53
உயிர்கள் பலி – அதில் பலரது உடம்புகளில் நாட்டு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து உயிர்
இழப்பு. பல உடல்கள் சாக்கடையிலிருந்து மிட்பு. 250 பேர்களுக்கு மேல் காயம்.
ஷாஹீன்
பாக் – முஸ்லீம் பெண்கள் கடந்த டிசம்பர் 14-லிருந்து தெருவை அடைத்து எந்தவிதமான வாகனங்களோ,
மனிதர்களோ செல்ல முடியாமல் ‘குடியுரிமைத் திருத்த சட்டத்தை’ எதிர்த்து போராடிய இடத்திலிருந்து
சமீபத்தில் மூன்று உடல்கள் மூன்று வெவ்வோரு இடங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சுப்ரீம்
கோர்ட் தலையிட்டும் இந்த பொது வீதியை அடைத்துப் போராடுவதைத் தடுக்க முடியாமல் மார்ச்
23-வரை காலக்கெடு விதித்துள்ளது. ‘போராடுங்கள் ஆனால் இங்கே வேண்டாம். வேறு இடத்திற்குச்
செல்லுங்கள்’ என்று சுப்ரீம் கோர்ட் ஒரு பிச்சைக்காரனைப் போல் கெஞ்சியதை இப்போது தான்
இந்தியா காணும் பாக்கியம் பெற்றுள்ளது. வாழ்க சுப்ரீம் கோர்ட்டின் சகிப்புத் தன்மையும்,
பாரபட்சமான அணுகுமுறையும்.
முஸ்லீம்களுக்குச்
சொந்தமான கட்டிடங்களில் கலவரம் உண்டாக்கும் கற்கள், பெட்ரோல் குண்டுகள், வெடிகுண்டுகள்,
கத்திகள், அமிலங்கள் ஆகியவைகள் சேமித்து வைத்துள்ளது கண்டு பிடிப்பு.
மசூதிகளில் மேல் தளங்களில்
இதோ போல் கலவரத்தைத் தூண்டும் கற்கள், கத்திகள் போன்றவைகள் கண்டு பிடிப்பு.
உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா படுகொலை. கல்லால் தாக்கப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக சாக்கடையில் இருந்து மீட்கப்பட்ட உடல். போஸ்ட் மார்டம்
அறிக்கையில் இவரது உடலில் 400 கத்திக் காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தான் ‘அமைதி மார்க்க முஸ்லீம்’ மதத்தவரின் சாத்வீக போராட்டமா? இந்த
படுகொலையில் முக்காடு முஸ்லீம் பெண்களும் ஈடுபட்டுள்ளார்கள் என்பதைப் பார்க்கும்
போது, நெஞ்சம் கொதிக்கிறது.
காஷ்மீரத்தைச்
சேர்ந்த கணவன்-மனைவி இருவர் ஜாமியா நகரில் முஸ்லீம்களிடையே டெல்லியில் கலவரத்தை தீவிரப்படுத்த
தூண்டியதற்கு டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான்
தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருப்பது தெரிவந்துள்ளது. இவர்கள் சார்ந்த
ISKP என்பது IS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புள்ளது என்பதால் இதன் தீவிரத்தை உணரலாம்.
டிசம்பர்
14, 2019 அன்று ராம் லீலா மைதானத்தில் நடந்த ‘பாரத் பச்சோ’ பொதுக் கூட்டத்தில், சோனியா,
ராஹுல், பிர்யங்கா ஆகியவர்கள் கலவரத்தைத் தூண்டும் வகையில் போராட மக்களைத் தூண்டியதும்,
அதன் பிறகு ஷாஹான் பாக் பொதுப் பாதை அடைப்புப் போராட்டம் சூடு பிடித்து அதன் மூலம்
டெல்லி கலவரத்திற்கு அங்கு வித்திடப்பட்டதை யாரும் மறுக்க முடியாது.
வாரிஸ் பதான் என்ற AIMIM-ன் தலைவர் CAA-க்கு எதிரான
போராட்டத்தில் ’15 கோடி முஸ்லீம்கள் 100 கோடி இந்துக்களை எதிர்ப்பார்கள்’ என்ற பேச்சால்
எட்டு ஒன்பது இடங்களில் கலவரங்கள் மூண்டன. மேலும் ‘UNITED AGAINST HATE” என்ற கூட்டத்திலும்,
‘டொணால் டிரம்ப் இந்தியா வரும் போது போராட்டம் நடத்தி அதன் மூலம் உலகப் பார்வையை நம்
பக்கம் திருப்ப வேண்டும்’ என்ற அளவிலும் கலவரப் பேச்சுக்கள் முஸ்லீம் மக்களைத் தூண்டும்
வகையில் அமைந்துள்ளன.
ஹார்ஸ்
மந்தார் என்பவர் சோனியாவின் NAC உறுப்பினராக இருந்தவர். அவர் காங்கிரசின் – THINK
TANK – என்ற கொள்கை உருவாக்கும் குழுவில் இடம் வகிப்பவர். அவர் திருவாய் மலர்ந்த இந்தியாவின்
இறையாண்மையையே துண்டு துண்டாக்கும் பொது மேடையில் போராட்டக்காரர்களிடம் தெரிவித்த கருத்துக்கள்:
“சுப்ரீம் கோர்ட்டை இனி நம்பிப் பிரயோசனம் இல்லை. என்.ஆர்.சி., அயோத்யா, காஷ்மீர் ஆகியவைகளில்
சுப்ரீம் கோர்ட் மனிதநேயம், சமத்துவம், செக்குலரிசம் ஆகியவைகளைக் காப்பாற்றவில்லை.
