ஆவணி அவிட்டம் (22 - 08 – 2021) & காயத்திரி ஜபம் (23 – 08 – 2021)
https://www.youtube.com/watch?v=2chU3B0Dq6U
ஆவணி அவிட்டம் அல்லது
உபா கர்மா என்பது பிராமணர், சத்திரியர் மற்றும் வைஸ்யர் ஆகிய மூன்று வர்ணத்தினருக்கும் உண்டு என்பது நாளடைவில்
உபா கர்மா பிராமணர்களுக்கு மட்டும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இருப்பினும் இப்பொழுதும் சத்திரியர் – வைஸ்யர் ஆகியவர்கள்
உபாகர்மா செய்கின்றனர்.
வேத வித்தகர், மரத் தச்சர், பொற்கொல்லர், துணி நெய்பவர், தான்ய
வணிகர் என்று பல சமூகத்தினரும் பூணூல் அணிந்து உபாகர்மா செய்வது இன்றும் நடைமுறையில்
உள்ளது. நான்காம் வர்ணத்தினர் கர்மாவாதிகாளாக யாகசாலை அமைக்கும்
பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இது தான் சர்வோ ஜனா சுகினோ பவந்து
என்ற ஹிந்து மத தத்துவத்தின் அடிப்படைத் தர்மமாகும்.
ஆவணி
அவிட்டம் என்பது வெறும்
பூணூல் மாற்றும் சடங்கு இல்லை. அது வேதக் கல்வியைத் தொடங்கும் நாள் என்கின்றன
சாஸ்திரங்கள். கல்வி கற்பதையும் கற்பிப்பதையும் போற்றும் விழா ஆவணி அவிட்டம்.
முற்காலத்தில் எல்லா விதமான கல்வியையும் கற்பதற்கு சிறுவர்களை அனுப்பும் முன்பாக
அவர்களுக்கு உபவீதம் என்னும் பூணூலை அணிவித்து காயத்ரி மந்திரம் உபதேசித்து
அனுப்பும் வழக்கம் இருந்தது. பிற்காலத்தில் அந்த வழக்கம் மாறி குறிப்பிட்ட சில
சமூகத்தினர் மட்டுமே அதை அணியும் வழக்கமாக மாறிவிட்டது.
ஆவணி
அவிட்டத்தன்று கல்வியைத் தொடங்குவதை 'உபாகர்மா' என்று சொல்கிறார்கள்.
'உபாகர்மா' என்ற சொல் வேதக்
கல்வியைக் குறிக்கிறது. வேதக் கல்வி என்பது 12 ஆண்டுகள்
குருகுலத்தில் தங்கி ஒரு மாணவன் கற்கவேண்டியது. இந்த 12 ஆண்டுகளில்
ஒவ்வொரு ஆண்டையும் இரு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். தட்சிணாயன மாதங்களான ஆடி,
ஆவணி, புரட்டாசி, ஐப்பசி,
கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறுமாதங்களில் `ஸ்ருதி’ என்று அழைக்கப்படும் வேதஸம்ஹிதை, ப்ராஹ்மணம்,
ஆரண்யகம், உபநிஷத்துகள் ஆகியவை
கற்பிக்கப்படும். பின்பு உத்ராயன புண்ணியகாலத்தின் தொடக்கமான தை மாதத்தில் 'உத்ஸர்ஜனம்' என்ற கர்மாவினைச் செய்து அந்த
ஆண்டுக்கான வேத பாடத்தை முடிப்பர்.
பின்பு வரும் ஆறுமாதங்களில் வேதம் தவிர்த்து சிக்ஷை (ஒழுக்கம்), வியாகரணம்
(மொழி இலக்கணம்), சந்தஸ் (ஒலியியல்), நிருக்தம்
(சொல் இலக்கணம்), ஜ்யோதிஷம் (ஜோதிடம்), கல்பம் (காலம்) ஆகிய பிற துறைசார்ந்த கல்விகள் கற்பிக்கப்படும். இப்படியே 12
ஆண்டுகள் கல்வி பயில வேண்டும் என்பது விதி.
வேத
அத்யயனமும், உத்ஸர்ஜனமும் உரிய காலத்தில் நம் அன்றாட வாழ்வில்
செய்ய இயலாதவர்கள் காமோகாரிஷீத் ஜபம் கட்டாயம் செய்ய வேண்டும். ஆண்டுமுழுவதும்
அறிந்து பாபம் செய்யவில்லை என்பதைச் சொல்லி நாம் செய்த காமம், கோபம் ஆகிய பாவங்களிலிருந்து விடுபட வேண்டும் என இந்த காமோகாரிஷீத் ஜபம்
செய்யப்படுகிறது. அதன்பின் யக்யோபவீதம் அணிந்து ஹோமங்கள் செய்வர். உபாகர்மாவின்
முக்கியமான சடங்கு வேதாரம்பம். வேதக் கல்வியைத் தொடங்குவது என்று
பொருள்.
