்ப்பவாதி – பதவி தான் கொள்கை என்ற சிந்தனைவாதி –
செக்குலரிசம்/சோசியலிசம் என்ற போர்வையில் ஒளிந்துள்ள ஏமாற்றுப் பேர்வழி என்பதை
அவரது ஒவ்வொரு யு-டர்னிலும் நிரூபித்து வந்துள்ளார். இது வரை அவரது யு-டர்ன்
எட்டாக உள்ளது. இது அவருக்கு ஒரு நோபல் பரிசை அளிக்கும் அளவு எண்ணிக்கையில்
உள்ளது.
லோக் சபாவிற்கு
2013-ம் ஆண்டு
மோடியை பிரதம மந்திரி வேட்பாளராக பிஜேபி நியமித்தற்கு எதிர்ப்புத் தெரிவித்து
பிஜேபியுடனான உறவை முறித்துக் கொண்டார். அப்போது அவர் உதிர்த்த ஆவேச மொழிகள் இதோ
உங்கள் பார்வைக்கு:
“பிஜேபி மோடியை
பிரதம மந்திரி வேட்பாளராகத் தேர்வு செய்திருக்கக் கூடாது. செக்குலர்வாதி ஒருவரைத்
தேர்வு செய்திருக்கவேண்டும். சங்கி அதாவது காவிகளின் – முக் பாரத் ஏற்பட நான்
பாடுபடப்போகிறேன். நான் இனி மண்ணில் தூசியாகவாவது போவேனே அல்லாது பிஜேபியுடன்
மீண்டும் கூட்டுச் சேரமாட்டேன்!’
இது தான்
நிதிஷ் குமாரின் சூளுரை. ஆனால் அந்தச் சூளுரை பதவிச் சுகத்தினால் காற்றிலே கலந்து மறைந்து விட்டது.
ஜூலை 27, 2017-ல் ‘லல்லு
குமாரர்கள் என் அமைச்சரவையில் இருக்கும் ஊழல் வாதிகள். அவர்களுடன் கூட்டு எனக்கு
உடன்பாடில்லை’ என்று சொல்லி, பிஜேபியுடன்
ஆறாவது முறையாக முதல் மந்திரியானார் இந்த நிறம் மாரும் அரசியல் பச்சோந்தி நிதிஷ்
குமார். அது மட்டும் இல்லை, பிஜேபியுடன்
இணைந்து கூட்டாக 2020
பீஹார் சட்டசபைத் தேர்தலில் போட்டி இட்டு, 45 இடங்களைப் பெற்ற நிதிஷ் குமாருக்கு 77 இடங்களில்
வெற்றி பெற்ற பிஜேபி பெருந்தண்மையுடன் மீண்டும் முதல்வர் பதவியை அவருக்கு
அளித்தது. அப்போது இந்த நிதிஷ் குமார் – ஷேக்ஸ்பியரின் ஹேம்லட் போல் – பிஜேபியா? லல்லு கட்சியா? என்ற மனக்
குழப்பத்தில் பிஹார் ஓட்டர்களை கவலைப் பட வைத்த பிறகு தான் பிஜேபியுடன் ஆட்சி
அமைத்தார்.
அப்போது பிஜேபி
பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வானின் கட்சியான லோக் ஜன் சக்தி கட்சியை என்னைத்
தோற்கடிக்க பயன்படுத்து என்றும் குற்றம் சாட்டினார்.
இப்போதும்
பிஜேபியுடனான தன் உறவைத் திடீரென்று முறித்துக் கொண்டதற்கு சொல்லும் காரணம்: ‘பிஜேபி எங்களை வளரவிடவில்லை.
அழிக்க முயல்கிறது. மேலும் மதவாதக் கொள்கையுடன், செக்குலரிசத்தையும், சோஷியலிசத்தையும்
புறக்கணிக்கிறது.’
தமது ஐக்கிய
ஜனதா தளக் கட்சியை நிதிஷ் குமார் தான் ஒரு வளுவான கட்சியாக உருவாக்க வேண்டும்.
