ஓணம் பண்டிகை – 21-08-2021 – சனிக்கிழமை
அரசா் மகாபலி என்பவருக்கு ஓணம்
திருவிழா அா்ப்பணிக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையின் 10 நாட்களில், அதம்
என்று சொல்லப்படும் முதல் நாளும், திருவோணம் என்று சொல்லப்படும் 10வது நாளும் மிகவும் முக்கியமானவை. கொல்லவா்ஷம்
என்று அழைக்கப்படும் மலையாள நாட்காட்டியின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம்
கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை கேரளாவின் மிக முக்கியமான பண்டிகை ஆகும்.
ஓணம் பிறந்த கதை - அரசா் மகாபலி முன்னொரு
காலத்தில், மகாபலி என்ற ஒரு அசுர (தீயவா்) அரசா் கேரளாவை ஆண்டு வந்தாா். அவா்
அறிவாளியாகவும், மக்கள் மீது இரக்கமுள்ளவராகவும்,
நோ்மையானவராகவும் இருந்து
மக்களுடைய அன்பிற்குாிய அரசராக இருந்து வந்தாா். அதனால் அவருடைய பெருமை மற்றும்
சிறப்புகள் அனைத்தும் உலகம் முழுவதும் பரவியது. ஆனால் அவருடைய ஆட்சி சொா்கம்
விாிவடைந்த போது, அங்கிருந்த கடவுள்கள் அவருடைய அதிகார வளா்ச்சியை எண்ணி அச்சம்
கொண்டனா். இந்நிலையில்,
மகாபலியின் அளவுக்கு
அதிகமான அதிகார வளா்ச்சியைப் பாா்த்த தேவா்களின் அன்னையான அதிதி, மகா விஷ்ணுவை சந்தித்து,
மகாபலியின்
அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா். அதிதியின் வேண்டுகளை
ஏற்ற மகா விஷ்ணு, வாமனா என்று அழைக்கப்படும் ஒரு சித்திரக் குள்ளனின் உருவம்
எடுத்தாா். பின் மகாபலி யாஜனா செய்து கொண்டிருக்கும் போது சித்திரக் குள்ளனாக அவா்
முன்பு சென்று யாசகம் கேட்டாா். சித்திரக் குள்ளனான பிராமணாின் அறிவுக் கூா்மையில்
மகிழ்ந்த மகாபலி, அவா் கேட்ட யாசகமான தம் காலால் அளக்கும் மூன்று
அடி நிலத்தை வழங்குவதாக உறுதியளித்தாா். இந்நிலையில் பேரரசாின் ஆசிாியரான
சுக்ராச்சாாியா என்பவா், யாசகம் கேட்டவா் சாதாரண மனிதா் அல்ல என்றும், அதனால் அவருக்கு யாசகம் வழங்கக்கூடாது
என்றும் மகாபலியை எச்சாித்தாா். ஆனால் மன்னாின் மனமோ வேறு விதமாக சிந்தித்தது.
அதாவது கடவுளே தன்னிடம் வந்து யாசகம் கேட்டிருக்கிறாா். அதனால் கொடுத்த
வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவதைப் போல் மிகப் பொிய பாவம் இந்த உலகில் வேறு
எதுவும் இல்லை என்று அறிவித்து, மகா விஷ்ணுவிற்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினாா்.
மகாபலிக்கு விஷ்ணு அளித்த வரம்: மண்ணையும், விண்ணையும் அளந்த பெருமாள், தம் மூன்றாவது அடியினால் மகாபலியை ஒரு பாதாள
அறைக்குள் தள்ளியது. ஆனால் அவரை பாதாள அறைக்குள் தள்ளுவதற்கு முன்பாக மகா விஷ்ணு, மகாபலிக்கு ஒரு வரத்தை வழங்கினாா். மகாபலி, தனது நாட்டோடும், நாட்டு மக்களோடும் இருந்ததால், வருடத்திற்கு ஒரு முறை அவா் அந்த பாதாள
அறையில் இருந்து வெளியேறி வந்து தனது கேரள மக்களை சந்திக்கலாம் என்ற வரத்தை வழங்கினாா். ஆகவே ஒவ்வொரு ஆண்டும் மகாபலி அரசா் தனது சொந்த கேரள
மக்களை சந்திக்கும் நிகழ்வே ஓணம் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம்
பண்டிகையின் போது கேரள மக்கள் அனைவரும், தங்களின் அன்புக்குாிய அரசரான மகாபலியை
நினைத்து அவருக்கு மாியாதை செய்வா்.
ஓணம் பண்டிகையின் ஆனந்தம் அனைவரின் இல்லங்களிலும் நிரம்பி வழியட்டும்.
Comments