94-வது வயதில் கலைஞர் மறைவு – 07-08-2018
பிறப்பு: 03-06-1924
– திருக்குவளை, நாகப்பட்டினம்
இறப்பு:
07-08-2018 – சென்னை
72 படங்களில் பணியாற்றி
உள்ளார். – 1947-லிருந்து 2011 ஆண்டு வரை.
தயாரித்த படங்கள்
– 25
கலைஞர்
ஆனது எப்படி?
எம்.ஆர்.ராதாவுக்காக
கருணாநிதி எழுதி தந்த நாடகம் தான் தூக்கு மேடை. இது முற்றிலும் பகுத்தறிவு பிரசாரமாக
அமைந்தது. இந்த நாடகத்தில் பாண்டியன் வேடத்தில் கருணாநிதி நடித்தார். நாடக விளம்பரத்தில்
‘அறிஞர் கருணாநிதி’ என்று இருந்தது. ‘அறிஞர் பட்டம் அண்ணாவுக்கு மட்டுமே பொருந்தும்.
அதை எடுத்தால் தான் நடிப்பேன்’ என்று கருணாநிதி கறாராக கூறி விட்டார். உடனே எம்.ஆர்.ராதா,
கலைஞர் கருணாநிதி என்று விளம்பரம் செய்தார். மனோகரா படத்தில் முதல் முறையாக கலைஞர்
கருணாநிதி என்று பெயர் போடப்பட்டது.
தனது
கல்லறையில் என்ன வாசகம் எழுதப்பட வேண்டும் என்று கருணாநிதி ஏற்கனவே கூறியிருக்கிறார்.
அது:
ஓய்வெடுக்காமல்
உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக்
கொண்டிருக்கிறான்.
பிடித்த சினிமா
பாடல்:
வந்த நாள் முதல்
இந்த நாள் வரை மனிதன் மாறவில்லை.
பிடித்த புதுக்கவிதை:
கந்தையானாலும்
கசக்கி கட்டு: சரி
காயும் வரை எதைக்
கட்டுவது?
கொசுறுச் செய்தி
- வாய்மையின் கருத்து: பிடித்த வார்த்தைகள்: என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே!
மூன்று மனைவிகள்
– மகன் நான்கு பேர். மகள் இருவர்.
ஐந்து முறை முதல்வராகப்
பதவி வகித்தவர். 14 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். 1957 வருடத்திலிருந்து தேர்தலில்
போட்டி இட்டவர். ஒரு தேர்தலிலும் தோற்காத தலைவர். அவரது அரசு இரண்டு முறை கலைக்கப்பட்டுள்ளது.
1976-ம் ஆண்டு எமர்ஜென்சியின் போதும், 1991 ஆண்டின் போதும் அர்டிகிள் 356-யைப் பயன்படுத்தி
கலைஞர் ஆட்சியை காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆளும் போது கலைக்கப்பட்டது.
சுதந்திர தினத்தில்
மாநில முதல்வர் தான் கொடி ஏற்ற வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டு வந்தவர் இவர் – 15
ஆகஸ்ட் 1974-ல் கலைஞர் கொடி ஏற்றி இந்த விதியை அமலுக்குக் கொண்டு வந்தார். அதற்குக்
கலைஞர் சொன்ன காரணம்: ‘டெல்லி செங்கோட்டையில் சுதந்திரத்திர தினத்தின் போது பிரதமர்
கொடி ஏற்றும் போது, மாநில அரசின் தலைவரான முதல்வர் மாநில கவர்னருக்குப் பதில் ஏன் கொடி
ஏற்றக் கூடாது?’
மேலும், மனோன்மணியம் சுந்தரனாரின் பாட்டான ‘நீராடும் கடலுடுத்த’ என்பதை
மாநில அரசின் கீழ் நடக்கும் விழாக்களில் எல்லாம் பாடும் கீதமாக செயல்படுத்தினார்.
‘மாநிலத்தில் சுயாட்சி.
மத்தியில் கூட்டாட்சி’ என்ற கொள்கையின் அடிப்படையில் எழுந்த மாற்றங்கள் தான் இவைகள்.
தமிழ் மொழி ‘தொன்மை
மொழியாக’ மே 2004 அன்று கலைஞரின் முயற்சியால் ஜானாதிபதி அப்துல் கலாம் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
1970-ம் ஆண்டில் திருவள்ளுவருக்கு சென்னையில் வள்ளுவர் கோட்டம் என்ற மணி மண்டபம் கட்டப்பட்டது.
