இறங்கல் செய்தி - இந்தியாவின் முதல் குடிமகள் ஜானகி வெங்கடராமன் மறைவு - 13 - 08 - 2010
வாய்மை என்ற மாதப் பத்திரிகை ஒரு ஆன் லைனில்
வெளியிடப்படும் ஒரு மின் அஞ்சல் பத்திரிகையாகும். அதில் மிகவும் நெருங்கிய உறவினர்கள்,
நண்பர்கள், அன்பர்கள் சுமார் 150 பேர்கள் அந்த பத்திரிகையின் உறுப்பினர்களாகச் சேர்ந்து,
அதைப் படிக்கிறார்கள்.
இந்தப் பத்திரிகை 2007-ம் ஆண்டு தமிழ் வருஷப்பிறப்பான
சித்திரை 2007-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 15 வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. எந்த
மாதத்திலும் பத்திரிகை வெளிவராமல் இருந்ததில்லை என்பதை தெய்வ சங்கல்பம் என்று தான்
சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்தப் பத்திரிகை – ஆசிரியர் – எஸ். சங்கரன் – உதவி ஆசிரியை
– ஆசிரியரின் தர்ம பத்தினியான வத்ஸலா சங்கரன் – இருவரின் முயற்சியில் வெளியிடப்படுகிறது
என்பதால் இந்தச் சாதனையை ‘தெய்வ சங்கல்பம்’ என்று சொல்ல விழைகிறேன்.
அந்தப் பத்திரிகை இதழ் 41 – ஆவணி – ஆகஸ்ட் 2010 அன்று வெளியான ஒரு இறங்கல் செய்தியினை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.
முன்னாள் காலம் சென்ற இந்திய குடியரசின் ஜனாதிபதி திரு ஆர். வெங்கடராமன் 13 – 08- 2010 அன்று தமது
89-வது வயதில் புது டெல்லியில் காலமானார். அவரது இறங்கல் செய்தி வாய்மை தனது 41-வது
ஆகஸ்ட் இதழ் 2010-ல் வெளியிட்ட பதிவு தான் இது.
எஸ். சங்கரன் - வத்ஸலா சங்கரன்
இறங்கல் செய்தி:
காலம் சென்ற முந்தைய ஜானாதிபதி வெங்கடராமனின்
மனைவி திருமதி ஜானகி வெங்கடராமனின் மறைவிற்கு வாய்மை ஆழ்ந்த இறங்கலைத் தெரிவித்துக்
கொள்கிறது. இந்தியாவின் முதல் முடிமகள் என்ற நிலையில் அவரது இறப்புச் செய்தி முக்கியத்துவம்
பெறுகிறது.
அத்துடன் வாய்மை உதவி ஆசிரியரின் அத்தை என்பதால்
ஆசிரியர் குழுவினரின் துக்கம் அதிகமாகும்.
89-வயது வரை வாழ்ந்து பழுத்த பழமாக இறைவனடி
சேர்ந்து விட்டார்.
வாய்மை ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினர்
அனைவரும் ராஷ்ரபதி பவனில் சில நாட்கள் தங்கி இருக்கும் பொழுது, அவரது விருந்தோம்பலை
நாங்கள் மறக்க இயலாது. ராஜோ உபசாரம் என்பார்களே – அதை அத்தையின் நேரடி மேற்பார்வையில்
அவர் ராஷ்டிரபதிபவனில் இந்தியாவின் குடிமகளாக இருக்கும் போது அனுபவித்தோம். எந்தவித
படோடோபமின்றி எளிமையாக எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பது அவரது குணம்.
அதுவே அவரது பலமும் கூட. உரத்துப் பேசமாட்டார். ஆனால் அதில் ஆணித்தரமான அழுத்தம் இருக்கும்.
சொல்வதில் தெளிவு, பயமற்ற வெளிப்பாடு, எதிலும் ஒரு பணிவு – இவைகள் அவரது அடையாளங்கள்.
பக்தி அவரது சக்தி. இருஷ்ண பரமாத்வாவிடம் ஆத்மார்த்த பக்தி. காஞ்சி மஹா ஸ்வாமிகளிடம் தீராத பக்தி. அவரது உபதேசத்தால், தமக்குப் பிரியமான
காப்பியைத் துறந்தவர். பட்டு வேண்டாம் என்று பெரியவா சொன்னவுடன், அதையும் துறந்தவர்.
அவரது பெண்கள் கல்யாணத்திலும் பட்டை உடுத்தாதவர்.
மடிசார் அடிக்கடி அணிவார். புடவை தான் அவரது அடையாளம். எந்த நாட்டிற்குச் சென்றாலும் இதைக் கடைப்பிடித்த்தை ஒரு சாதாரண விஷயமாகக்
கருதக் கூடாது.
ஏன், காந்திஜியின் சுதந்திரப் போராட்டத்தில்
நேரடியாகப் பங்கு கொள்ளாவிடினும், தம் கணவருக்கு முன் கதர் அணிந்தவர்.
மகன் கல்லூரியில் படிக்கும் பொழுது ஏற்பட்ட
அகால மரணம் தாயையும், தந்தையையும் மீளாத்துயரத்தில் ஆழ்த்தியது. இது அவர்கள் வாழ்வில்
ஏற்பட்ட மிகப் பெரிய இடி. அதிலிருந்து அவர்கள் மீளவே இல்லை. பொது வாழ்வின் தூய்மைதான்
அந்தத் துக்கத்தை ஓரளவாவது நீக்கியது எனலாம்.
எங்கு சென்றாலும் தாம் பூஜை செய்யும் விக்கிரகங்களை
எடுத்துச் செல்வார். அதற்குப் பூஜை செய்த பிறகு தான் அவர் சாப்பிடுவார். இந்தத் தெய்வீக
வழிபாடுதான் அவரை வாழ்வித்தது.
அவரது தெய்வீகச் சிரிப்பை எங்களால் என்றுமே
மறக்க முடியாது.
வாய்மை ஆசிரியர் கல்யாணத்திற்கு வெள்ளியிலான
தொட்டிலில் தவழும் குட்டிக் கிருஷ்ணனைப் பரிசாக்க் கொடுத்தார். பக்திதான் அவரது சிரிப்பிற்கு
தெய்வீக்க் களையை ஊட்டியதாகும்.
அவரது மூன்று பெண்குழந்தைகளும் சிறப்பாகவும்,
செழிப்பாகவும் கல்யாணமாகி குழந்தைகள் செல்வத்துடன் வாழ்கிறார்கள்.
அவர்களின் அம்மா இறந்த சோகம் அளவிட முடியாது.
அவர்களின் சோகம் நீங்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
அன்னாரது ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திகிறோம்.
-
வாய்மை ஆசிரியர் குழு.
வாய்மை மலர் வலையம் வைத்து தன் இறங்கலை வெளிப்படுத்தி,
ஜானகி வெங்கடராமனின் ஆன்மா சாந்தி அடைய அவர் தினமும் வணங்கும் கீதை போதித்த பார்த்தசாரதியான
கண்ணனை வேண்டுகிறோம்.
Comments