திருச்செந்தூர் வைகாசி விசாகம் – 12 – 06 – 2022 – ஞாயிற்றுக் கிழமை
வள்ளி – தெய்வையானை சமேத ஜெயந்தி நாதர்
முருகப்பெருமான்
அவதரித்த தினம் வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரம். அன்று முருகப் பெருமானை
வழிபட்டால், ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன்
கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே, அன்றைய தினம் கோவிலில் லட்சக்கணக்கான
பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய ஸ்வாமி
திருக்கோவிலில் வைகாசி விசாகம் ஜெயந்திநாதரை முன்னிலைப் படுத்தி வழிபடும்
திருவிழாவாகும். வைகாசி வசந்தத் திருவிழா 10
நாட்கள் கோலாகலமாக நடைபெறும். அந்த 10 நாட்களிலும் தினமும் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில்
திருக்கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, கிரிவல உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறும். 10-வது
நாளில் இரவு 6 மணிக்கு முனிக்குமாரர்களுக்கு சுவாமி
ஜெயந்திநாதர் சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறும்.
மேலும் வைகாசி விசாகம் வெப்பம் அதிகமாக
இருக்கும் கோடை காலத்தில் வருவதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய திருக்கோயில்
கருவறையில் தண்ணீர் நிறைப்பி, இறைவனுக்கு உஷ்ண சாந்தி வழிபாடான
உற்சவமும் நடைபெறும்.
ஜெயந்திநாதரின் பரிபூர்ண அருள் வாய்மை
அன்பர்கள் அனைவருக்கும் கிட்டப் பிரார்த்திப்போமாக.
Comments