Posts

Showing posts from March, 2019

அபிநந்தன் இன்று அளித்த தன்னிலை விளக்கம்.

Image
பத்திரிக்கையாளர்களை சந்திக்க எனக்கு அனுமதி கிடையாது . அறிக்கை சமர்ப்பிக்க அனுமதி வாங்கியிருக்கிறேன் . பாகிஸ்தான் எல்லைக்குள் நான் இருக்கிறேன் என்பது தெரிந்த உடனே உயிரைக்குடுத்தேனும் தாய்நாட்டை காப்பேன் என்று பயிற்சி பெறும் போது நான் குடுத்த வாக்குறுதி தான் நினைவுக்கு வந்தது . மின்னல் வேகத்தில் செயல்பட்டு என்னிடமிருந்த ஒரு சில ஆவணங்களை ஓடைத்தண்ணீருக்குள் கிழித்து எரிந்தேன் . முக்கியமான பேப்பரை என் வாய்க்குள் போட்டு மென்று முழுங்கினேன் . தற்கொலை செய்துகொள்ள கூட நேரமிருந்தது . ஆனால் அது என்நாட்டுக்கு அவமானத்தை தரும் . சித்திரவதைகளை அனுபவித்தே உயிரிழப்போம் என்ற முடிவுக்கு வந்தேன் . அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து நான் உங்களிடம் சிறைபட்டேன் என்ற விஷயத்தை மட்டும் எனது நாட்டிடம் கூறி விடுங்கள் என்பதை மட்டும் கூறினேன் . நான் பாக்கில் சிறைபட்டிருப்பது தெரிந்தால் ராணுவம் அதிரடியாக மீட்கும் என்ற நம்பிக்கை இருந்தது . ஆனால் வழக்கமான சித்ரவதைக்கு பதிலாக எனக்கு ராஜமரியாதை கிடைத்தது . ...

ராஹுல் ஆங்கிலமும் – தங்கபாலுவின் தமிழ் மொழி பெயர்ப்பும்

Image
ராஹுல் ஆங்கிலமும் – தங்கபாலுவின் தமிழ் மொழி பெயர்ப்பும் பல வருடங்களுக்கு முன்பு சென்னை மெரீனா கடற்கரையில் ராஹுலின் தாத்தா நேரு ஆங்கிலத்தில் பேசியதை, செங்கல்வராயன் என்ற காங்கிரஸ் தலைவர் மொழி பெயர்த்தார். அதில் நேரு பேசியதை மொழிபெயர்க்காமல் தன் இஷ்டத்திற்கு தமிழில் மொழி பெயர்த்தார். அதை ஹிந்து பத்திரிக்கை மிகவும் கடுமையாக விமரிசனம் செய்தது. நேருவை மொழிபெயர்ப்பால் கொன்று விட்டார் என்ற அளவில் கடுமை இருந்ததாக ஞாபகம். நாட்டின் பிரதம மந்திரிக்குச் செய்யும் அவமரியாதை என்ற பாணியில் ஹிந்து விமரிசித்தது. நானும் அந்தக் கூட்டத்திற்குச் சென்று, இந்த மொழி பெயர்ப்புக் கூத்தைப் பார்த்து வெட்கித் தலை குனிந்தேன். இப்போது தங்கபாலு ஒரு படி மேலே சென்று தன் மனதிற்குத் தோன்றியதை எல்லாம் மொழி பெயர்ப்பு – விழி பெயர்ப்பு என்று அவர் ராஹுலை அப்படி முறைத்துப் பார்ப்பதை வைத்து ஊடக வாசிகள் பட்டம் கொடுத்துள்ளனர் – என்ற வகையில் கேலிக்கூத்தாக ஆக்கி விட்டார்.  ஆனால், தங்கபாலுவோ ‘வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்க வேண்டாம். என் மொழிபெயர்ப்பை தமிழ் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டி உள்ளார். மக...

