மஹா பெரியவாள் ஜெயந்தி – 13 – 06 – 2022 – திங்கட் கிழமை அனுஷ நக்ஷத்திரம்

 

மகா பெரியவா’ என்று பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 129-வது ஜயந்தி தினம் இந்த வருடம்  ஜுன் மாதம் 13-ம் தேதி  கொண்டாடப் பட இருக்கிறது.

மகா பெரியவா மயிலாப்பூரில் குடிகொண்டிருக்கும் கற்பகாம்பாள் அம்மனைப் பற்றி விளக்கிய அருள் வாக்கு:

மயிலாப்பூர்ல வசிக்கறவா போன பிறவிகள்ல புண்ணியம் செய்தவா.

இங்க இருக்கற கற்பகாம்பாள் யாரு தெரியுமா?

கற்பக விருட்சம்.

தேவலோகத்துல கற்பக விருட்சம்னு ஒரு மரம் இருக்கு. அதுக்கு அடியில நின்னுண்டு யார் என்ன கேட்டாலும் அந்த விருட்சம் ஒடனே குடுத்துடும். அதுபோல இந்த கற்பகாம்பாள் சந்நிதிக்கு முன்னாடி நின்னுண்டு என்ன கேட்டாலும் குடுத்துவா

கற்பக விருட்சமான கற்பகாம்பாள் அருள், மஹா பெரியவா ஆசி அனைவருக்கும் அபரிமிதமாக ஆயுள் பூராவும் பொழிய பிரார்த்திப்போமாக.

கற்பகாம்பாள் திருவடிகளே சரணம், சரணம், சரணம்.


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017