ஆனால் ஜனவரி 1976-ம் ஆண்டு கலஞர் ஆட்சி கலைக்கப்பட்டதால், வள்ளுவர் கோட்டம் திறக்கப்படவில்லை.
அதை ஜனவரி 1989-ம் ஆண்டு தேர்தலில் – 13 வருடங்களுக்குப் பிறகு – வெற்றி பெற்ற பிறகு,
அதே வள்ளுவர் கோட்டத்தில் பதவிப் பிரமாணம் எடுத்து, தமது எண்ணத்தைப் பூர்த்தி செய்தார்.
கன்னியா குமாரியில்
வள்ளுவருக்கு 133 அடி உயரச் சிலையை கடலின் உள்ளே இருக்கும் பாறையில் விவேகானந்தர் நினைவுக்
சின்னம் அருகில் நிறுவினார் கலைஞர். அத்துடன் பூம்புகாரில் சிலப்பதிகார கலைக் கூடம்
அமைத்தார்.
சிறந்த பேச்சாளர்,
வசனகர்த்தா, அரசியல் சாணக்கியர், சினிமா தயாரிப்பாளர், அரசியல் வாதி, தி.மு.க. கட்சியின்
முடிசூடிய மன்னரான தலைவர், 50 ஆண்டு உழைப்பு என்று கலைஞர் பாராட்டப்படுகிறார்.
எம்.ஜி.ஆர். அரசியலுக்கு
வந்த பிறகு, கலைஞரால் ஜொலிக்க முடியவில்லை. அவர் மறைவிற்குப் பிறகு, தாம் அசைக்க முடியாத
தலைவராக தமிழகத்தில் வலம் வரலாம் என்ற கனவும் ஜெயலலிதா மூலம் பெரிய தடங்கலாகவும், தேர்தல்
வெற்றியும் பல சமயங்களில் கணிக்க முடியாத அளவில் இருந்து, கலைஞரைக் கலங்க வைத்துள்ளது.
அத்துடன் தமது வாரிசுகளின் – அழகிரி, ஸ்டாலின், கனிமொழி – என்று மும்முனையிலிருந்தும்
வந்த பதவிப் போட்டிகளால், கலைஞரின் மனம் மிகவும் சஞ்சலமடைந்ததும் அவரை கடைசி நாட்களில்
பாதித்துள்ளது.
கலைஞர் இறந்த இந்த
நேரத்தில் அவரது கட்சி ஆட்சியில் இல்லை. கலைஞரின் உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்குப்
பின் பக்கத்தில் புதைக்க எடப்பாடி அரசு அனுமதிக்காமல், கிண்டி காந்தி மண்டபத்தில் இடம்
ஒதிக்கிய தகவல் கிடைத்தவுடன் கலைஞரின் குடும்பத்தினரும், உடன்பிறப்புகளும் பொங்கி எழுந்தனர்.
அரசாங்க பஸ்கள் உடைக்கப்பட்டன. தி.மு.க. இரவே உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு, தங்கள்
கட்சியினர் ஜெயலலிதா சமாதியில் கட்டிடம் எழுப்ப தடை கோறிய மனுக்களை உடனே வாபஸ் வாங்கி
வழி வகுத்த காரணத்தினால், கோர்ட்டும் மெரினாவில் கலைஞரின் பூத உடலைப் புதைக்க அனுமதி
வழங்கியது.
ராஜாஜி ஹாலில்
கலைஞரின் உடல் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக இருந்து, காவலர்கள்
தடி அடி நடத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இந்த கூட்ட நெறிசலில் மூன்று பேர்கள் இறந்து
விட்டார்கள். உடன் பிறப்புகளும் தங்கள் துக்கத்தைத் தெரிவிக்க அமைதி காக்க வில்லை.
பல தலைவர்களும் கூட்ட நெறிசலில் தவிக்க வேண்டிய நிலை தான் காணப்பட்டது.
‘கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடு’ என்பது திராவிடப் பண்பாடு என்று முழங்கும் உடன் பிறப்புகள் அவைகளை காற்றில்
பறக்க விட்டனர் என்பதை மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம்.