அதற்கு பிஜேபி உதவ வேண்டும் என்று சொல்வது அவரது இயலாமையையும், அரசியல்
சூன்யத்தையும் தான் வெளிபடுத்துகிறது.
இப்போது லல்லு
கட்சி அவரது கட்சியை வளர்க்க உதவி செய்யும் என்றா நம்புகிறார்? நிதிஷ் குமார்
வேடிக்கை மனிதராகப் போய் விட்டார்.
முதன் முதலில் 2005-ம் ஆண்டு முதல்
மந்திரியாக இன்று வரை பதவி வகிக்கிறார். கடந்த 17 வருடங்களில் அவர் எட்டு முறை முதல் மந்திரியாக
பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார்.
பிஜேபி மத்திய
அமைச்சர் சுஷில் குமார் மோடி – அவர் நிதிஷின் நண்பராகக் கருதப்படுபவர் – ‘நிதிஷ்
குமாரை ஐந்து முறை முதல் மந்திரியாக பதவியில் அமர்த்தி உள்ளோம். ஆனால் லல்லு
கட்சியோ இப்போது பதவிப் பிரமாணத்தையும் சேர்த்து இரண்டு முறைகள் தான் முதல்
மந்திரி பதவை அளித்துள்ளது. அந்த ஐந்திலும் நிதிஷ் குமார் தான் பிஜேபியுடனான உறவை
முறித்து கொண்டார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.’
இதை எல்லாம்
விட பீஹார் முதல்வராக எட்டாவது முறை பதவி ஏற்றவுடன் அவர் சொன்னவைகள் தான் மிகவும்
கீழ்த்தரமானவைகளாகப் படுகிறது.
நிதிஷ் குமார்
சொன்னது: ‘நான் முதல் மந்திரியாக 2024-ல் தொடர்வேன் என்று சொல்ல முடியாது. ஆனால் மோடி 2024-ல் பிரதம மந்திரியாக
தேர்வாக மாட்டார். 2014-ல் ஜெயித்தவர் மீண்டும் 2024-ல் ஜெயிக்க
மாட்டார். அதற்கு அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்.”
முதல் மந்திரி
ஆவதற்கு முந்தைய நாள் நிதிஷ் குமார் ‘எனக்கு பிரதமராகும் ஆசையில்லை தான். ஆனால், எனக்கு பல போன்
கால்கள் வந்து என்னைப் பிரதமராக்க ஆசைப்படுகிறார்கள்’ என்று தெரிவித்தார்.
எவ்வளவு முரண்
பாடுகள் என்று தான் அவரது பேச்சை எடை போடத் தோன்றுகிறது.
சென்ற பீஹார்
சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 2020 நடந்துள்ளது. ஆகையால் இன்னும் 3 ஆண்டுகள்
நிதிஷ் குமார் முதல்வராக இருக்கலாம். லோக் சபா தேர்தல் 2024 மார்ச் –
ஏப்ரலில் நடக்க வாய்ப்புள்ளது. ஆகையால் அவர் முதல்வராக லோக் சபா தேர்தலில் பிரதம
மந்திரி வேட்பாளராக மற்ற அரசியல் கட்சிகள் ஒப்புக் கொண்டு தேர்தல் பிரசாரம் செய்ய
வேண்டும். இந்த பதவி மோஹம் கொண்ட ஒரு முதல்வர் எப்படி பீஹாரில் ஒரு நல்லாட்சியைக்
கொடுக்க முடியும்?
மீண்டும் லல்லு
கட்சியின் காட்டாச்சிக்கு நிதிஷ் கட்சியும் துணை போகும் அவலமும் நடக்கப்போகிறது.
லல்லு கட்சி
தனக்கு ஆதரவு கொடுக்க சம்மதித்த உடன் நிதிஷ் செய்த முதல் வேலை லல்லுவின் மனைவியும்
– முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியை அவரது வீட்டிற்குச் சென்று பார்த்து ‘நான்
முன்பு உங்களைப் பற்றி எல்லாம் சொன்னவைகளை மறந்து விடவும். உங்கள் ஆதவுக்கு நன்றி’
என்று சாஷ்டாங்க நமஸ்கார சரணாகதி செய்துள்ளார்.
