திருச்சூர் பூரம் - 10 – 05 – 2022 – செவ்வாய்க் கிழமை
திரிச்சூர் பூரம் 'எல்லா பூரங்களின் பூரம்' என்றழைக்கப்படுகிறது.
ஆகையால் திருச்சூர் பூரம் திருவிழா
கேராளாவின் திருச்சூரில் கோயில் கொண்டிருக்கும் வடக்கு நாதர் ஸ்வாமியை மையமாகக்
கொண்டு நடத்தப்படும் பெரிய விழாவாகும். இந்த விழாவில் கேரளாவில் உள்ள 10 கோயில்களின் உற்சவ விக்ரகங்கள் அந்தந்த கோயில்களின் யானைகளில்
அரோகணித்து வடக்கு நாதர் கோயிலுக்கு மேளதாளத்துடன் வந்து கலந்து கொள்ளும். அந்த
யானைகள் தங்கமுலாம் பூசப்பட்ட பளபளக்கும்அலங்கார முகப்புப் படாரம், காதுகள் – முதுகு தும்பிக்கை ஆகியவைகளில் அலங்கார கோலங்கள் என்று
அந்த கோயில் யானைகள் ஒவ்வொன்றும்
அற்புதமாகக் காட்சி அளிக்கும். அந்த யானைமேல்
அமர்ந்துள்ளவர்கள் பல வர்ண கொடைகளைப் பிடித்துக் கொண்டு வருவார்கள்.
திருவம்பாடி மற்றும் பாரமேற்காவு கோயில்களின் யானைகளின் பக்களிப்பு முக்கியமாகக் கருதப்படுகிறது.
இதஞ்சிதாரா மேளம் அந்த விழாவின்
சிறப்பு அம்சமாகும். மேலும் திருச்சூர் பூர விழாவின் வாணவேடிக்கைகள் உலகப்
பிரசித்தமாகும்.
யானை அணிவகுப்பில் நடக்கும் வண்ண வண்ண
குடைகளின் காட்சிகளும் பூரம் விழாவில் முக்கிய பங்குவகிக்கின்றன.
இந்த விழா 36
மணிக்கும் அதிகமாக வெகு விமரிசையாக தெக்கிங்காடு மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்
கண்டு களிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.
பூரம் தினத்தில் ஐம்பது அல்லது
அதற்கும் மேற்பட்ட யானைகள் திரிச்சூர் நகரம் மற்றும் வடக்குநாதன் கோயிலின்
மையப்பகுதியை கடந்து செல்லும்.
திரிச்சூர் பூரம் விழாவை ஒரு பெரிய மக்கள் திருவிழாவாகக் கொண்டாடும்படி உருவாக்கியவர் சக்தன் தம்புரான் ஆகும். வடக்குநாதன் கோயிலைச் சுற்றியிருந்த பத்து கோயில்களை ஒருங்கிணைத்து, மேற்குக் குழு என்றும் கிழக்குக் குழு என்றும் பிரிக்க உத்தரவிட்டார். திருவம்படி என்ற மேற்குக் குழு - திருவம்படி, கனிமங்கலம், லல்லூர், அயன்தோல், நெத்திலக்காவு ஆகிய கோயில்களை உள்ளடைக்கியது. பரமேக்காவு எனப்பட்ட கிழக்குக் குழு - பரமேக்காவு கோயில், காரமுக்கு, செம்புக்காவு, சூரக்கோட்டக்காவு, பலமுக்கம்பள்ளி ஆகியவற்றை உள்ளடைக்கியது. இந்தப் பூரம் திருவிழா வடக்குநாதன் கோயிலை மையமாகக் கொண்டு, எல்லாக் கோயில்களின் உற்சவ மூர்த்திகளும் யானையின் மேல் ஊர்வலமாக வடக்கு நாதர் சிவனுக்கு மரியாதை செலுத்த அனுப்பிவைக்கப்படும். வடக்கு நாத சிவபிரானின் அருள் வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் பரிபூர்ணமாகக் கிட்டப் பிரார்த்திப்போமாக.
Comments