இது அண்ணா இறப்பிலிருந்து, எம்.ஜி.ஆர். இறப்பு, ஜெயலலிதா இறப்பு என்று கலைஞரின் இறப்பு
வரை தொடர் கதையாகி விட்டது. இது அந்த திராவிடக் கட்சிகளுக்கு எந்த விதத்திலும் பெருமை
சேர்க்காது.
கலைஞர் தமது
94 வருட வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார். அவரது பணிகள் தமிழ் நாட்டு வரலாற்றில்
நிச்சயம் இடம் பெற்று, அவருக்கு புகழ் சேர்க்கும்.
கலைஞரின் ஆத்மா
சாந்தி அடைய வாய்மை அவருக்கு மலர் வலையம் வைத்து நினைவு அஞ்சலி செலுத்துகிறது.
கலைஞரைப் பற்றிய சில நினைவுகள்:
பச்சையப்பன்
கல்லூரியிலே ஒரு இலக்கிய விழா.
தலைவர் கலைஞர் கருணாநிதி முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
அது தேர்தல் சமயம்.
திமுக
ஒரு அணியிலும், காங்கிரஸ் மற்றும் அதிமுக எதிரணியிலும்
இருந்தன.
அரசியல்
பேசக்கூடாது என்று தெளிவாக கூறி
விட்டனர்.
இலக்கிய
உரையை நிகழ்த்தி உரையின் இறுதிக்கு வந்த
தலைவர் கலைஞர் கருணாநிதி, உரையை
முடிக்கும் முன்பாக, “தேர்தல் வரவிருக்கிறது.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
உணவருந்தி
முடிந்ததும் அனைவரும்
இலையை தூர
போட்டு விட்டு
கையை கழுவி விடுங்கள்’என்றார்.
அரங்கமே
அதிர்ந்தது. அதுதான் தலைவர் கலைஞர் கருணாநிதி
(குறிப்பு: அ.இ.தி.மு.க.வின் சின்னம்: இரட்டை இலை; காங்கிரசின் சின்னம்: கை)
மனத்தை உறுத்தும் சிந்தனைகள்
– அனுப்பு: எஸ். ஷங்கர்
பத்து
வருட காலம், கலைஞரின் தயவில் ஆட்சி பொறுப்பில் இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,
நேரில் வந்து அஞ்சலி செலுத்த வில்லை. ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜீ நேரில் வந்து
நலம் கூட விசாரிக்க வில்லை. சோனியா காந்திக்கு உடல் நலமில்லை ஆகவே அவர் வரவில்லை என்பார்கள்.
ஆனால்
தனது வாழ்நாள் முழுவதும் கலைஞர் எதிர்த்த, ஆர் எஸ் எஸ் இயக்க வளர்ப்புகள் பிரதமர் மோடி
ஜி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, கவர்னர் பன்வாரிலால்
ப்ரோஹித் எவ்வளவு பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்கள் என்பது குறித்து , நடுநிலையாளர்கள்
மட்டுமல்ல, கலைஞரின் தொண்டர்களும் சிந்திக்க வேண்டுகிறேன்.
மேலும்
பண்டாரம் பரதேசிக்கட்சி என்ற விமர்சனங்களையும் பாஜக மன்னித்து மறந்து லோக்சபா அல்லது ராஜ்ய சபாவில் தற்போதைய உறுப்பினராக
இருப்பவர், அல்லது ஏற்கனவே உறுப்பினராக இருந்தவர் இறந்தால் மட்டுமே, சபையை ஒத்தி வைப்பது
வழக்கம். இதற்கு மாறாக, இந்த இரண்டு சபையிலும் இடம்பெற்றிராத, கருணாநிதியின் மறைவையொட்டி,
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
லோக்சபா
அல்லது ராஜ்யசபாவில், எம்.பி.,யாக பதவி வகித்திராத ஒருவரது மறைவுக்கு, பார்லிமென்ட்
ஒத்தி வைக்கப்படுவது, இதுவே முதல் முறை. லோக்சபா நேற்று காலை துவங்கியதும், கருணாநிதி
மறைவுக்காக, ஒரு நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது. அதன்பின்,
லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது. ராஜ்யசபாவில், கருணாநிதி மறைவுக்கான இரங்கல் குறிப்பை,
ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு வாசித்த பின், சபை ஒத்தி வைக்கப்பட்டது.அரசியல் நாகரீகம் என்றால் இதுதான்.
