விநாயக சதுர்த்தி – 31 – 08 - 2022
விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் இந்நாள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று கொண்டாடப்படவுள்ளது.
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும்
சதுர்த்தி திதி விநாயகர் வழிபாட்டிற்கு உகந்தது என்றாலும், ஆவணி
மாத சுக்ல பக்க்ஷ சதுர்த்தி திதி மிகவும் சிறப்பு வாய்ந்த விழாவாக
கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வரும்
வளர்பிறை சதுர்த்தியை "விநாயகர் சதுர்த்தி" என்று இந்து மதத்தினர்
கொண்டாடுவது வழக்கம். பக்தர்கள் துயரைப் போக்கும் விநாயகர், சிவபெருமான்
மற்றும் தேவி பார்வதியின் மூத்த மகன் ஆவார். அவரை போற்றும் விழாவாக விநாயகர்
சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
விக்ன விநாயகரை – துன்பங்களைத் துடைக்கும் கடவுளான விநாயகரை வீதியில் வைத்து பெரும் விழாவாக – அதன் மூலம் மக்களை ஒன்று திரட்டி, ஹிந்து பண்டிகையில் விநாயகர் பக்தியுடன் தேச பக்தியை மஹாராஷ்டிர மக்களிடையே ஊட்டியவர் தேசபக்தர் திகலக் மஹாராஜ் ஆவார்கள். இதை அவர் ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலத்திலேயே செய்து காட்டி வெற்றியும் கண்டவர். அந்த அவரது இந்த வீதி விநாயகர் வழிபாடு இப்போது இந்தியா பூராவும் பரவி, பக்திமார்க்கத்திற்கு புத்துயிர் அளித்துள்ளது.
பிள்ளையார் தான் கிருஷ்ணன் அருளிய கீதையை வியாச பகவான் சொல்ல, எழுதி நமக்கு அளித்தவர். ஆகையால், கிருஷ்ண ஜெயந்தியில் பிள்ளையாரை நினைப்பதும், பிள்ளையார் ஜெயந்தியில் கிருஷ்ணணை நினைப்பதும் அவசியம்.
எந்தக் காரியம் தொடங்க நினைத்தாலும், கணபதி பூஜை – பிள்ளையார் பூஜை செய்வது ஹிந்து மதச் சடங்கின் முக்கிய அம்சமாகும்.
இந்த விநாயகர் வழிபாடு 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் விநாயகரின் திருவுருவம் சிலையாக
வடிக்கப்பட்டு அந்த சிலைக்கு பாரம்பரிய வழியில் சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகள்
நடைபெறும். பிறகு அந்தச் சிலைகள் கடலிலோ, ஆறு – குளங்களிலோ கறைக்கப்படும்.
வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் விநாயகரின் அருள் கிட்டப் பிராத்திக்கிறோம்.
Comments