வேதாரம்பத்தில்
'மஹேஸ்வர சூத்ரம்' சொல்லப்படும். இதன் பொருளை
மகாபெரியவர் ஒருமுறை உபாகர்மாவின் பெருமைகளைச் சொல்லி, அதில்
இடம்பெறு 14 சப்தங்களுடைய மஹேஸ்வர சூத்திரத்துக்கு விளக்கம்
கூறினார்.
"பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு
சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்! நடராஜாவோட சாப்பும் 14
சப்தத்தையே குடுத்துது! இந்தப் பதினாலு ஸூத்ரங்களையும், ஆவணியாவிட்டம் பண்றவா கேட்டிருப்பா. மஹேஸ்வரனோட டமருலேர்ந்து வந்ததால,
அதுக்கு மஹேஸ்வர ஸூத்ரம்ன்னு பேர் வந்தது. 'அ
இ உண், ருலுக், ஏ ஒங், ஐ ஔச், ஹயவரட், லண், ஞமங் ண நம், ஜ ப ஞ், க ட த ஷ்,
ஜப க ட த ச, க ப ச ட த சடதவ், கபய், சஷஸர், ஹல்" என்று
குறிப்பிட்டுள்ளார்.
மொழியின்
தொடக்கமாக அமையும் சப்தங்கள் தொடங்கி, வேதங்களின்
உட்பொருளாக அமையும் காயத்ரி மந்திரம் வரை நீள்வது இந்த ஆவணி அவிட்டம் எனப்படும்
உபாகர்மா. இந்த நாளில் சிரத்தையோடு கடைப்பிடித்து முறைப்படி உபாகர்மாவினைச்
செய்வது உலக நன்மைக்கு வழிவகுக்கும் என்கின்றனர் பெரியோர்கள்.
பூணூல் முதல் முதலில் அணிவதை உபநயனம் அல்லது பிரம்மோபதேசம் என்பர்.
உபநயனம்
– உப + நயனம் என்றால் துணை + கண் என்று பொருள்படும். நமக்கு இரண்டு நயனங்கள் ( கண்கள் )
இருக்கின்றன .அவை ஊனக் கண்கள் . இது தவிர மூன்றாவதாக ஒரு கண்தேவை . அது தான்
ஞானக்கண் . அக்கண்ணைப் பெறுவதற்கான சடங்குதான் உபநயனம். கடவுளைப் பற்றி அறியும்
அறிவே உயர்ந்த அறிவாகும் . அதனால் பூணூல் அணியும் சடங்கினை பிரம்மோபதேசம் என்று குறிப்பிடுவதுண்டு
.
தந்தை, ஆச்சார்யர் , குரு இவர்களில் யாரேனும் ஒருவரின்
வாயிலாக பூணூலை அணிவிக்கவேண்டும். திருமணமாகாதவர்கள் ஒரு பூணூலையும்
திருமணமானவர்கள் இரண்டு பூணூலையும் திருமணமான பின் தந்தையை இழந்தவர் மூன்று மூன்று
பூணூலையும் அணியவேண்டும் . அதன் பிறகு காயத்ரீ ஜபம் செய்யவேண்டும் .
காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தை பாராயணம் செய்யச் சொல்லி இருக்கிறது.
ஆகவே ஒவ்வொரவரும் காயத்ரீ ஜபத்தன்று ஆயிரம் தடவை காயத்ரீ மந்திரத்தையும் அல்லது
ஹோமத்தையும் செய்ய வேண்டும்.
நமது பாரத தேசம்
வேதம் தோன்றிய புண்ணிய பூமி. மற்ற தேசத்தினர் மாக்களாகத் திரிந்த அந்த கால கட்டத்தில் வேதம் – உபநிடந்தங்கள் – உன்னதமான இதிகாசங்கள் என்று ஆன்மிக சாகரத்தில்
உயர்ந்து மிளிர்ந்துள்ளது என்பதை இந்துக்களாக நாம் அனைவரும் அறிந்து பெருமை கொள்ளலாம்.
உலக மக்கள் அனைவரின்
க்ஷேமத்திற்காக உபகர்மா – காயத்ரீ ஜபம் செய்வோமாக.
Comments