Posts

Showing posts from June, 2021

தி வீக் வாரப்பத்திரிகை வியாபார (விபசார) பத்திரிகையானதிற்கான சான்று இதோ:

Image
  v   தி வீக் வாரப்பத்திரிகை வியாபார ( விபசார ) பத்திரிகையானதிற்கான சான்று இதோ : ஜார்னலிசம் என்பது பத்திரிகைத் தர்மத்தை அதன் மூலக் கொள்கையாக கடைப்பிடிக்க வேண்டும் . பதவிக்கோ , பணத்திற்கோ பத்திரிகை அடிபணியாமல் தேசப்பற்றை காக்கும் கடமையையும் மறக்காமல் செயல்பட வேண்டும் . அதில் இப்போது பல பத்திரிகைகளும் , ஊடகங்களும் தவறிழைத்து தங்களை ‘ விபசார பத்திரிகை ’ என்ற குற்றச் சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக நடந்து கொண்டு பத்திரிகை விற்பனையை மட்டுமே கருத்தில் கொண்டு தரம் தாழ்ந்து காறிஉமிழும் நிலைக்குத் தங்களை தாங்களே தள்ளி , கொள்கைகளையே கொள்ளி வைத்து வாழும் நிலையில் இருப்பதைப் பார்க்கும் போது , நெஞ்சு பொறுக்குதிலையே என்று மனம் குமுறி விமரிசிக்க வைக்கிறது . அப்படி என்ன தான் தி வீக் பத்திரிகை செய்துள்ளது ? – என்று நீங்கள் கேட்கலாம் . தி வீக் பத்திரிகையின் ஜூன் 21, 2021 பத்திரிகையைப் பார்த்தாலே உங்களுக்கு நான் சொல்வதின் உண்மை புரியும் . தி வீக் என்பது மலையாள மாநிலத்திருந்து வெளிவரும் மலையாள மனோரமா குழ...