மேலும் பார்லிமெண்ட்டும் காப்பாற்றாது. ஆகையால் நாம் தெருவிற்கு வந்து போராட வேண்டும்.
தெருவிற்கு அனைவரும் வந்து போராட வேண்டும். நமக்கு நியாயம் தெருவிற்கு வந்து போராடினால்
தான் கிடைக்கும்.’ இப்படிப்பட்டவர்களின் கைகளில் காங்கிரஸ் தனது கொள்கையை நிர்ணயிக்கும்
அதிகாரம் கொடுக்கும் போது, காங்கிரஸுக்கும் இந்திய அரசியல் சட்டம், சுப்ரீம் கோர்ட்,
பார்லிமெண்ட் ஆகியவைகளை அழித்து, இந்திரா காந்தி போல் எமர்ஜென்சியை ஏற்படுத்தவும்,
இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தவும் அவர்கள் முஸ்லீம்களைத் தூண்டி, ஹிந்து-முஸ்லீம்
கலவரங்களை ஏற்படுத்தி, இன்னுமொரு இந்தியா பிளவு பட வழிவகுக்க முயலுகிறது காங்கிரஸ்.
விழிப்போடு இருக்கும் இந்துக்களால் தான் இதைத் தடுத்து நிறுத்த முடியும். கீழ்க்கண்ட இரண்டு வீடியோக்களில் ஹாரிஸ் மந்தர்
சுப்ரீம் கோர்ட், பார்லிமெண்ட் ஆகியவைகளை அவதூறாகப் பேசியதைக் கேட்கவும்:
கபில்
சிபில் காங்கிரஸின் வக்கீல் – முக்கிய தலைவர். காங்கிரஸின் CAA எதிர்ப்பே “அது முஸ்லீம்களுக்கு
எதிரானது” என்பது தான். ஆனால் கபில் சிபில் ராஜ்ய சபாவில் – அமித் ஷா டெல்லி கலவரத்தைப்
பற்றிப் பேசும் போது, ‘காங்கிரஸ் CAA – யை முஸ்லீம்களுக்கு எதிரான சட்டம் என்று சொன்னதில்லை’
என்று ஒரே போடாகப் போட்டு, ஒரு பெரிய யு-டர்ன் செய்து, அனைத்து அரசியல் கட்சிகளையும்
– காங்கிரஸ் உட்பட – அதிர்ச்சி வைத்தியம் செய்து விட்டார். ஏன் இந்த திடீர் திருப்பம்
என்பது தெரியவில்லை. ராஹுல் – சோனியா அவர்களின் கருத்தும் இது தானா? என்பதும் தெளிவாக
வில்லை. ஆனால் ஒன்று. முஸ்லீம் மக்களை காங்கிரஸ் ஏமாற்றி விட்டது என்று தான் சொல்ல
வேண்டும். டெல்லி தேர்தலில் முஸ்லீம்கள் காங்கிரசிற்கு ஓட்டுப் போடாததற்குப் பழிவாங்கும்
நடவடிக்கையா? என்றும் தெரியவில்லை. ஆனால் ராஹுல் வாயநாடு எம்.பி. என்பதால் முஸ்லீம்களை
இப்போதைக்கு நம்பித்தான் ஆகவேண்டும்.
இந்தக் கலவரத்தில்
இந்துக்களும் தற்காப்புக்காக அவர்களும் முஸ்லீம்களை குறிவைத்துத் தாக்கி உள்ளார்கள்.
அவர்களது குடியிருப்புகளும், கடைகளூம் சூறையாடப்பட்டன. ஆனால் இரண்டையும் ஒப்பிட்டுப்
பார்க்கும் போது, முஸ்லீம்களின் கோரமுகம் மிகவும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
போலீஸ் தன்
கடமையை சூழ்நிலைக்கு ஏற்ப செய்துள்ளது. துப்பாக்கியால் சுடக்கூடாது, லத்தியை அதிகம்
பயன்படுத்தக் கூடாது, எந்த உயிருக்கும் ஆபத்து கூடாது என்று போலீஸ் அதிகாரிகள் வாய்வழி
உத்திரவு இருந்ததால், கலவரத்தை அடக்குவது என்பது மிகவும் சிரமம். பிப்ரவரி 24- அன்று
தான் கலவரம் – கொலைகள் அதிகம் நடந்தேறி உள்ளது. டிரம்ப் பிப்ரவரி 25 இரவு இந்தியாவை
விட்டுப் போனதும், 36 மணி நேரத்தில் கலவரம் அடக்கப்பட்டதையும் நாம் கவனிக்க வேண்டும்.
அதற்கு போலீசைப் பாராட்டியே ஆகவேண்டும். மீண்டும் இது மாதிரி கலவரங்கள் நடக்காமல் இருக்க
தீவிரமான விசாரணை – தண்டனை அளிக்கும் நடவடிக்கைகளில் போலீஸ் – மத்திய உள்துறை அமைச்சகம்
எந்தவிதமான பாரபட்சமின்றி விரைவில் நியாயம் வழங்க வேண்டும்.
கீழே உள்ள படங்கள் டெல்லி
கலவரத்தின் தீவிரத்தைப்படம் பிடித்துக் காட்டும்.
Comments