சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் குழப்பம் – ஆக்கம்: பவித்ரன்
சூப்பர்
ஸ்டார் ரஜனியின் பிரஸ் மீட்டில் பேசியது ஒரு உச்ச கட்ட குழப்பம் என்றால் மிகையாகாது.
‘நான்
முதல்வர் பதவியில் அமர மாட்டேன். அதற்கு வேறு திறமைசாலி – 50 வயதுக்கும் குறைவானவர்
தேர்வு செய்யப்படுவார்’ என்று கூறுவதைக் கூட பொறுத்துக் கொண்டு விடலாம். ஆனால் கட்சியில்
உள்ளவர்களுக்கு பதவி கிடையாது. பதவி ஆசை உள்ளவர்கள் கட்சிக்குத் தேவை இல்லை – என்று
ரஜினி கர்ஜிப்பது ‘ரஜினி மக்கள் மன்ற’ உறுப்பினர்களையே ஜகா வாங்க வைக்கும் என்று நினைக்கிறேன்.
‘வேலை செய் – ஆனால் கூலி இல்லை’ என்பது அரசியல் கட்சிகளுக்கு எந்தவிதத்திலும் சரிப்பட்டு
வராது என்பதை ரஜினி உணராமல் இருப்பது மிகவும் வருத்தமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.
அவர் ஏதோ ஒரு கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கிறார். நிஜ உலக – எதார்த்த அரசியல் ஞானம் இல்லாமல்
ரஜினியில் மனது குழப்பத்தில் மூழ்கி உள்ளதைத் தான் இது காட்டுகிறது.
ஆன்மீகம் அரசியலில்
ஊறுகாயாக தொட்டுக் கொள்ளத்தான் சிறிய அளவில் இருக்க வேண்டும். அதுவே அன்னமாக இலையில்
இட்டால், அதை சாப்பிடாமல் தவிர்த்து பட்டினிதான் கிடக்க வேண்டும். ஆன்மீக துண்டை அவரது
‘மக்கள் மன்ற’ ரசிகர்களின் தோள்களில் போட்டு, தியாகியாக கட்சிக்கு உழைக்க அறைகூவல்
விடுவதால் அவரது கூடாரம் காலியாவது திண்ணம்.
50-வயதுக்கு
உட்பட்டவர்கள் தான் சீட் என்று சொன்ன ரஜினி, ஓய்வு பெற்ற 60-க்கும் மேலே வயதான அரசாங்க
– நீதிபதிகள் ஆகியவர்களுக்குப் பதவி அளிப்பேன் என்பது முரணாகப் படுகிறதே!
ஏன், இந்தக்
குழப்பம்?
மேலும் ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகள் பலர் ‘சிஸ்டம்’ சரியாக இல்லாததற்கும்,
ஊழலுக்கும் துணை போனவர்கள் என்பதும் தெரிந்த ஒன்று தான். அப்படிப்பட்டவர்களை அவர்கள்
வீட்டிற்குச் சென்று வேண்டுவது ‘நேர்மையான – ஊழலற்ற ஆட்சி’க்கு உதவுமா? என்பதை ரஜினி
சிந்திந்துப் பார்த்தாரா? என்று தெரியவில்லை.
அவர்
விளக்கிய மூன்று அம்ச திட்டத்தில் என்ன புதுமை இருக்கிறது என்று தெரியவில்லை.
கட்சியில்
பதவி குறைவாகவும், கட்சி – ஆட்சி வேறு வேறு பேர்களிடம் இருக்கும் என்பது கட்சி முடிவு
செய்யவேண்டும். அதில் புரட்சிகரமான புதுமை இருப்பதாகத் தெரியவில்லை.
அடுத்த
திட்டம் கட்சிப் பதவி – ஆட்சிப் பதவி ஆகியவைகளில் 50-க்கும் கீழே உள்ளவர்களுக்குத்
தான் இடம் என்பதும் ரஜினியே சீட் கொடுக்கும் போது தன் கட்சியின் கொள்கையாக வைத்துக்கொண்டு
செயல்படவேண்டியது தானே!