மோடி அரசில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற சாமானியர்கள்

Image
மோடி அரசில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற சாமானியர்கள் மோடி அரசியலில் மட்டுமே இது சாத்தியம் – ஏழையாக இருந்தாலும், திறமையைக் கண்டறிந்து பத்ம ஸ்ரீ விருது வழங்குவது இது தான் முதல் தடவை. வாழ்க பாரதம். மதிப்புக்குரிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: பத்மா விருது வழங்கும் விழாக்களில் ஜனாதிபதியின் கடமை இந்தியாவின் மிகச் சிறந்தவர்களுக்கும், தகுதி உள்ளவர்களுக்கு அளிப்பது தான் வழக்கம். ஆனால் சலுமாரதா திம்மக்கா என்ற 107 சுற்றுச் சூழல் பாதுகாவலராக சேவை புரியும் கர்நாடகாவைச் சேர்ந்த மாது என்னை ஆசீர்வதித்தது என் பாக்கியமாகும். அவருக்கு என்னை ஆசீர்வதிக்க எண்ணி செயல்பட்டது என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்.

ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள்

Image
இந்தியாவின் கோரிக்கையான ‘மசூத் ஆசாத்தை தீவிரவாதியாக பிரகடணப்படுத்தும் பிரஞ்சு கோரிக்கையை சீனா நிராகரித்தது’ என்பது மோடி அரசிற்கு அயல்நாட்டுக் கொள்கைக்குக் கிடைத்த தோல்வி என்று ராஹுல் கேலிசெய்கிறார். மேலும், இதற்கு, ‘முந்தைய வாஜ்பாய் அரசு இதே தீவிர வாதியை காந்தகார் விமானக் கடத்தலின் பயணிகளையும், சிப்பந்திகளையும் விடுவிக்க விடுதலை செய்தது தான் காரணம்’ என்றும் ராஹுல் குற்றச் சாட்டுகிறார். ‘இது உங்களுடைய தாத்தா நேரு இந்தியாவை ஐ.நா. சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினராக யு.எஸ். முன் வந்த போது, அதை சீனாவுக்கு தாரை வார்த்ததின் விளைவு’ என்று பி.ஜே.பி. பதிலுக்குக் குற்றம் சாட்டியது. இதை காங்கிரசின் சசி தரூர் தனது ‘நேரு – இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு’ என்ற தனது புத்தகத்தில் ‘இது நேருவின் நேர்மைக்கு ஒரு எடுத்துக் காட்டு’ என்ற அளவில் புகழ்ந்துள்ளார். நேரு சமாதானத்தை விரும்பும் மனம் படைத்தவர். சீனாவை நம்பி, ‘சீனா இந்தியா பாய் பாய்’ என்றெல்லாம் கோஷித்தாலும், சீனா இந்தியாவின் மீது படை எடுத்து, நேருவின் சமாதானப் புறாவை ஒரே அடியாகக் கொன்று விட்டது. அவரது கொள்க...

சரத் பவாரின் நிஜ முகம்

Image
சரத் பவாரின் நிஜ முகம் சரத் பவார் மோடியைக் குற்றம் சொல்வதில் நிபுணர். முதலில் பாலகோட் சர்ஜிகல் ஸ்ரைக்கைக் குறை சொன்னார். ஆனால் இப்போது திடீரென்று, மோடிக்கு ‘புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் நடந்த பிறகு, நான் தான் பாலகோட்டில் சர்ஜிகல் ஸ்ரைக் நடத்தச் சொன்னேன்’ என்று ஒரே போடாகப் போட்டார். தேர்தலுக்காக – தன் குடும்பத்தினர் அதிலும் குறிப்பாக தமது அருமை மகள் மக்களவைத் தேர்தலில் ஜெயிப்பதற்காக அபாண்டமான பொய் சொல்கிறார் என்று சொன்னால் சிலர் இதை நம்ப மறுக்கலாம். ஆனால் சரத்பவார் பொய் சொல்வதில் நிபுணர் என்பதை அவரது முந்தைய செயல்பாடுகளின் மூலம் மிகவும் சுலபமாக நிரூபிக்க முடியும். மக்கள் பழையதை மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறார். அந்த அவரது கணக்கு தப்பாகிவிடும் என்பது திண்ணம். பவார் காங்கிரஸ்காரராக இருந்தும் சோனியா பிரதமந்திரி ஆகக் கூடாது என்பதற்காகவே தேசிய முன்னேற்றக் கட்சி என்ற பெயரில் ஆரம்பித்தார். ஆனால், இதே பவார் சோனியாவைப் பிறகு ஏற்றுக் கொண்டு துதிபாடினார். அது ஒரு புறம் இருக்கட்டும். 12-03-1993 அன்று பம்பாயில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் 12 இடங்களில் பாகிஸ்தான் முஸ...

