சந்திரயான் 2 – பாரத தேச இஸ்ரோவின் விண்ணுயரும் அபார சாதனை
ஜூலை 22 – திங்கட்கிழமை – மதியம் 2.43 – என்பது இந்தியாவின் விண்வெளி ஆய்வின் ஒரு முக்கியமான மைல் கல்லாகும். அன்று தான் சந்திரனை ஆய்வு செய்ய வெற்றிகரமாக ஜி.எஸ்.எல்.வி. மாக் 3 – எம்1 ராக்கெட் ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ‘சதீஸ்தவான்’ விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து சந்திரயான் – 2 என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
சந்திரயான் –
2 விண்கலத்தின் மொத்த எடை 3850 கிலோ. அது 23 நாட்கள் குறைந்த பட்சமாக 170 கி.மீ. தூரத்திலும்,
அதிக பட்சமாக 39,120 கி.மீ. தூரத்திலும் புவி வட்டப்பாதையில் சுற்றி வரும். பின் நிலவின்
சுற்று வட்டப்பாதைக்கு அந்த சந்திரயான் விண்கலம் மாறும். நிலவிலிருந்து 100 கி.மீ.
தொலைவில் சந்திரயான் – 2 விண்கலம் இருக்கும் போது, அதிலிருந்து ‘லேண்டர்’ கருவி தனியே
பிரிந்து, நிலவை நோக்கிச் செல்லும்.
அப்போது மணிக்கு
6,000 கி.மீ. வேகத்தில் செல்லும். தொடர்ந்து அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு,
48-வது நாளில், புவியிலிருந்து 3.84 லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ள நிலவின் தென் துருவ
பகுதியில் லேண்டர் செப்டம்பர் 7-ல் தரையிறங்கும்.
சந்திரயான் 2 என்ற
விண்கலத்தில் மூன்று ஆய்வு கருவிகள் உள்ளன.
அவைகள்: 1. ஆர்பிட்டர். 2.லேண்டர் 3. ரோவர்.
ஆர்பிட்டர் என்ற
கருவி நிலவின் சுற்றுப் பாதையில் ஆய்வு செய்யும். ஆயுட்காலம் ஓராண்டு – எடை –
2,379 கிலோ.
லேண்டர் என்ற கருவிக்கு
விக்ரம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஆர்பிட்டரிலிருந்து நிலவில் தரையிறங்கி
ஆய்வு செய்யும். ஆயுட்காலம் 14 நாட்கள் – எடை – 1,471 கி.லோ.
ரோவர் என்ற கருவிக்கு
பிரக்யான் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிலவில் லேண்டர் தரையிறங்கிய பிறகு அதற்குள்
இருக்கும் ரோவர் தனியாக கீழே இறங்கும். இது ஒரு சிறிய ரோபோ போன்றது. இது சூரிய ஒளி
மின்சாரத்தில் செயல்படும். இதில் ஆறு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுட் காலம்
14 நாட்கள். மொத்தமாக 500 மீட்டம் தூரம் பயணிக்கும். இதன் எடை 27 கி.லோ. ரோவர் தனது
ஆய்வு செய்த சிக்னல்களை லேண்டருக்கு அனுப்பும். அதன் பின் லேண்டர் பூமிக்கு முடிவுகளை
அனுப்பும். ஆகையால் செப்டம்பர் மாத இறுதியில் இந்தியா நிலவின் புதிய கண்டுபிடிப்பை
அறியும் வாய்ப்புள்ளது. இது இந்தியாவின் நிலவில் ஆய்யுக் கூடத்தை அமைக்கவும், மனிதர்களை
நிலவிற்கு அனுப்பவமும் பெரும் உதவிகரமாக இருக்கும்.
அமெரிக்கா, ரஷ்யா,
சீனாவுக்குப் பின் நிலவில் தரையிறங்கும் நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை அடைந்துள்ளது.
பாரதியின் கனவை
இஸ்ரோ நினைவாக்கி பாரத தேசத்தின் விண்வெளிச் சாதனையை உலகம் புகழ வைத்துள்ளது. அனைத்து
இஸ்ரோவினர்களுக்கும் வாய்மை தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது. இது அவர்களது சாதாரண
சாதனை இல்லை. இந்தியாவின் அனைத்து மக்களும் அவர்களுக்குக் கடன் பட்டிருக்கிறார்கள்.
பாரத தேசம் என்ற
கவிதையில் பாரதி தனது கனவுக் கவிதையில் இவ்வாறு கற்பனை செய்கிறார்:
மந்திரம் கற்போம்
வினைத்தந்திரம் கற்போம்;
வானை யளப்போம் கடல் மீனை யளப்போம்;
சந்திரமண்டலத்தியல்
கண்டு தெளிவோம்;
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.
பாரத தேசம் என்ற
கவிதையின் பல்லவியில்
‘பாரத தேசமென்று
பெயர்சொல்லு வார் – மிடிப்
பயங் கொல்லுவார்
துயர்ப் பகை வெல்லுவார்’ என்று முழங்குகிறார்.
ஆகையால் இந்தச்
சாதனை மூலம் பாரத தேசம் என்ற பெயரைக் கேட்டாலே நமது பகைவர்கள் பயந்து நடுங்குவார்கள்
என்று சொல்வது இப்போது நிதரிசனமாகி விட்டது.
சந்திரயான் 2 பற்றிய புகைப்படங்கள்
சில:








Comments