அவரது
மூன்று அம்ச திட்டங்களின் விவரம் இதோ:
முதல் திட்டம்:
கட்சியின் பதவிகள் குறைவாக அத்தியாவசியமானவைகள் மட்டுமே இருக்கும். தேர்தலின் போது
உருவாக்கப்பட்ட அனைத்துப் பதவிகளும் தேர்தலுக்குப் பிறகு நீக்கப்படும்.
இரண்டாவது திட்டம்:
50 வயதிற்குக் கீழே உள்ளவர்கள் 65% தேர்தலில் நிற்க சீட் வழங்கப்படும். வேறு கட்சியில்
உள்ள 50 வயதிற்குக் கீழே உள்ள திறமைசாலிகள் பதவி கிடைக்காமல் அவதியுறும் நபர்களுக்கு
மீதி 35% அளவில் சீட் வழங்கப்படும். மேலும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., நீதிபதிகள், பணம்
– பண்பு படைத்த சமூக சிந்தனையுடைய புகழ்பெற்ற வல்லவர்கள் – ஆகியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து,
அவர்களை அரசியலுக்கு அழைத்து தேர்தல் சீட் வழங்கப்படும். அவர்களுக்கு எந்த விகிதத்தில்
பதவி என்பதற்கு விளக்கம் இல்லை.
மூன்றாவது திட்டம்:
கட்சித் தலைமை – ஆட்சித்தலைமை இரண்டும் வேறாக இருக்கும். ரஜனி கட்சித் தலைவர் மட்டும்
தான். முதல்வர் ஆட்சிப் பதவி திறமையான இளஞரிடம் அளிக்கப்படும்.
இரு
திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டில் 50 வருடங்களாக சுரண்டல் ஆட்சியைத் தான் கொடுத்துள்ளது.
அதற்குக் காரணம் – சிஸ்டம் சரியில்லை என்பது தான். அதைச் சரி செய்யத்தான் ரஜினி அரசியலில்
நுழைய விரும்புகிறான் – என்று விளக்கும் ரஜினி, ‘நான் முதல்வர் நாற்காலியில் அமரமாட்டேன்.
அந்த ஆசை எனக்குக் கிடையாது’ என்று தெரிவிக்கிறார்.
இந்த
ரஜினியின் 3 அம்ச திட்டம் தமிழ் நாட்டில் புரட்சியை உருவாக்க வேண்டும். புரட்சி வெடித்தால்
நான் அரசியலுக்கு வருவேன் – என்று சொல்வதால் ரஜினி இன்னும் ஒரு தெளிவான முடிவிற்கு
வரவில்லை என்று தான் படுகிறது.
அதை
விட மிகவும் குழப்பமான ஒன்றை ரஜினி அறிவித்துள்ளதை நினைக்கும் போது, அது அவரது அரசியல்
அறிவு சூன்யத்தைத்தான் காட்டுகிறது என்ற முடிவிற்கு வரத் தோன்றுகிறது.
அவர்
பிரஸ் மீட்டில் சொன்னது: “கடந்த 1960-ல் நடந்த புரட்சி இப்போது நடக்க வேண்டும்.
2021-ல் மக்கள் செய்து காட்ட வேண்டும். மக்கள் நன்றாக இருக்க, வருங்காலம் நன்றாக இருக்க,
அதிசயம் நிகழ்த்துவர்.”.
1960-ல்
நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைதான் ரஜினி குறிப்பிடுகிறார் என்று தெரிகிறது.
அது தமிழ் நாட்டில் நடந்த மிகப்பெரிய அநாகரியமான அவப்பெயரைப் பெற்றுத் தந்த கருப்பு
போராட்டமாகும்.
அஹிம்சை அறவழிப் போராட்டம் இல்லை. மேலும்.அப்போது இப்போது அனைவராலும்
போற்றப்பெற்ற காமராஜ் ஆட்சி தான் தமிழ் நாட்டில் நடந்தது. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்
வன்முறை தலைகாட்டி, தமிழ்நாட்டையே அகில இந்திய அளவில் தலைகுனிவை ஏற்படுத்தியது.
