16-வது லோக் சபாவில் 14-வது பிரதமந்திரி மோடியின் உருக்கமான உரை


16-வது லோக் சபாவின் கடைசி நாளான 13-02-2019 

அன்று  14-வது பிரதமந்திரி மோடியின் உருக்கமான உரை




(மோடி லோக்சபா உரையின் வீடியோ இணைப்பு: https://youtu.be/vqycqo7fLy0
அதன் ஆங்கில உரை வடிவ இணைப்பு:




2014-ம் ஆண்டு லோக் சபாவில் முதன் முதலில் நுழையும் போது நானும் மற்ற சிலரைப்போல் இந்த சபாவிற்குப் புதியவன் என்பதை உணர்ந்தேன். ஆகையால் நான் சுற்றி உள்ளவைகளை மிகவும் ஆர்வமுடன் பார்த்தேன். 

என் முன்னே உள்ள பட்டன்களைப் பற்றி அறிந்தேன். அப்படி நான் பார்க்கும் போது, என் முன்னே உள்ள மேஜையில் உள்ள ஒரு விவர உலோகப் பட்டையைப் பார்த்தேன். எனக்கு முன் 13 பிரதம மந்திரிகள் பதவியில் இருந்திருக்கிறார்கள் என்பது தெரியும். இதே இடத்திலிருந்து அவர்கள் பணியாற்றி உள்ளார்கள் என்பதும் தெரிந்தது தான். ஆனால் அந்த உலோகப் பட்டையில் மூன்று பிரதம மந்திரிகளின் பெயர்கள் மட்டும் தான் பொறிக்கப்பட்டிருந்தது. 

ஏன் இந்த பாகுபாடு, இதற்கான காரணம் என்ன? என்பதைப் பற்றி இடது சாரி அறிவு ஜீவிகள் நிச்சயமாக சிந்தித்து, நமக்கு வழியும் காட்ட வேண்டும். ஏனென்றால், அந்த அறிவு ஜீவிகள் தான் தினம்


























தினம் ‘நேர்மை, நியாயம்’ என்று பிரசாரம் செய்த வண்ணம் இருக்கிறார்கள்.





(குறிப்பு: 1. நேரு – 1947 – 64. 2. நந்தா – 1964 – முதல் முறை. 3. லால் பஹதூர் சாஸ்திரி – 1964 -66 4. நந்தா – 1966 – இரண்டாவது முறை 4. இந்திரா – 1966 – 77 – முதல் முறை 5. மொரார்ஜி தேசாய் – 1977 – 79 6. சரண் சிங் – 1979 – 80  7. இந்திரா காந்தி – 1980 – 84 – இரண்டாவது முறை. மற்றும் பலர்.


இதிலிருந்து தெரிவது என்ன வென்றால், நந்தா, மொரார்ஜி, சரண் சிங் ஆகியவர்களின் பெயர்களுடன் மேலும் பலரது பெயர்களும் விடுபட்டுள்ளன. இது அப்பட்டமான காங்கிரசின் நேரு பரம்பரை மன நிலையையே படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது. அதை ‘சிக்குலரிஸ்ட்’ மேதாவிகளோ, லிபரல் அறிவு ஜீவிகளோ கவனிக்காமல் – கவனித்தும் மூடி மறைத்தும் – இருப்பது ஜனநாயக மரபுக்கு ஏற்றதா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். இதை வெட்ட வெளிச்சமாக்கிய மோடியை வாய்மை மனமுவந்து பாராட்டுகிறது. ஆசிரியர்.)  

