டோக்கியோ ஒலிம்பிக் 2020 இந்தியாவின் சாதனை – ஏழு பதக்கங்கள்
டோக்கியோ ஒலிம்பிக் 2020
இந்தியாவின் சாதனை – ஏழு பதக்கங்கள்
32வது டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஜூலை 23, 2021 அன்று தொடங்கி, 8-ம் தேதி ஆகஸ்ட் நிறைவு பெற்றது.
கோவிட் நோய்த் தொற்று காரணமாக, 2020 ஆம் ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் மொத்தம் 17 நாட்கள் நடைபெற்றது. உலகின் மாபெரும் சர்வதேச
விளையாட்டுத் திருவிழா என்று அழைக்கப்படும் இந்த ஒலிம்பிக் தொடரில், 11000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டார்கள். இந்த 11000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் 205
நாடுகளில் இருந்து வந்துள்ளார்கள். 17 நாட்களில்
50 துறைகளில், 33 வகையான
விளையாட்டுகளில் 339 போட்டிகளில் வீரர்கள் பங்கேற்றுளார்கள்.
போட்டிகள்
அனைத்தும் முடிவடைந்த நிலையில், பதக்க
பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது. அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம்
என 113 பதக்கங்கள்
பெற்றுள்ளது. கடைசி நாளில் அமெரிக்கா 3 தங்கம் வென்றது.
38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம்
என 88 பதக்கங்களுடன்
சீனா 2வது இடம்
பிடித்தது.
போட்டியை நடத்தும் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது. 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களை ஜப்பான் கைப்பற்றி உள்ளது. ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் இந்தியா 48வது இடத்தில் உள்ளது.
மொத்தம் 86 நாடுகள் பதக்கம் பெற்றுள்ளன. .
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார். லாவ்லினா இவரைத் தொடர்ந்து குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். சீனியர் வீராங்கனை மேரி கோம் கூட காலிறுதியில் வெளியேறிய நிலையில் தனது முதல் ஒலிம்பிக்கிலேயே பதக்கம் வென்று அசத்தினார். இதன் பின்னர் மல்யுத்தப்போட்டியில் ரவிக்குமார் தஹியா இறுதிப்போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கமும், பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதே போல இந்தியாவின் ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.
இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்காத குறையினை, நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதல் போட்டியில்
முதலிடத்தை பிடித்து, ஒலிம்பிக்கில் தடகளப்பிரிவில்
இந்தியாவுக்காக முதல் பதக்கமான தங்கத்தை வென்று கொடுத்தவர் என்ற பெருமையை
பெற்றுள்ளார்.
இந்தியா இந்த முறை ஒரு தங்கப்பதக்கத்துடன் 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ள நிலையில் பாகிஸ்தான் ஒரு பதக்கத்தை கூட
வெல்லாமல் பதக்க பட்டியலில் இடம்பெறவில்லை.
1
ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்கள் என்பது இதுவரை இந்தியா பெற்ற அதிக பட்சமான பதங்களாகும்.
2
13 வருடங்களுக்குப் பிறகு இந்தியா இந்த வருடம் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளது.
3
ஹாக்கியில் 13 வருடத்திற்குப் பிறகு இந்த ஒலிப்பிக்கில் வெங்கலப் பதக்கம் பெற்றுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த நமது இந்திய விளையாட்டு வீர்ர்களை வாய்மை பாராட்டி உங்கள் சார்பாக பூச்செண்டு கொடுத்து கெளரவிக்கிறது.
வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.
இதுவரை இந்தியா பெற்ற மொத்த பதக்கங்கள் 35. அதில் தனி நபர் பெற்ற பதக்கங்கள் – 23
11 மாநில அரசு சார்ந்த விளையாட்டு வீர்ர்கள் பதக்கங்கள் பெற்றுள்ளனர். அதிகமான அளவில் ஹரியானா மாநிலம் 7 பதக்கங்கள் பெற்று முதலில் உள்ளது. அடுத்து 3 பதக்கங்கள் பெற்று மேற்கு வங்காளம் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி, மணிபூர், தெலுங்கானா என 3 மாநிலங்கள் 2 பதங்கள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளன. ஹிமாசல், உத்திரகாண்ட், ராஜஸ்தான், அசாம், மஹாராஷ்ரா, ஆந்திரா, தமிழ் நாடு ஆகிய 7 மாநிலங்கள் தலா 1 பதக்கம் பெற்றுள்ளது.
இந்த 23 –ல் - 2 தங்கம், 8 வெள்ளி, 13 வெங்கலம் என்ற அளவில் பதங்களை
இந்தியா பெற்றுள்ளது.
Comments