‘ஒரு
ரூபாய்க்கு ஒரு படி அரிசி’ என்று அண்ணாத்துரையின் அரசியல் சாணிக்கிய ஏமாற்று அறிவிப்பால்
திராவிடக் கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. அடுக்கு மொழி அரசியல், ஹிந்துக்களையும்,
ஹிந்துக்கடவுள்களையும் பழித்து ஹிந்துமத நாத்திக வாதங்கள் (மற்ற மதங்களைப் பாராட்டும்
கொள்கை முரண்பாடுகள்), காமக் கட்டுரைகள், அரசியல் நாகரிகமற்ற பேச்சு – அதில் அண்ணாதுரையும்
அடக்கம் – தமிழ் நாட்டு அரசியலைச் சாக்கடையாக உருவாக்கி விட்டது. அண்ணாத்துரை உருவாக்கிய
வாரிசுகள் ஊழலுக்கும், ஒழுங்கம் கெட்ட நடவடிக்கைகளுக்கும் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்து
– சிஸ்டம் ஒரே அடியாக கெட்டுக் குட்டிச் சுவராகிக்கியது இன்னும் தொடர்கிறது. அதற்கு
வித்திட்ட அண்ணாத்துரையை ரஜனி புகழ்வதை எப்படி ஏற்க முடியும்?
கருணாநிதியும்
– ஜெயலலிதாவும் ரஜினியின் 3 அம்ச திட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்கள் என்பதை ரஜினி
வெளிப்படையாக குற்றம் சாட்ட ஏன் பயப்பட வேண்டும்?
“50%
பேர்கள் சரியாகக் கணித்து ஓட்டுப் போடுபவர்கள் மத்தியில், 30% பேர்களுக்குமட்டும் தான்
யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்ற தெளிவான சிந்தனை கிடையாது. ஆகையால், அவர்கள் மனத்தை
மாற்ற வேண்டும்” – என்பது உச்ச கட்ட ரஜினியின் குழப்பம். அப்படி என்றால் 50% பேர்கள்
இதுவரை சரியாக ஓட்டளித்தார்கள் என்றா ரஜினி கணிக்கிறார்? 30% பேர்களின் ஓட்டில் ரஜினியின்
கட்சி எப்படி ஜெயித்து ஆட்சியில் அமர முடியும்?
கருணாநிதிக்காகவும்,
ஜெயலலிதாவுக்காகவும் 70% பேர்கள் ஓட்டுப் போட்டார்கள் – கட்சிக்காக 30% பேர்கள் ஓட்டுப்
போட்டார்கள் – என்பதால், ரஜினி அவர்கள் கருணாநிதி – ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவர்கள்
தேர்தல் களத்தில் இல்லாததால், வெற்றிடம் உண்டாகி இருப்பதாகவும், அந்த 70% தமது மக்கள்
மன்றக் கட்சி குறி வைக்க வேண்டும் என்று கணக்குப் போடுகிறார். இந்தக் கணக்கு எந்த அளவிற்கு
சரியானது என்பது தேர்தலுக்குப் பிறகு தான் தெரியவரும்.
காந்தியையும்,
விவேகானந்தரையும் மேற்கோள் காட்டுகிறார் ரஜினி.
காந்திஜி – தேச விடுதலைக்காகப் போராடினார்.
ஆகையால், நாட்டிற்காக – தேச விடுதலைக்காக உயிரையும் தியாகம் செய்ய மக்கள் முன் வந்தார்கள்.
சாத்வீகப்புரட்சி செய்து தேசம் விடுதலை பெற்றது.
விவேகானந்தர்
ஆன்மிகவாதி. ஆட்சியைப் பிடிக்க 100 இளைஞர்களைக் கேட்க வில்லை. இந்தியாவின் இதயமான ஹிந்து
தர்மத்தை நிலைநாட்ட உழைத்தார். வெற்றி கண்டார்.
ஓ,
தலைவா! உங்கள் 3 அம்ச திட்டம் புரட்சிக்கு வித்திடாது. அதில் எந்த புதுமையோ – கொள்கையோ
இல்லை. ஆகையால், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்களுக்காக – ரஜினிக்காக இருப்பினும்
ஓரளவு ரசிகர்கள் முன்வரலாம் – ஊதியமோ, பதவியோ இன்றி தியாக உணர்வுடன் அரசியலில் எந்த
தொண்டனும் களத்தில் இறங்க மாட்டான். உங்கள் அரசியல் கூடாரம் கூடிய சீக்கிரம் காலியாகும்
என்பது தான் வாய்மையின் கணிப்பு.