சோனியா காந்திக்கும் அவரது ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னாள்
ஐ.ஏ.எஸ். அதிகாரியும், நிதிஷ்
குமாரின் முக்கிய நம்பிக்கைக்குப் பத்திரமான ஆர்.சி.பி. சிங்க் பிஜேபியுடன்
இணைந்து செயல்படுவதாகக் கூறி, அதைத் தடுக்க, அவருக்கு
மீண்டும் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்காமல் அவர் மோடி அரசின் மந்திரி பதவியை
இழக்கச் செய்தார். இவர் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக லோக் ஜன் சக்தி கட்சியின்
சிராக் பாஸ்வான் போல் செயல்படும் எட்டப்பர் என்று நினைத்து, அவர் மூலம்
தமது கட்சியும், தனது
செல்வாக்கு – பலம் பாதிக்கப்படும் என்று நினைத்து லல்லு கட்சியுடன் கூட்டுச்
சேர்ந்துள்ளார் யு-டர்ன் சாணக்கியர் நிதிஷ்
குமார்.
இந்தக் கூட்டு
எவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்கும் என்பதைக் காலம் தான் தீர்மானிக்கும்.
‘மண்ணில் தூசியாகப் போவேனே அன்றி பிஜேபி உடன் இனி உறவில்லை’ என்று 2013-ம் ஆண்டு முழந்திய நிதிஷ் இரண்டு முறை அதற்குப் பிறகு பிஜேபியுடன் உறவுகொண்ட தூசிக் குப்பை நிதிஷ். நிதிஷ் குமார்
பீஹாரின் சந்திரபாபு நாயுடுவாக மதிப்பிழந்து, செல்லாக்
காசானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் அது மோடிஜியின் ஜாதக ராசி.
ஆனால்
பீஹாருக்குத் தான் கதி மோக்ஷம் இல்லை என்பது மிகவும் கவலைப் பட வைக்கிறது.
நல்ல கனி வளம்
கொண்ட பூமி. நல்ல உழைப்பாளிகள் கொண்ட மாநிலம். நல்ல படிப்பாளிகளும் அந்த
பூமியிலிருந்து தோன்றி உள்ளார்கள்.
பண்டைய
காலத்திலேயே பீஹாரின் நாலந்தா நூலகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால், பீஹாரின்
தலைஎழுத்து 1193
ஆம் ஆண்டு முஸ்லீம் பக்தியார் கில்ஜியின் ராணுவத்தால் சூறையாடப்பட்டு
அழிக்கப்பட்டது. இவர்களால் அழிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் நூலகம் தீயிட்டு மூன்று
மாதங்களாக எரிந்ததாகக் கூறப்படுகிறது, இதன்
மூலம் அங்குள்ள நூல்களின் எண்ணிக்கையை மதிப்பிடலாம்.
நிதிஷின் அரசியல்
சதுரங்க ஆட்டத்திற்கு பீஹார் ஓட்டர்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். அவர்கள்
பீஹாரின் நலனையோ, நாட்டின்
நலனையோ நினைக்காமல், குறுகிய
கண்ணோட்டத்துடன் மதம் – ஜாதி – இலவசம் ஆகியவைகளுக்கு அடிமையாகி, மதிப்ப்பளித்து ஓட்டுப் போட்டு, தங்கள் மாநில
வளர்ச்சிக்கு ஊறு விளைத்துள்ளனர்.
பீஹாரில் மோடி
போல் ஒரு பெரும் தலைவர் வந்து அந்த மாநிலத்தை ஒரு சிறந்த மாடல் மாநிலமாக உருவாக
எல்லாம் வல்ல ஆண்டனை வேண்டுகிறோம்.
பச்சோந்தி
நிதிஷ் குமாருக்கும், தவறாக
ஓட்டளித்த பீஹார் ஓட்டர்களுக்கும் தண்டனையாக வாய்மை முள் கீரீடம்
சூட்டுகிறது.
Comments