அத்திவரதர் வந்துவிட்டார் அனுப்பு: மணி முத்துஸ்வாமி & வி.எஸ். சீனிவாசன்





28-ம் தேதி ஜூன் இரவு 12 மணிக்கு பணிகள் துவங்கின! 12.10 மணிக்கு இரண்டாவது படி தொட்டவுடன் சேர் பகுதி தொடங்கியது, அவற்றை அகற்றி கொண்டே இருந்தோம்!

மணி 2 - 6வது படி தாண்டியது, வரதரின் பொற்பாதம் தெரிந்தது! அங்கு இருந்த 70 நபரும் வரதா, வரதா என கோஷம் எழுப்பினோம்!

2.45 மணிக்கு அழகாய் தெரிந்தது வரதரின் முகம்! பார்த்ததும் அனைவரும் புல்லரித்தது

3.15 மணிக்கு வரதர் வெளியே எடுக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி அளித்தார் 

கோயில் முழுவதும் CCTV கேமரா உள்ளதால், வரதர் துணி சுத்தப்பட்டு வசந்த மண்டபம் எடுத்து செல்லப்பட்டார் 

அங்கே 4 மணிக்கு திருமஞ்சணம் செய்ய பட்ட பிறவு அனைவரும் வெளியே வந்துவிட்டோம் 

என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு இது என்று கோயில் பட்டர் ஒருவர் நமக்கு கூறியது. . . 

மூன்று நாட்கள் வரதரை புதுப்பித்தல் பணிகள் நடைபெறும்

வரும் திங்கள்(01.07.2019) காலை 6 மணி முதல் அனைவரும் வரதரை தரிசனம் செய்யலாம்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017