உண்மையை உறக்கச் சொல்வோம்
– அனுப்பு: எஸ். ஷங்கர்
இருவரும்
சொன்னதை செய்தனர் - செய்ததை சொன்னார்கள் !
பத்து
நாட்களுக்குள் இரு மரணங்கள் !
பிறந்தது
ஒரே ஆண்டின் முன்பாதி / பின்பாதி
!
இறந்தது
ஒரே ஆண்டின் ஒரே மாதம்
!
ஒருவர்
நாட்டை முன்னிறுத்தினார் – மற்றவர் தன்னை மட்டுமே
முன்னிறுத்தினார் !
ஒருவர்
இல்லறமின்றி வாழ்ந்தார் – மற்றவர் இல்லறத்துகாவே வாழ்ந்தார்
ஒருவர்
நாட்டுக்காக ஆண்டார் – மற்றவர்(தமிழ்)நாட்டை,
வீட்டுககாக ஆண்டார் !
ஒருவர்
உண்மை கவிஞர் – மற்றவர் பொய்மை கவிஞர்
!
ஒருவர்
தன் மொழியின் அழகை தன் கவிதைகளால்
அலங்கரித்தார் - மற்றவர் தன் மொழியின்
அழகை வைத்து வியாபாரமே செய்தவர்!
ஒருவர்
படிப்படியாக முன்னேறினார் – மற்றவர் படிகளில் தள்ளி
முன்னேறினார்!
ஒருவர்
பேசி பேசி தேசம் வளர்த்தார்
– மற்றவர் பேசியே ஊரை ஏய்த்தார்!
ஒருவர்
தன்னையே நாட்டிற்காக கொடுத்தார் – மற்றவர் நாட்டையே தனக்காக
கெடுத்தார் !
ஒருவர்
குடும்பமின்றி நாட்டிற்காக வாழ்ந்தார் – மற்றவர் நாட்டையே குடும்பத்துக்காக
வளைத்தார் !
ஒருவரை
என்ன கடிந்தாலுமே, மரியாதை குறையாது மாண்புடன்
பதில் தந்தவர்- மற்றவர் மாண்பு மிக்கவர்களையும்
மரியாதை குறைத்து பதில் தந்தவர் தந்தவர்!
ஒருவர்
வாரிசு அரசியலை எதிர்த்து இந்தியாவில்
போராடினார் - மற்றவர் வாரிசு அரசியலை
வைத்து இந்தியாவை எதிர்த்து போராடினார்!
ஒருவர்
அரசியலில் இருந்து அறிவியல் செய்தார்,
அணு குண்டு செய்தார் -மற்றவர்
அரசியல் செய்து அறிவியல் ரீதியாய்
ஊழல் அணுகுண்டுகள் செய்தார்!
முன்னவர்
வந்தே மாதரம் என்றார் - இவரோ வந்து ஏமாற்றுவோம்
என்றார்!
இருவரும்
சொன்னதை செய்தனர் - செய்ததை சொன்னார்கள்!
14 1/2 ஆண்டுகள் முன்பு நடந்த நிகழ்வு ஞாபகம் வருகிறது. 2004 அன்று
மோடி குஜராத்தில் முதலமைச்சர். ஜனவரி15 சென்னையில் துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில்
பங்கு கொண்ட பின்பு மறுநாள் முதல்வர் ஜெயாவுடன் அவர் இல்லத்தில் சந்திப்பு மற்றும்
மதிய உணவு. கிட்ட தட்ட ஆறு மணி நேரம் நடந்த சந்திப்புக்கு பிறகு மோடிஜி கிளம்பி காந்திநகர்
சென்றார். அன்று மாலை முரசொலியில் கருணாநிதியின் பதிவு- அதற்கு தலைப்பு: "பால்கனி
பாவையுடன் பகல் விருந்து". விரசம் மிகுந்த இந்த பதிவு பலரையும் அதிர்ச்சிக்கு
உள்ளாகியது. மோடிஜி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் கூறியது:"வளர்ப்புவிதம்
அவ்வாறு" என்று கூறி முற்று புள்ளி வைத்தார்.இப்படி ஒரு தலைவரை இனி இந்திய துணைக்கண்டம்
காண்பது அரிது.
Comments