புல்வாமாவில் தற்கொலைப் படை தீவிரவாதியின் தாக்குதல்


புல்வாமாவில் தற்கொலைப் படை தீவிரவாதியின் தாக்குதல்




14/2 தினம் பாரத தேசத்தின் ஒரு கருப்பு தினமாகப் போய் விட்டது. பாரத தேசத்தினரை பெரும் துக்கத்தில் ஆழ்த்தி விட்டது. 40 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கும் அதிகமாக அகால மரணம் அடைந்த தினமாகி விட்டது.









14/2 – வியாழக் கிழமை மதியம் 3 மணி அளவில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது, தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் 350 கிலோ வெடி மருந்து நிரப்பிய காரை மோதி தாக்குதல் நடத்தினான். இதில் வீரர்கள் 40 பேர்களுக்கும் மேல் பலியாயினர். 

அந்த வீரர்கள் காஷ்மீர், மேற்கு வங்காளம், பீஹார், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, கேரளா, தமிழ் நாடு, கர்நாடகா, மஹராஷ்ரா, உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட் என்று பாரத தேசத்தின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பணி ஆற்றுபவர்களாக இருப்பதால், அனைத்து மக்களும் துக்கம் சாகரத்தில் மூழ்கும் நிலை உண்டாகி விட்டது. இதை பாரத மக்கள் ஒரு நாளும் இதை நிகழ்த்திய தீவிர வாத இயக்கத்தையும், அதைத் தங்கள் மண்ணில் ஆதரிக்கும் நாட்டையும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். அதற்கு அவர்கள் தகுந்த விலையைக் கொடுக்கும் காலம் நெருங்கி விட்டது.
















இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ் தான் ஆதரவு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப் பேற்றுள்ளது.






ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி அதில் அகமது தார்



இதை முன்னின்று நடத்திய தீவிரவாதி அகமது தார் என்ற 20 வயதுள்ளவன். இந்த தாக்குதல் நடந்த உடனேயே ஜெய்ஷ் – இ – முகமது என்ற பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

அதில் அகமது தார் என்ற தீவிரவாதி, தான் தீவிரவாத இயக்கத்தில் சென்ற வருடத்தில் சேர்ந்ததாகவும், இந்திய மக்களை ‘கோ மூத்திரம் குடிக்கும் இனம்’ என்று கேலி செய்தும், காஷ்மீர முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியாவை எதிர்த்துப் போரிட வேண்டும் என்றும், ‘எங்களின் சில போராளிகளைக் கொல்வதின் மூலம் எங்களை வலுவிழக்கச் செய்ய முடியும் என்ற எண்ணத்தைத் தவிடு பொடியாக்கத்தான், இந்திய வீரர்களைக் கொலை செய்யப்போகிறேன்’ என்று சொல்லி, இறுதியாக ‘இந்த வீடியோவை நீங்கள் பார்க்கும் போது, நான் சொர்க்க லோகம் சென்றிருப்பேன்’ என்று முடித்துள்ளான்.

இந்தத் தீவிரவாதி பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே முடித்து விட்டவன், பிறகு வீடு கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்ததுடன், உள்ளூர் மசூதியிலும் தொழுகையின் போது பிரார்த்தனையும் முன்னின்று நடத்துவான் என்று தெரியவருகிறது.

இவனுக்கு உதவிய மூன்று தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொண்டு விட்டதாகத் தகவல் வந்துள்ளது. ஆனால், இந்த தாக்குதலில் நமது படைவீரர்கள் 4 பேர்கள் வீர மரணம் அடைந்து விட்டார்கள் என்பது ஒரு துக்கச் செய்தியாகும்.

இந்தியா அதிரடி நடவடிக்கையாக 1996-லிருந்து பாகிஸ்தானுக்கு அளித்து வந்த மிக விரும்பத்தக்க நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்ததுடன், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரியை 200% உயர்த்தி உள்ளது. அனைத்து அரசியல் கூட்டத்தில் இந்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மோடி இந்தத் தாக்குதலை மிகவும் தீவிரவாக கண்டித்ததுடன், அதற்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.

