அமர்நாத் புனித பனி லிங்க தரிசன யாத்திரை
புனித அமர்நாத்
குகைக் கோயில் கிழக்கு காஷ்மீர் ஹிமாலய மலையில் 3,888 மீட்டர் உயரத்தில் ஸ்ரீநகரிலிருந்து
சுமார் 141 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
இயற்கையாக ஒவ்வொரு வருடமும் அந்தக் குகையில் பனிலிங்கம் உருவாகும். அதை ஒரு
குறிப்பிட்ட நாட்களில் தான் முன்பாகவே பதிவு
செய்து அனுமதி வாங்கியவர்கள் தான் பனிலிங்கத்தைத் தரிசனம் செய்ய முடியும்.
ஒவ்வொரு வருடமும்
தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கையும் நிச்சயம் செய்யப்படும். சென்ற வருடம் 2.85 லட்சம்
பக்தர்கள் அமர்நாத் குகைக் கோயில் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த வருடம் அந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
அமர்நாத் குகையை
அடைவதற்கு இரண்டு பாதைகள் உண்டு.
ஒன்று ஸ்ரீநகரில்
இருக்கும் பால்டால் என்ற ஊரிலிருந்து நடைபாதையாக 14 கி.மீ. தூரம் சென்று அமர்நாத் குகையை
அடையலாம். இது குறைந்த தூரம் உள்ள பாதை.
இரண்டாவது பாதை
பஹல்காம் என்ற ஊரிலிருந்து 45 கி.மீ. தூரப் பாதையாகும். இது அதிக தூரம் உள்ள பாதை.
இந்த இரண்டு இடங்களிலிருந்தும்
ஹெலிக்காப்டர் வசதிகளும் பக்தர்களுக்கு உண்டு.
ஹிந்து பக்தர்களின்
புனித யாத்திரைக்கு அங்கு வாழும் முஸ்லீம் மக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கிறார்கள்.
உண்மையில் இந்த அமர்நாத் பனிலிங்கம் 1850-வது வருடத்தில் புடா மாலிக் என்ற ஒரு முஸ்லீம்
இடையனால் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு வரலாறு உண்டு. இதற்குப் பரிசாக ஒரு சுஃபி ஞானி
அந்த இடையனுக்கு ஒரு பை நிறைய கரியைப் பரிசாக அளித்தாராம். என்ன ஆச்சரியம்? அந்த பையில்
உள்ள கரி அத்தனையும் பொன்னாக மாறியதாம்!
அந்த புடா மாலிக்கின்
சந்ததியினர் 150 வருடங்கள் தொடர்ந்து அமர்நாத் கோயிலின் வருவாயில் ஒரு பங்கைப் பெற்றதாக
வரலாறு கூறுகிறது.
இந்த வருடம் அமர்நாத்
யாத்திரை 46 நாட்கள் - 01-07-2019- தொடங்கி 15-08-2019 அன்று முடிவடைகிறது. ஜூலை
1-ம் தேதி மாசி சிவராத்திரி – ஆகஸ்ட் 15-ம் தேதி சிரவண பூர்ணிமா ஆகியவைகள் வருகின்றன.
யாத்திரைத் தேதிகளை
ஸ்ரீஅமர்நாத் கோயில் நிர்வாகம் தீர்மானிக்கிறது.
ஆகையால் தான் யாத்திரையை புனிதமான
நாளில் தொடங்கி, புனிதமான நாளில் பூர்த்தி செய்யும் வண்ணம் ஏற்பாடு செய்துள்ளனர்.
முஸ்லீம் தீவிரவாதிகளின்
தாக்குதல் பயத்தினால் அமர்நாத் யாத்திரைக்கு பலத்த ராணுவ வீரர்களின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யாத்திரை அமைதியாகவும், எந்தவிதமான இடர்பாடுகளும் ஏற்படாமலும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஹிந்துக்களுக்கு
அமர்நாத் பனிலிங்க குகைக்கோயில் தரிசனம் மிகவும் புனிதமாகவும், முக்கியமானதாகும் கருதப்படுகிறது.
இயற்கையாக ஒவ்வொரு வருடமும் தோன்றும் பனிலிங்க தரிசனம் புண்ணியம் அளிக்கும் என்று கருதும்
ஹிந்துக்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தரமாவது தரிசிக்க விழைகிறார்கள்.
தற்போது அமர்நாத்
யாத்திரை நடந்து கொண்டிருகிறது.
வாய்மை வாசகர்களுக்கு
அந்த தெய்வீக அமர்நாத் பனிலிங்க தரிசனத்தை
மானசீகமாகக் காண பனிலிங்கத்தை இங்கு பிரசுரித்துள்ளோம்.
பனிலிங்கத்தின்
அருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.
புனித யாத்திரைப்
புகைப்படங்கள் சில இதோ உங்கள் பார்வைக்கு:
Comments