தலைவன்
சொல்வதை, ஏற்பவனே தொண்டன். தொண்டன் சொல்வதை ஏற்பவன் தலைவன் அல்ல – என்பது அரசியலுக்கு
ஏற்புடையது அல்ல.
தலைவன் சொல்வதை ஏற்க வைப்பவனும், தொண்டன் சொல்வதைக் காது கொடுத்துக்
கேட்டு அவனை மதிப்பவனும் தான் அரசியல் தலைவனாக பல காலம் நீடித்து இருக்க முடியும்.
மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்டு – அவைகளை அலசி ஆராய்ந்து ரஜினி முடிவெடுப்பான்
– என்று சொல்லும் போது தொண்டன் சொல் அம்பலம் ஏறாது என்றால் எப்படி, தலைவா?
தொண்டன்
கட்சித் தலைவனின் அடிமையாக இருக்க வேண்டும் என்று ரஜினி நினைத்தால், அது சர்வாதிகார
கருத்தாகவே கணிக்கப்பட்டு, அது ஒரு ஆரோக்க்யமான ஜனநாயக தொண்டன் – தலைவன் என்ற நிலைப்
பாட்டை தவிடுபொடி ஆக்கி விடும் என்பதை ரஜினி உணர்ந்ததாகத் தெரியவில்லை.
‘நான் தீர்மானித்து
விட்டேன். அதைச் செய். இல்லையேல் வெளியேறு’ என்ற தலைவனின் மனநிலை – அதுவும் புதிதாகக்
கட்சி ஆரம்பிக்கும் தருணத்தில் கொண்டிருப்பது ஆரோக்கிய அரசியல் இல்லை.
ஆட்சி
மாற்றம் ரஜினியால் ஏற்பட வாய்ப்பே இல்லை என்பது தான் வாய்மையின் கணிப்பு.
புரட்சி
வேண்டாம் – புத்துணர்ச்சி வேண்டும் – அதை திராவிட கட்சிகள் இல்லா ஆட்சி உதயமானால் தான்
சாத்தியமாகும். அந்த விடிவெள்ளியை ரஜினியால் ஏற்படுத்த முடியாது.
சூப்பர்
குழப்பவாதியாக தன்னை அடையாளம் காட்டி விட்டார் ரஜினி. ரஜினியின் குரல் அவ்வளவாக வரும்
தமிழக 2021 தேர்தலில் எடுபடாது என்று தான் கருதத் தோன்றுகிறது.
இரு
திராவிட கட்சிகள் இல்லா ஆட்சி – அந்த மாற்றம் தான்புரட்சி – அது 2021-ல் ஏற்படவில்லை
என்றால் எப்போதும் மாற்றம் இல்லை – என்று கூட ரஜினியால் தெளிவாகத் தெரிவிக்க முடியவில்லை.
குழப்பிப்
போய் இருப்பவர்களிடம் தெளிவான கருத்தையோ – செயலையோ எதிர்பார்க்க முடியாது. இன்னும்
ஒரு வருடம் இருக்கும் இந்த நிலையிலும் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கை – ஆகியவைகளை
வெளியிடுவதில் தயங்குவதும், இன்னும் சில சினிமாவிற்கு கால் ஷீட் கொடுத்துக் கொண்டிருக்கும்
ரஜினி முழு அரசியல் வாதியாகவோ – முழு சினிமா வாதியாகவோ இருப்பதிலும் அவரது மனது அலைபாய்கிறது.
‘நான்
ஒரு தடவை சொன்னா அது ஒன்பது தடவை சொன்ன மாதிரி!’ என்ற வசனம், இப்போது ‘தலைவா! நீ ஒரு
தரம் இல்லை – ஒன்பது தரம் சொன்னாலும், குழப்பம் தீராது. வேறு கூடாரத்திற்குச் செல்கிறேன்.
விடைகொடு, தலைவா!’ என்ற நிலை தான் இப்போது.
இருப்பினும் ரஜினியின் உள்ளம் நல்ல உள்ளம்.
அது ஏதோ ஒரு விதத்தில் தமிழ் நாட்டு ஆட்சியின் சிஸ்டத்தைச் சரிசெய்ய உதவினால், அதுவே
ஒரு தொடக்கமாக அமையலாம். அது நிகழும் என்று நம்புவோமாக.
Comments