மோடியின் குரு பூர்ணிமாவில் குரு வந்தனம் – 16-07-2019
மோடியின்
குரு பூர்ணிமாவில் குரு வந்தனம் – 16-07-2019
த்துவைத மத உடுப்பி பேஜாவர் மட
பீடாபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஸ்வேசா தீர்த்த ஸ்வாமிகளை டெல்லியில் உள்ள தமது இல்லத்திற்கு
வரவழைத்து தமது குரு வந்தனத்தைச் செலுத்தி உள்ளார் பாதரப் பிரதமர் மோடி அவர்கள்.
அப்போது இரண்டு போட்டோப் படங்களை
வெளியிட்டு, தமது டிவிட்டரில் இப்படி பதிவு செய்துள்ளார்:
“குரு பூர்ணிமா என்பது ஒரு சிறப்பு
தினம். அந்த சிறப்பு தினம் எனக்கு மேலும் சிறப்பாக அமைந்து விட்டது. இந்தப் புனிதமான
குருபூர்ணிமா நாளில், ஸ்ரீ விஸ்வேஸ்வ தீர்த்த ஸ்வாமிகளுடன் நேரம் செலவிட்டதை என் பாக்கியமாகக்
கருதுகிறேன். அவரின் அமுத மொழிகளையும், கருத்துக்களையும் கேட்டு அறிந்தது ஒரு மிகவும்
பவ்வியமான அனுபவங்கள்’
வியாச பூர்ணிமா – புத்த பூர்ணிமா
என்ற இந்த புனிதமான நாளில் மோடி அவர்கள் பாரத தேசத்தின் அனைத்து மக்களுக்கும் மேலும்
மேலும் பல நன்மைகள் செய்து பரிபூர்ணமான அமைதியையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்த ஆண்டவன்
அவருக்கு அனைத்து ஆசிகளையும் அருள வேண்டுவோமாக.
Comments