‘காஷ்மீர் புல்வாமா பகுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மிகப்பெரிய விலையைக் கொடுப்பார்கள். அவர்கள் கடும் பின் விளைவுகளைச் சந்திப்பார்கள். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத தாக்குதலால் இந்தியாவை வலுவிழக்கச் செய்ய முடியாது. புல்வாமா தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். தீவிரவாதிகள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். அவர்கள் கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

தீவிரவாதிகளுக்கு எதிராக எப்போது, எங்கு, எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது போன்ற விஷயங்களில் முடிவெடுக்க நமது பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரமும் அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலால் நாட்டு மக்களின் ரத்தம் கொதித்துப் போயுள்ளது. உங்களைப் போலவே என் இதயத்தின் ரத்தமும் கொதித்துப் போயுள்ளது. இனி பேச்சு வார்த்தை என்பதே கிடையாது. நடவடிக்கை ஒன்று தான் இதற்கு ஒரே வழி. எனவே, இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

நமது அண்டை நாடு (பாகிஸ் தான்) சர்வதேச அளவில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. அதனால், தீவிரவாத தாக்குதல் மூலம் நம்மை தொந்தரவு செய்ய நினைக்கிறது. ஆனால், அவர்களது திட்டம் நிறைவேறாது. புல்வாமா தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இந்த துயரமான நிலையில், புல்வாமா தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். மத்திய அரசை விமர்சிப்பவர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், இந்தத் தாக்குதலால் நாடு கொந்தளிப்பில் உள்ளது. இந்த நேரத்தில் அரசியல் கட்சியினர் ஒருமித்த கருத்துடன் இருக்க வேண்டுகிறேன்.

வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. ஒவ்வொரு கண்ணீர் துளியும் வீணாகாது. அதற்கு பதில் கிடைப்பதை உறுதி செய்வோம்.

நாடு கண்ணீரில் இருக்கும் போது, நம் அடுத்த கட்ட நடவடிக்கைகள், உணர்வுபூர்வமானதாகவும், கட்டுப்பாடு உள்ளதாகவும் இருக்க வேண்டும். புதிய இந்தியாவில், நம் நடவடிக்கைகளும், கொள்கைகளும் வித்தியாசமானதாக இருக்கும்.

உலக நாடுகளுக்கு இது, புதிய அனுபவமாக அமையும். நம் வீரர்களை கொல்வதற்கு, துப்பாக்கிகள், குண்டுகளை அளித்தவர்கள், இனி அமைதியாக உறங்க முடியாது’ என்று மோடி முழங்கி உள்ளார்.



பழிதீர்ப்போம்: சிஆர்பிஎப் படை உறுதி

ஜம்மு-காஷ்மீரில் தங்கள் படை வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு கட்டாயம் பழிதீர்ப்போம் என மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) தெரிவித்திருக்கிறது.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக சிஆர்பிஎப் துணை ராணுவப் படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்த எங்கள் சகோதரர்களுக்கு தலைவணங்குகிறோம். இந்த கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். இதற்கு விரைவில் பழிதீர்க்கப்படும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத தேசம் கொதித்து எழுந்துள்ளது. அந்த ஜ்வாலையின் அதீத உஷ்ணம் தீவிர வாதத்திற்கு உலக அரங்கிலேயே ஒரு முடிவு கட்டும் காலம் நெருங்கி விட்டதையே இது குறிக்கிறது.

அதற்கு மோடி தலைமை தாங்கி வெற்றி காண்பார் என்பது நிச்சயம்.
வீரமரணம் அடைந்த நமது வீரர்களுக்கு வாய்மை கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் வேண்டி வாய்மை ஆண்டவனைப் பிரார்த்திக்கிறது.

வாய்மை உங்கள் அனைவரின் சார்பில் ரூபாய் ஆயிரம் நன் கொடையாக சிஆர்பிஎஃ நிதிக்கு அளித்துள்ளது.

அந்த வீரர்களின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்திப்பதுடன், துக்க சாகரத்தில் மூழ்கி உள்ள அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இறங்கலையும் தெரிவிக்கிறோம்.

தீவிர வாதம் உலக அரங்கில் பூண்டோடு அழிய இறைவனை வேண்டுகிறோம்.



பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பு 20 வயது காஷ்மீர் இளஞரை மூளைச் சலவை செய்து தற்கொலைப் படைக்கு பயிற்று வித்து, அதன் காரணமாக புல்வாமாவில் இந்தியாவின் 40 வீரர்களைப் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல் அனைத்தும் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டு, அஞ்சலி செய்ய அனைவரும் கூடினர். 

மோடி அஞ்சலி செய்யும் போது, ராஹுல்  தனது செல் போனில் மூழ்க்கி இருந்துள்ளான். ஏதோ ஒலி கேட்டு, பக்கத்தில் அஞ்சலி செய்ய நின்று கொண்டிருந்த ராஜ்நாத் சிங் திருப்பிப் பார்த்து, அது ராஹுல் என்பதால், தமது முகத்தைத் மீண்டும் திருப்பிக் கொண்டார்.

ராஹுல்! ஏன் இந்தச் செயல்? இதை இந்திய மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்பதை நீங்கள் எப்போது தான் உணரப்போகிறீர்கள்?

தேசிய உணர்வு உங்களுக்கு மிகவும் குறைவு என்று குற்றம் சாட்டினால், பொங்கி எழும் ‘சிக்குலர்’ கூட்டம் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017