வரலட்சுமி விரதம் – வெள்ளி, 20, ஆகஸ்ட், 2021
சாருமதி என்னும் பெண்ணின் கனவில் வரலட்சுமி
தாயார் தோன்றி வரலட்சுமி விரத முறைகளை உபதேசித்து அதைக் கடைப்பிடிக்குமாறு
கூறினார் என்றும் அன்றுமுதல் இந்த விரதம் பூலோகத்தில் அனைவராலும் கடைப்பிடிக்கப்
படுகிறது என்று புராணத்தில்
சொல்லப்படுகிறது.
‘வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பவர்களின் வீட்டில் நான் நிரந்தரமாக
வசிப்பேன்’ என்பது, சாருமதிக்கு திருமகள் அளித்த திருவாக்கு.
வரும்
வரலட்சுமி விரத நாளில் (20.8.2021
வெள்ளிக்கிழமை) நீங்களும் வர லட்சுமியை வீட்டுக்கு வரவேற்று
வழிபடுங்கள். வரலட்சுமி விரத நன்னாளில் திருமகளை விரும்பி அழைத்தால், மனம்
மகிழ்ந்து நம் இல்லத்துக்கு மகாலட்சுமி வருவாள்.
ஓம்
கமலாயை நம:
ஓம்
ரமாயை நம:
ஓம்
லோக மாத்ரே நம:
ஓம்
விச்’வ ஜநந்யை நம:
ஓம்
மஹாலட்சுமியை நம:
ஓம்
க்ஷீராப்தி தநயாயை நம:
ஓம்
விச்வஸாக்ஷிண்யை நம:
ஓம்
சந்தரசோதர்யை நம:
ஓம்
ஹரிவல்லபாயை நம:
என்னும் ஒன்பது நாமங்களைச் சொல்லி
பூஜை செய்ய வேண்டும். பின்பு வரலட்சுமி தேவியை வணங்கிவிட்டுக் கையில் சரடு
கட்டிக்கொள்ள வேண்டும். சரடை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.
வாய்மை வாசகர்கள் அனைவரின் வீட்டிலும் வரலட்சுமி எப்போதும் வாசம் செய்து அம்பாளின் பூரண அருள் கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.
Comments