காயத்திரி மந்திர மகிமை

 

காயத்திரி மந்திர மகிமை

உலகத்திலேயே சிறந்த கடவுள் வாழ்த்து காயத்ரி மந்த்ரம். உலகத்திலேயே சிறந்த கடவுள் வாழ்த்து காயத்ரி மந்த்ரம்என்பது டாக்டர் ஹொவார்டு ஸ்டீங்கேரில் என்ற ஒரு விஞ்ஞானியின் கணிப்பு.

 

நிறைய மதங்களின் முக்ய வேதங்களை அலசி அவற்றின் சக்தியை விஞ்ஞான பூர்வமாக ஆய்வுக்குப் பின் தான் இந்த முடிவுக்கு வந்தார்.

 

அவரின் ஆய்வின் விவரம் வருமாறு:

 

1. காயத்ரி மந்த்ரத்தை உச்சரிக்கும்போது 1,10,000 ஒலி அலைகள் ஒரு வினாடியில் வெளிவருகிறது.

2. காயத்ரி மந்த்ரத்தில் தான் மற்ற மந்த்ரங்களை விட உலகத்திலேயே சக்தி அதிகம்..

3. காயத்ரி மந்த்ரத்தின் சப்த அலைகள் ஆன்ம சக்தியை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

4.ஜெர்மனியில் ஹாம்பர்க் சர்வகலாசாலை இதை ஆராய்ச்சி செய்து உயிர்

வாழ உடலுக்கும் மனதுக்கும் அது தெம்பு கொடுப்பதை அறிந்தது.

5. தென் அமெரிக்காவில் சுரினாம் என்கிற நாட்டில் தினமும் மாலை ரேடியோ பரமரிபோவில் பதினைந்து நிமிஷங்களுக்கு காயத்ரி மந்த்ரம் இரண்டு வருஷத்துக்கும் மேலே ஒலிபரப்பப்படுகிறதாம். இதை பின்பற்றி ஹாலந்து நாட்டிலும் இந்த நல்ல பழக்கம் வழக்கத்துக்கு வந்ததாம்.

 

இந்த காயத்ரி மந்த்ரத்தை பற்றி ஒரு சிறிய விளக்கம்:

 

காயத்திரி ரிக் வேத மந்திரம். 2500 லிருந்து 3500 வருஷங்களுக்கு முன்னால் சம்ஸ்க்ரிதத்தில், ரிக்வேதத்தில் தோன்றியது. அதற்கும் முன்னாலே பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே இது உச்சரிக்கப்பட்டு வந்தது என்கிறார்கள்.

 

காயத்ரி மந்த்ரத்தின் பிரணவ சப்தம் மற்ற எந்த மந்திரத்திற்கும் மூலாதாரமாகவே உள்ளது..

 

தவம் என்றாலே நம் கண் முன் தோன்றி, மனத்தில் முதலில் இடம்பெறும் விச்வாமித்ரருக்கு உபதேசிக்கப்பட்டது காயத்ரி மந்த்ரம்.

 

'ஹே பரப்ரம்மமே உன்னிலிருந்து வெளிப்படும் அந்த ஞான ஒளி என்னிலிருக்கும் அஞ்ஞான இருளை விரட்டி ஞானப்ரகாசம் அருளவேண்டும்"

என்பது காயத்ரி மந்த்ரத்தின் பொருளாகும்

 

காயத்ரி என்றால் என்ன?

 

''காய"" என்பது உயிரூட்டும் சக்தி. ''த்ரி'' என்றால் அது செய்யும் மூன்று வேலை:

அதாவது பாதுகாக்கிறது, புனிதப்படுத்துகிறது. பரமனிடம் கொண்டு சேர்க்கிறது.

 

வேதங்களில் நாம் அறியும் ஏழு லோகங்கள் நாம் இருக்கும் இந்த லோகத்தைவிட,படிப்படியாக மேன்மை பெற்றவை. ஒன்றைக்காட்டிலும்

மற்றொன்று அதி உன்னதமானது. காயத்ரி மந்த்ரம் விடாமல்சொல்பவனைப் பார்த்த்தாலே அவனிடம்ஒரு தனி தேஜஸ், உள்ளே இருக்கும்ஓஜஸ் வேறு வெளியே ஒளி வீசும்.அதன் 24

அக்ஷரத்வனி அலாதி. சூக்ஷ்ம ஆத்மாவின் குரல் அது.

 

மந்திரம்

--------------

ஓம் பூர் புவஹ ஸ்வஹ

தத்ஸவிதுர்வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோநஹ ப்ரசோதயாத்

 

அர்த்தம்:

_________

வழிபடத்தக்க சூரியனின் ஆன்மிக உணர்ச்சிகளின் மூலம் படரும் தெய்வீகமான ஒளியின் மீது நாம் தியானம் செய்வோம்; அது நம் உள்ளுணர்வை தட்டி எழுப்பும். இந்த மந்திரம் இருப்பதற்கான காரணத்தை "காயத்ரி" என்ற வார்த்தையே விளக்கி விடுகிறது.

 

கயண்டம் ட்ரியேட் இட்டி என்ற சமஸ்கிருத சொற்றொடரில் இருந்து வந்தது தான் "காயத்ரி". இந்த மந்திரத்தை ஓதுபவர்களை, மரணம் வரை அழைத்து செல்லும் மோசமான சூழ்நிலைகளில் இருந்து பாதுகாக்கும்.