மோடியும் – ராஹுலும் – ஒரு கற்பனைக் கதை

Image
மோடியும் – ராஹுலும் – ஒரு கற்பனைக் கதை மோடி ஒரு ஹோட்டலுக்குள் நிழைந்தார். அங்கு ராஹுல் இருப்பதைப் பார்த்து அவர் பக்கத்தில் அமர்ந்தார். அப்போது அங்கு டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. அந்த டி.வி.யில் ஒருவன் வீட்டு மாடியிலிருந்து கீழே குதிப்பதைப் பற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ராஹுல் மோடியிடம் கேட்டார்: ‘அந்த நபர் கீழே குதிப்பார் என்று கருதிகிறீர்களா? மோடி: பந்தயம் கட்டுகிறேன். அவன் நிச்சயமாகக் குதிப்பான். ராஹுல்: அதற்கு நான் சம்மதம். அவன் நிச்சயமாகக் குதிக்க மாட்டான். இருவரும் பந்தயப் பணத்தை மேஜையில் வைத்தனர். ஆனால், அந்த நபர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான்.  இதைப் பார்த்து, ராஹுல் மிகவும் வருந்திய படி, பந்தியப் பணத்தை மோடியிடம் கொடுத்தார். மோடி: இந்தப் பந்தியப் பணத்தை நான் ஏற்றுக் கொள்வது சரி இல்லை. ஏனென்றால், இந்தச் செய்தி முன்பே ஒளிபரப்பப்படும் போது கீழே குதிப்பதைப் பார்த்து விட்டேன். ராஹுல்: ஏன், நானும் தான் முன்பே பார்த்து விட்டேன். ஆனால், அந்த நபர் மீண்டும் கீழே குதித்துத் தற்கொலை செய்வார் என்று நான் நி...

ராஹுலின் குற்றச் சாட்டுகளுக்கு அனில் அம்பானியின் ஆணித்தரமான பதிலடியும்

Image
ராஹுலின் குற்றச் சாட்டுகளுக்கு அனில் அம்பானியின் ஆணித்தரமான பதிலடியும்   அனில் அம்பானி இப்போது நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளார். அதைச் சமாளித்து வெளிவரவே மிகவும் தவிக்கிறார். ஏனென்றால், மோடி அரசு எந்தவிதமான சலுகைகளையும் தனிப்பட்ட எந்த நிறுவனங்களுக்கும் அளிப்பதில்லை. எல்லாம் சட்டம், விதி முறைகள், வெளிப்படைத் தன்மை ஆகியவைகளின் அடிப்படையில் தான் செயல்படவேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த இக்கெட்டான நிலையில் ராஹுல் அனில் அம்பானியை ஒவ்வொரு கூட்டத்திலும் ‘மோடி 30000 கோடி உதவி செய்துள்ளார்’ என்று பொய்யாக எந்தவிதமான ஆதரமும் இல்லாமல் சொல்லி வருகிறார். இதற்கு உங்களிடம் ஆதாரம் உள்ளதா? என்று கேட்டால், ‘இல்லை. ஆனால், இது உண்மை’ என்று தன் சொற்களை மக்கள் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இந்த நிலையில் இப்போது அனில் அம்பானி ராஹுலின் குற்றச் சாட்டு அப்பட்டமான பொய் என்று விளக்கி உள்ளார். சார்ந்த ஒரு மனிதன் என்னை ஒவ்வொரு கூட்டத்திலும் குறைகூறுகிறார். நான் சில கேள்விகளை அவரிடம் கேட்கப் போகிறேன். இவைகளை மீடியாக்கள் அவரிடம் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.    1.  ...