இன்று அனைவரும் இந்த சபையிலிருந்து விடைபெற இருக்கிறோம். இது வரை 17 முறை இந்த சபை கூடி உள்ளது. அதில் 8 சபைக் கூட்டங்களில் 100% என்ற அளவில் பணியாற்றி உள்ளது என்பது பெருமைப் படவைக்கும். மொத்தத்தில் சராசரியாக 85% அளவில் நாம் இந்த சபையில் பணி ஆற்றி உள்ளோம். இதற்குக் காரணம் முதல் முதலாக லோக் சபாவில் மூன்று பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் ஒரு முழுமையான மெஜாரிடி அரசாங்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதன் முதலாக காங்கிரஸ் கோத்திரம் இல்லா அரசு அடல் பிஹாரி வாஜ்பாயின் தலைமையில் ஏற்பட்டு, இப்போது முழு மெஜாரிடியில் பி.ஜே.பி. கட்சி 2014-வது வருடம் அரசு அமைத்து, சரித்திரம் படைத்துள்ளது.


இந்த சபையின் இன்னொறு முக்கிய அம்சம், பெண்கள் 44 பேர்கள் அங்கம் வகிக்கின்றனர். இது தான் இந்தச் சபைக்கு முதன் முதலில் ஏற்பட்ட பெருமையாகும். அது மட்டும் அல்ல. முதன் முதலாக இந்தியாவில் பெண்கள் அதிக அளவில் மந்திரிகளாகவும் பதவி வகிக்கிறார்கள். அதிலும் மிக முக்கியமான காபினெட் அந்தஸ்து பெற்ற அயல்நாட்டு மந்திரியாகவும், ராணுவ மந்திரியாகவும் பெண்கள் பதவி வகிக்கிறார்கள். அத்துடன் சபையின் தலைவரும் ஒரு பெண்னே ஆவார். அவருக்கு உதவும் ரிஜிஸ்டர் ஜெனரலும் பெண் அதிகாரியாவார். செக்கரட்டிரி ஜெனரலும் பெண் தான்.

இந்தியா உலக அரங்கில் பொருளாதார வளர்ச்சியில் 6-வது இடத்தில் உள்ளது என்பது அனைவரும் பெருமைப் பட வைக்கும் செய்தியாகும். மேலும் இந்தியாவை ஒரு ட்ரிலியன் டாலர் பொருளாதார அமைப்பாக கொண்டு செல்லும் கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டு, அந்த இலக்கின் கதவினைத் தட்டும் நிலையை வெகு சீக்கிரத்தில் அடைய இருக்கிறோம். அதற்கு, இந்த சபை தன் நடவடிக்கைகள் மூலம் வருங்காலத்தில் ஒரு பெரிய கடமை ஆற்ற உள்ளது.

பல துறைகளில் நாடு முன்னேறி உள்ளது. மின்சாரத் துறை, சுற்றுச் சூழல் பாதிக்காத பசுமை சக்தி வளம், உலகம் வெப்பமாவதைத் தடுத்தல் ஆகியவைகளில் இந்தியா உலக அரங்கில் முக்கிய அங்கம் வகிக்கிறது. 
சாட்டலைட்களை விண்ணில் செலுத்துவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அந்தத் துறையில் பொருளாதார ரீதியிலும் இந்தியா வெற்றி கண்டுள்ளது. மேக்-இன்- இந்தியா மூலம் இந்தியா ஒர் தன்னிறைவு காணும் நிலையும் ஏற்பட உள்ளது.

இந்தியா உலக அரங்கில் மதிக்கப்படுவதற்கு, மோடியோ அல்லது சுஷ்மாவோ காரணம் அல்ல. அதற்கு அரசு முழு பலத்துடன் பெரும்பான்மை அரசாக இருப்பது தான் காரணம். உலகம் இப்படிப்பட்ட அரிதிப் பெரும்பான்மை பெற்று அமையும் அரசைத் தான் நம்புகிறது. அதற்கு 100 மில்லியன் இந்திய மக்கள் 2014 அளித்த ஆதரவு தான் காரணம்.