 

இந்த மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்குமான அர்த்தம்:

 

ஓம்: பிரம்மா அல்லது முதன்மை கடவுள்

பூர்: அதிமுக்கிய ஆன்மீக ஆற்றலின் உள்ளடக்கம் (பிரான்)

புவஹ: துன்பங்களை அழிப்பவர்

ஸ்வஹ: சந்தோஷத்தின் உள்ளடக்கம்

தத்: அது

ஸவிதுர்: சூரியன் போன்ற பிரகாசம் மற்றும் பளபளப்பு

வரேண்யம்: சிறந்த, பெரு மகிழ்ச்சி நிலை

பர்கோ: பாவங்களை அழிப்பவர்

தேவஸ்ய: இறைதன்மை

தீமஹி: உள்ளீர்த்துக் கொள்ளலாம்

தியோ: அறிவாற்றல்

யோ:யார்

நஹ: நாம்

ப்ரசோதயாத்: ஊக்குவிக்கலாம்

  

மந்திரத்தின் மூலம்

----------------------------

தோராயமாக 2500-3000 ஆண்டுகளுக்கு முன், முதன் முறையாக வேதங்களில் தான் காயத்ரி மந்திரம் இயற்றப்பட்டது. இதுவே முதன்மையான மந்திரமாக கருதப்படுகிறது. இதனை மிகவும் ரகசியமாக பல வருடங்களாக காத்து வந்தனர் யோகிகளும் ரிஷிகளும். அதற்கு காரணம் இந்த மந்திரத்தில் உள்ள கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிலான சக்திகளே.

  

காயத்ரி மந்திரம் ஓதுவதால் ஏற்படும் பயன்கள்

------------------------------

 

இந்த குறிப்பிட்ட மந்திரத்தின் அதிர்வுகளால் உங்கள் வாழ்க்கையில் பல பயன்கள் இருக்கும்.

 

1. தடைகளை நீக்கும்

2. ஆபத்தில் இருந்து பாதுகாக்கும்

3. அறியாமையை போக்கும்

4. எண்ணங்களை தூய்மைப்படுத்தும்

5. உங்கள் தொடர்பு திறன்களை மேம்படுத்தும்

6. மனித மனம் சார்ந்த பார்வையை திறக்கும்.

 

காயத்ரி மந்திரத்தின் குணப்படுத்தும் சக்திகள்

 

காயத்ரி சக்தி என்பது ஒரு ஆற்றல் தளமாகும். இங்கே மூன்று ஆற்றல்கள் உச்சத்தை அடைகிறது - தேஜஸ் அல்லது சுடரொளி, யாஷஸ் அல்லது வெற்றி, வர்சாஸ் அல்லது அறிவாற்றல். காயத்ரி மந்திரத்தில் ஓதும் போது இந்த ஆற்றல்கள் உங்களுக்குள் உட்புகும். இதனால் அருளக்கூடிய சக்தியை உங்களுக்கு அளிக்கும். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து ஆசி பெறுபவர்களுக்கும் கூட இந்த ஆற்றல்கள் பரவும். உங்கள் அறிவாற்றலை கூர்மையாக்கி, காலப்போக்கில் களங்கமடையும் நினைவாற்றலை தீட்டவும் காயத்ரி மந்திரம் உதவும்.

 

காலையில் சூரியன் விடியும் நேரமோ அல்லது மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரமோ தான் காயத்ரி மந்திரத்தை ஓதுவதற்கான சிறந்த நேரமாகும். இந்நேரத்தில் தான் மொத்தமாக இருட்டாகவும் இருக்காது, அதே சமயம் மொத்தமாக வெளிச்சமாகவும் இருக்காது.

 

இந்த தருணத்தில், மாற்றப்பட்ட உணர்ச்சி நிலைக்கு மனது நுழையும். மாற்றங்கள் அல்லது இயக்கத்தில் மாட்டிக்கொள்ளாமல், உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. இந்நேரங்களில் நம் மனம் சுலபமாக குழம்பிவிடும். செயலற்ற தன்மை, சோம்பல் மற்றும் எதிர்மறை போன்ற நிலைக்கு நாம் தள்ளப்படலாம். அப்படி இல்லையென்றால் நேர்மறை சுடரொளியில் தியான நிலையை அடைவோம்.

 

இந்நேரத்தில் காயத்ரி மந்திரத்தை ஓதினால், நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து, அதனை உயர்ந்த மற்றும் ஆற்றல் மிக்க நிலையில் பராமறித்திடும். இதனால் உங்களுக்கு அளவுக்கு அதிகமான நேர்மறை ஆற்றல்கள் கிடைக்கும். மந்திரத்தை ஓதும் போது இது உங்களுக்கு ஆற்றல்களையும் புத்துணர்ச்சியையும் சீரான முறையில் அளிக்கும்.

 

"வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்" என்று பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுவது இதன் மகத்துவத்தை உணர்த்தும்..

 

இத்தனை பெருமை வாய்ந்த காயத்திரி மந்திரத்தை உலகுக்கு அளித்தவர் விசுவாமித்ர முனிவர்.

 

இவர் காயத்தையே (உடலை) திரியாக எரித்து கா மந்திர சக்தியான காயத்திரி மந்திரத்தினால் வேத மாதாவான காயத்திரி அம்மனை தரிசித்து எண்ணற்ற சித்திகளைப் அடைந்து பிரம்மரிஷி

என்ற பட்டம் பெற்றவர்.

 




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017