இந்த லோக் சபையில் 219 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அதில் 203 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதைக் குறித்து இங்கு குழுமி இருக்கும் அனைத்து எம்.பி.க்களும் பெருமை கொள்ளலாம். அதில் மிகவும் தேவையான ஆனால் மிகவும் சிக்கலானவைகளும் அடங்கும் என்பதால் நீங்கள் பங்குகொண்டதை நினைத்து மகிழலாம். கருப்பு பணம் மீட்பு மசோதா, திவால் மற்றும் நொடித்துப் போன நிர்வாகப் பறிமுதல் பற்றிய மசோதா, சரக்கு மற்றும் சேவை மசோதா, பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட பொதுத் துறையினருக்கு 10% இட ஒதிக்கீடு, பினாமி சொத்து கிரிமினல் குற்ற மசோதா ஆகியவைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இந்த சமயத்தில் இந்த சபை பல நிகழ்வுகளையும் கண்டு ரசித்துள்ளது. ‘இந்த சபையில் ஒரு பெரிய நில நடுக்கமே ஏற்படும்’ என்று பயமுறுத்தப்பட்டோம். ஆனால் ஐந்தாண்டுகள் முடிவடைந்த இந்த நிலையில் ஒரு நில நடுக்கமும் உண்டாக வில்லை. 

சில சமயங்களில், சபையில் கண்ணிய மிக்க பெரியவர்கள் ஏரோப்பிளேன்களை பறக்க விட்டனர். ஆனால், நாட்டின் ஜனநாயகமும், லோக் சபாவும் அனைத்தையும் விட உயர்ந்தது. ஆகையால் அவர்கள் இங்கு விட்ட ஆகாய விமானம் அதிக தூரம் பறக்க முடியாமல் கீழே வீழ்ந்து விட்டது. அதே போல் தான் நில நடுக்க எச்சரிக்கை சவாலையும் இந்த சபை ஜீரணித்தது. 

நான் இந்த சபைக்குப் புதியவன் என்று முதலிலேயே சொன்னேன். எனக்கு ஒருவரை அன்போடு தழுவுவது தான் தெரியும். குரல் வளையை நெரிக்கும் அளவில் கோபக் கண்களோடு கள்ளத் தனமாகத் தழுவுவதை இந்தச் சபையில் தான் நான் காண முடிந்தது. 

கண்களில் கோபம் கொப்பளிக்க கள்ளத் தனமாகத் தழுவிய பிறகு, அந்தக் கண்களாலேயே கண்ணடித்த சம்பவமும் இந்தச் சபையில் நடந்தேறியது. இதுதான் இந்தச் சபையில் முதன் முதலாக நடந்தேறி உள்ளது. இதை உலகத்தில் உள்ள ஊடகங்கள் வெளியிட்டு, அதைப் பார்த்து மகிழ்ந்தனர். ஆனால், ஒவ்வொரு அங்கத்தினரும் சபையின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டியது அவசியம் என்பதை அறிந்து, அவைகளை இந்த சபையில் கடைப்பிடிக்க வேண்டியதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் சில தகாத வார்த்தைகள் இந்தச் சபையில் பிரயோகிக்கப்பட்டுள்ளன. எந்த அங்கத்தினர் என்பது முக்கிய மில்லை. அவர்கள் எனது வரிசையிலோ அல்லது எதிர் வரிசையிலோ உள்ளவர்களாக இருக்கலாம். இந்த சபையின் தலைவன் என்ற முறையில், ஒரு பாடம் இது அளிக்கிறது. 

இந்தச் செயல் ஒரு ‘ஜிஹாட்’ போன்ற நிலையாகும். அதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். இதை ‘ஜெய் ஹிந்த்’ என்ற நிலைக்கு உயர்த்த வேண்டும். அது தான் என் மிகப் பெரிய கோரிக்கை. இதன் மூலம் என் உள்ளக் கிடக்கை வெளிப்படுத்தி விட்டேன்.

மதிப்புக்குறிய மூத்த தலைவர் முலாம் சிங் யாதவின் ஆசிக்கு நான் மிகவும் நன்றி உள்ளவனாகிறேன்.








Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017